ஜனவரி 15, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு
1 Sam 3:3b-10, 19
Ps 40:2, 4, 7-10
1 Cor 6:13c-15a, 17-20
John 1:35-42
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
முதல் சீடர்களை அழைத்தல்
35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள். 39 அவர் அவர்களிடம், ' வந்து பாருங்கள் 'என்றார். அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள். அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி. அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, 'நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய்' என்றார். 'கேபா' என்றால் 'பாறை' என்பது பொருள்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இராயப்பரிடம் இயேசு என்ன கேட்டாரோ, அதையே நம்மிடமும்: "'என்ன தேடுகிறீர்கள்?'" என்று கேட்கிறர். நீங்கள் ஜெபம் செய்யும் பொழுதும், சிலுவையை உற்று நோக்கும்பொழுதும், இயேசுவின் திரு உருவ படத்தை பார்க்கும்பொழுதும், நீங்கள் என்ன தேடுகிறீர்கள்?
இயேசு சொல்கிறார்: "வந்து பாருங்கள்!" , வந்து எதனை பார்ப்பது? அவரின் நோய் குணமாக்கும் ஆற்றல், நமது ஜெபத்திற்கான பதிலாக நமக்கு தரும் கொடைகளையா? தெய்வீக ஆற்றலையா? நாம் இதையெல்லாம் தேடுவது, நம்மிடம் இவை இல்லை என்பதலா ?
தந்தை கடவுள் கொடுத்த எல்லா வாக்குறுதிகளையும் இயேசு பூர்த்தி செய்பவராக இருந்தார். முழு அன்போடும், முழு இரக்கத்தோடும் , தெய்வீக குணமளிப்பவராகவும் , நமது ஜெபத்திற்கெல்லாம், தந்தையிடம் எடுத்து செல்பவராகவும், நமக்கு உண்மையாகவே தேவையான எல்லாவற்றிற்குமாக இயேசு இருக்கிறார். பிறகு ஏன் நமக்கு இன்னும் ஏதோ தேவையாக இருக்கிறது? ஏன் நமது வாழ்வு இன்னும் முழுமையாக இல்லை? ஏன் நமது ஜெபங்களுக்கு பதில் கிடைப்பதில்லை.?
இதற்கு எல்லாம் பதில், இராயப்பர், இயேசுவை பின் சென்ற பின் என்ன நடந்ததோ அதன் மூலம், நமக்கு கிடைக்கிறது. கடவுளின் அழைப்பிற்கு சாமுவேல் என்ன பதில் சொன்னாரோ : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்பது தான் பதில்.
இயேசுவின் தெய்வீக செயல்களை கண் முன்னே பார்க்கும் பாக்கியம் இராயப்பருக்கு கிடைத்தது. தாமாகவே கடவுளின் அன்பை , இயேசுவின் கண்கள் மூலம், இராயப்பர் அனுபவித்தார். இயேசுவின் குரலில் இரக்கத்தையும், இயேசுவின் சிரிப்பில் மன்னிப்பையும் இராயப்பர் உணர்ந்தார்.
இதெல்லாம் இருந்தும், இராயப்பர் என்ன தேடி வந்தாரோ, அதனை உண்மையாகவே கண்டு புடிக்க வில்லை. இராயப்பர் எப்படி குழப்பமாகவும், முடிவெடுக்க முடியாமலும் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இயேசு உயிரோடு இருந்த வரை இராயப்பர் இயேசுவின் முழுமையை முழுதாக உணரவில்லை. கிறிஸ்துவின் அழைப்பை முதல் திருச்சபைக்கு தலைமை ஏற்க இராயப்பர் இயேசு இறந்த பிறகு ஏற்று கொண்டார்.
இதே தான் நமக்கும், இயேசுவின் உண்மையான, கண்களையும், அவரது குரலையும், இன்னும் பார்க்காமால் இருந்தால், நாம் எதனை தேடுகிறோமோ, அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்பொழுது, நாம் அதனை கண்டுகொள்வோம். ஏன்? இவையெல்லாவற்றையும், நம்மொடு வைத்திருந்தோம், அதனை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது தான், நம்மிடம் இருப்பதை நாம் உணர்கிறோம். இது தான் தெய்வசெயலாக, : "இதோ! அடியேன், உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று கூறுகிறோம்.
© 2012 by Terry A. Modica
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment