Saturday, January 21, 2012

ஜனவரி 22, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 22, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் பொதுக்கால் 3ம் ஞாயிறு
Jonah 3:1-5,10
Ps 25:4-9
1 Cor 7:29-31
Mark 1:14-20

மாற்கு நற்செய்தி

2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15)
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.



முதல் சீடர்களை அழைத்தல்
(மத் 4:18 - 22; லூக் 5:1 - 11)
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.19 பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுதுமக சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களௌக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அல்ல,இப்பொழுதே உங்கள் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.
"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து உங்களுக்கு என்ன தேவையோ, அது இங்கே உங்கள் கைகளில் தயாராக இருக்கிறது.

"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்று கொண்டு, என்னை போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் அப்போஸ்தலர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு , முழு வாழ்வும் அவரோடு இனைந்து செயல்படவேண்டும்" என்பதே அவர்களுக்கு சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் சொல்லபடுகிறது: நமது சொந்த திட்டங்களை ஒரத்தில் வைத்து விட்டு , இயேசுவை அவர் எங்கு சென்றாலும், நாமும் பின் செல்ல வேண்டும்.
இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், விடுமுறைக்கு செல்லும்பொழுது கூட , நம் செல்போனில் நம் கம்பெனி ஆட்கள் கூப்பிட முடியும். எப்படியாவது, இது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க தெரிய வேண்டும். செல்போன் போன்ற சாதனங்களை ஒதுக்கி வைத்து விட்டு, இயேசுவோடு இனைந்திருக்க வேண்டும். இது நமது திருச்சபையின் சமூக நீதியாக நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது: ஞாயிறன்று, நாம் அலுவலக வேலைகளை வைத்து கொள்ள கூடாது. ஏன்? ஏனெனில், அந்த நாளில், இயேசுவோடு நாம் நேரம் செலவழித்து, நம்மையே புதுபித்து கொள்ள வேண்டும்.
துரதிஸ்டவசமாக, இயேசு நம் வீட்டிற்கு வந்து, நம் காலண்டரில் , "யேசுவோடு ஓய்வெடு" என்று எந்த தேதியிலும் குறித்து வைப்பதில்லை. அப்படி எழுதியிருந்தால், நாம் நன்றாக திட்டமிட்டு செயல்படுத்தலாம். கண நேரத்தில், இயேசு கொடுக்கும் குறிப்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வுலகில் இறையரசின் மோட்சத்தை நாம் அனுபவிக்க , நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவை பின் செல்ல நாம் கற்று கொள்ள வேண்டும். அவர் வழி நமக்கு ஆச்சரியபட வைத்தாலும், நாம் பின் செல்ல வேண்டும்.

© 2012 by Terry A. Modica

No comments: