Friday, May 11, 2012

மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மே 13, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 10:25-26, 34-35, 44-48
Ps 98:1-4
1 John 4:7-10
John 15:9-17

யோவான் (அருளப்பர்) நற்செய்தி
Description: http://arulvakku.com/images/pointmsg.jpg

Description: http://arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 15

9 என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.11 என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்.12 ' நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.13 தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.14 நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.15 இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன்.16 நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.17 நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.
(thanks to www.arulvakku.com)




உண்மையான கிறிஸ்தவ வாழ்வில் பணியாளானாக இருப்பது  ஒரு குறிக்கோளாகும். இதனை இறுதி உணவில் இயேசு இன்னும் அழுத்தமாக நமக்கு குறிப்பிட்டு சொன்னார்பணிவிடை பெறுவதற்கு அல்ல, பணி செய்யவே இவ்வுலகிற்கு வந்தேன். அதே போல் நாமும் ஒருவருக்கு ஒருவர் பணிவிடை செய்ய வேண்டும். இறையரசின் பணியாளராக கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களை நாம் அழைக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியிலோ, இயேசு நம்மை அவரின் நண்பர்களாக இருக்க அழைக்கிறார். அவரின் அடிமையாக அல்ல. அவரே மாற்றி பேசுகிறாரா?

அப்படி ஒன்றும் இல்லை! நண்பர்கள் ஒருவொருக்கு ஒருவர் மற்ற நண்பர்களுக்கு பணிவிடை செய்து கொள்வார்கள் ஏனெனில் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளனர். அடிமைகள் கடமைக்காகவும், தண்டனைக்கு பயந்தும் வேலை செய்வார்கள். இயேசு சொல்கிறார்: "எனது கட்டளைகளை கடைபிடித்தால், எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள்". இதனை நண்பனாக அல்லது அடிமையாக ஏற்று கொள்கிறீர்களா?
அடிமைகள், கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்காவிட்டால், என்ன ஆகுமோ என்று பயப்படுகிறார்கள். தன்னையே காத்து கொள்ள நினைக்கிறார்கள். ஆனால் நண்பர்களோ, மற்றவர்களை பற்றி அக்கறை கொண்டு, கடவுளின் கட்டளைகள் என்ன என்று தேடியும், அதன் மூலம் அன்பினால் பகிர்தலும், மற்றவர்களுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பாகவும் எடுத்து கொள்வார்கள்.

"இது என் கட்டளை: நான் உங்களை அன்பு செய்வது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்" என்று இயேசு கூறுகிறார். இது தான் எல்லா கட்டளைகளுக்கும் பெரிய கட்டளை; நட்பின் கட்டளை என்று நாம் சொல்லி கொள்ளலாம். மேலும் இயேசு: "நான் உங்களை எந்த அளவிற்கு அன்பு செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் நன்பரே: தந்தை கடவுள் எனக்கு என்ன சொல்கிறாரோ, அதை எல்லாவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்" என்று சொல்கிறார்அவரின் நண்பர்கள் இயேசு எதையெல்லாம் பகிர்ந்து கொள்கிறார் (நற்செய்தியின் மூலமாகவும் , திருச்சபையின் மூலமாகவும்) , அதன் மூலமாக அன்பை பகிர்ந்து கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஒவ்வொரு கட்டளையும் அன்பின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. திருச்சபையின் ஒவ்வொரு போதனையும் , எப்படி, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
நாம் கீழ்ப்படிய மறுக்கும்பொழுது, நாம் கடவுளின் அன்பை இழக்கிறோமோ? எப்பொழுதும் கிடையாது, அவரின் அன்பில் உள்ள இடத்தை இழக்கிறோமோ? ஆம். அவரின் கட்டளைகளை விட்டு நாம் வெளியே வாழ்கிறோம். அவர் நம்மை அன்பு செய்தாலும், நமக்கு அன்பு கிடைக்கவில்லையே என நாம் நினைக்கிறோம்.

இது தான் அடிமை தனம். தவறான நம்பிக்கைகளாழும், நமக்கு ஏற்பட்ட காயங்களாலும், பயத்தினாலும், நமக்கு முழுமையான அன்பு கிடைக்க வில்லை என நினைக்கிறோம்அதனால், கடவுளின் கட்டளைகள் நம்மை ஒரு எல்லைக்குள் வைப்பதாக நினைக்கிறோம், அதனை விட்டு வெளியே வரும்போது, அதனை எதிர்ப்பதாக ஆகிவிடும். அதனை எதிர்க்காதவர்கள், கடவுளின் அன்பை பெறுவதற்காகஅவரின் கட்டளைகளை ஏற்று கொண்டு, அவரின் அடிமையாக இருப்போம். நண்பர்கள், மாறாக, கடவுள் எப்பொழுதும் அன்பு செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு, அந்த அன்பில், ஒருவருக்கொருவர் அன்பு செய்து, மற்றவர்களுக்கு சந்தோசமாக சேவை செய்வார்கள்.

© 2012 by Terry A. Modica

No comments: