மே 20,
2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர்
7ம் ஞாயிறு
Acts
1:15-17, 20-26
Ps 103:1-2, 11-12, 19-20
1 John 4:11-16
John 17:11b-19
1 John 4:11-16
John 17:11b-19
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
|
|
அதிகாரம் 17 |
11 இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள்.
நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பது போல் அவர்களும் ஒன்றாய்
இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்.12 நான்
அவர்களோடு இருந்தபோது நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன்;
நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறும்
வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான்.13 '
இப்போது உம்மிடம் வருகிறேன். என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில்
இருக்கும்போதே இதைச் சொல்கிறேன்.14 உம்
வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன். நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல்,
அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது.15 அவர்களை
உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக்
காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.16 நான்
உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.17 உண்மையினால்
அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர்
என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள்
உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.
'
விசுவாசத்தில்
நம்மை எல்லாம் சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும்
ஒன்றாய் இனைப்பது எது? ஒரே கடவுளை,
இயேசு கிறிஸ்துவை யாரெல்லாம் அன்பு செய்து, அவரை
பின்செல்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றாய்
இருக்கிறார்கள்.
நம்மில்
பல வேற்றுமைகள் இருக்கலாம், ஆனாலும், ஒன்றாய் இருக்கிறோம். கடவுளுக்கு
சேவை செய்பவர்களுக்குள், கோவிலில் வேலை செய்பவர்களுக்கும் பல
வேறுபாடுகள் இருக்கலாம், ஆனலும் ஒற்றுமை இருக்கிறது.
கத்தோலிக்கர்களிடமிருந்து,
பிரிந்த புராடஸ்டன்டு கிறிஸ்தவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டு இருக்கலாம், இருந்தாலும், கிறிஸ்துவின் மேல் ஒரே நம்பிக்கையுடன்
நாம் இனைந்து இருக்கிறோம்
இயேசு இந்த ஒற்றுமைக்காக வேண்டிக்கொண்டார்,
இதனை தான் இன்றைய நற்செய்தியில்
நாம் பார்க்கிறோம். நாம் அவரின் வேண்டுதலை
நிறைவேற்றுகிறோமோ? அல்லது அதற்கு எதிரான
பாதையில் செல்கிறோமோ?
நம்மில்
என்ன வேறுபாடு இருந்தாலும், கடவுளில் ஒன்றாக இருப்பது எந்த
பாதிப்பையும் கொடுக்காது. நாம் கிறிஸ்துவை ஒன்றாக
ஆராதிப்பதில் இனைந்து இருக்கிறோம். ஆராதனை
வழிபாடுகள் வேறு மாதிரியாக இருக்கலாம்,
ஆனாலும், நாம் கிறிஸ்துவை கடவுளாக
ஏற்று கொள்கிறோம். எல்லோரிடமும், ஒரே எண்ணத்துடன் கடவுளை
வணங்குவது, நம்மில் பலருக்கு ஊக்கத்தையும்
கொடுக்கிறது. ஒரே உடலில் உள்ள
பல பாகங்களாய் இருக்கிறோம் , இருந்தும், ஒரு உறுப்புக்கு இன்னோரு
உறுப்பு தேவையாக இருக்கிறது என்பதை
நாம் ஏற்று கொள்ள வேண்டும்,
அதே போல், கிறிஸ்துவின் உடல்
இப்பூமியில் நன்றாக வளர நாம்
அனைவரும் ஒருவருக்கொருவர் இனைந்து செயல்பட வேண்டும்.
இயேசுவின்
ஒன்றாக இருப்பது, உலகில் மற்ற அனைத்திடமிருந்தும்
பிரிந்து இருக்கிறோம். இறையரசில் , நாம் ஒன்றாய் இருக்கிறோம்
அதனால், இவ்வுலகில் சாத்தானின் அரசிடமிருந்து வெளியே இருக்கிறோம். நமது
பாவங்களை கழுவி , நமது ஒற்றுமையை
இன்னும் உறுதியாக்க வேண்டும்.
இயேசு அவரது தந்தையிடம், " உம்
வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன்.
நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது
போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது."
என்று சொல்கிறார்.
எல்லோருமே,
எந்த கிறிஸ்தவ பிரிவுகளில் இருந்தாலும், கிறிஸ்துவின் பின்பற்றுபவர்களும், அவரை அன்பு செய்பவர்களும்,
இறைசேவை செய்பவர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்,
திருக்குடும்பத்தை சேர்ந்தவர்கள். சிலுவையின் ஒரே பக்கத்தில் நாம்
எல்லோருமே இருக்கிறோம், அது நித்திய வாழ்வையும்,
மீட்பையும் கொடுக்கும் சிலுவையாகும்.
எனினும்,
நாம் பாவத்தில் விழுந்தோமென்றால், இவ்வுலகம் நினைப்பது போல, நாமும் நினைத்து
மற்ற கிறிஸ்தவர்களை கண்டித்தும், நிந்தித்தும், பரிகாசம் பன்னியும் இருந்தோமானால், இறையரசின் அன்பிலிருந்தும், நமது சகோதர சகோதரிகளிடமிருந்தும்,
நாம் பிரிந்து செல்கிறோம். இயேசு வேண்டிகொண்ட ஒற்றுமையை
நாமே உடைக்கிறோம்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment