மே 27,
2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பரிசுத்த
ஆவியின் ஞாயிறு
Acts 2:1-11
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15
Ps 104:1, 24, 29-31, 34
1 Cor 12:3-7, 12-13 or Gal 5:16-25
John 20:19-23 or John 15:26-27; 16:12-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி
|
|
|
அதிகாரம் 20 |
||
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது
மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள்.
அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
' என்று வாழ்த்தினார்.20இவ்வாறு
சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால்
சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச்
சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள்
மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை
மன்னிக்கப்படா ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவின்
ஆவியான பரிசுத்த ஆவி நமக்கு தாராளமாக
கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் பரிசுத்தமாகவும்,
கிறிஸ்துவின் இறை சேவையை தொடர
முடியும். நாம்
தனியாக இயேசுவை போல ஆக
முடியாது. ஆனால், அவரின் ஆவி
நம்மில் வாழ்ந்தால், சுறுசுறுப்பாக அதன் வேலையை செய்தால்,
நாம் கிறிஸ்துவின் பரிசுத்தத்தை பெறுவோம், அவரின் விசுவாசம், எல்லையில்லாத
அன்பு, அமைதி, நம்பிக்கை, இடைவிடா
ஆற்றலும், மேலும் இயேசுவிடம் நாம்
கானும் அத்தனையும் நாம் பெறுவோம்.
பரிசுத்த
ஆவியை உங்கள் ஞானஸ்நாணத்தில் பெற்றீர்கள்.
உறுதி பூசுதலில், பரிசுத்த ஆவியின் ஆற்றலையும், இருப்பையும்
, இது நமக்கு உறுதி படுத்தபடுகிறது.
மேலும் பரிசுத்த ஆவியின் ஆற்றல் உங்களில்
அதிகபடுத்தப்படுகிறது. பெந்தகோஸ்தே நாளிலிருந்து, பரிசுத்த ஆவியை கடவுள் இவ்வுலகிற்கு
கொடுத்ததிலிருந்து, அவரின்
இறையரசிற்கு சேவை செய்பவர்கள் மூலமாக இவ்வுலகை
கடவுள் மாற்றுகிறார். அவரின் ஆவியை தாராளாமாக
அதிகமாகவே நமக்கு அள்ளி தந்து
, அவர் கேட்பதையெல்லாம் நாம் செய்து வெற்றி
பெற துணையாக இருக்கிறார்.
ஆனால் அவரின் பரிசுத்தமும், இறை
சேவையும், நாம் எவ்வளவு வெளியே
தருகிறோமோ அவ்வளவு தான் இவ்வுலகிற்கு
கிடைக்கும்.
என்னோடு
சேர்ந்து இந்த பரிசுத்த ஆவியின்
ஜெபத்தை சொல்லுங்கள்:
அன்பு இயேசுவே, பரிசுத்த ஆவியின் முழுமையும் என்னுள்
வர செய்யும், உமது பரிசுத்த ஆற்றலில்
என்னை வாழச் செய்யும், உமது
உண்மைகளை முழுதும் புரிந்து கொள்ள உதவி
செய்யும்.உங்கள் உண்மையை ஏற்று
கொள்ள எனது
இதயத்தை திறந்தருளும், நான் அந்த உணமையை
புரிந்து கொள்வதற்கு முன் என் இதயத்தை
திறந்தருளும்.
ஓ பரிசுத்த ஆவியே, மற்ற எல்லாவற்றையும்
அறிந்து கொள்வதை விட, இறையரசை
புரிந்து கொள்ள உதவும். உன்னோடு
என்னை இனைத்து , எதற்காக நான் அனுப்பபட்டேன்
என்பதை புரிந்து கொள்ள உதவும், மண
உறுதியையும், உடல் ஆற்றலையும் கொடுத்து
, என்னை இவ்வுலகில் இறையரசின் சேவை செய்ய உதவும்.
எனக்கு நீ மட்டுமே தேவை.
ஓ பரிசுத்த ஆவியே, எனது பாவத்தை
நினைத்து , அதற்காக உண்மையாக வருத்தபட்டு,
அதனை கழுவி நீக்கிட உதவி
செய்யும். எனது மன்னிப்பிற்காக நான்
வேதனை அடையும் பொழுது எனக்கு
ஆறுதலாக இருந்தருளும் , புதிய வாழ்விற்கு உமது
சந்தோசத்தை கொடுத்தருளும். இந்த புதிய மகிழ்ச்சியை
, இரக்கத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு துனை
புரியும்.
இயேசு அவர்களுக்கு கட்டளையிட்டார், " இவ்வுலகிற்கு சென்று நற்செய்தியை அறிவியுங்கள்"
என்னுடைய கொடைகளையும், திறமைகளையும் உபயோகித்து இவ்வுலகை
மாற்றுங்கள். எனக்கென்று எதை செய்ய வேண்டும்,
எதனை செய்ய கூடாது என்று ஒரு வரையரை
இருக்கிறது. என்னுடைய எண்ணங்களையும், முன்னுரிமைகளையும் , குறைகளையும் உங்களிடம் சரணடைய செய்கிறேன். உங்களுக்கு
உபயோகமாக இருக்கவே விரும்புகிறேன். நீங்கள் எங்கே அழைத்து
செல்கிறீர்களோ அங்கே செல்லவே விரும்புகிறேன்.
பரிசுத்த ஆவியே, இயேசு கிறிஸ்துவின்
பரிசுத்த , வெற்றியின் அன்பை இவ்வுலகிற்கு பரப்ப,
என்னை கொடைகளோடும், ஆற்றலோடும் அனுப்பி வையும்.!
பரிசுத்த
ஆவியே என்னில் வாரும், என்னை
புதுபித்தருளும். !ஆமென்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment