Thursday, October 25, 2012

அக்டோபர் 28, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



அக்டோபர் 28, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு


Jer 31:7-9
Ps 126:1-6
Heb 5:1-6
Mark 10:46-52


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
(மத் 20:29 - 34; லூக் 18:35 - 43)
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ' இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கத்தத் தொடங்கினார்.48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.49 இயேசு நின்று, ' அவரைக் கூப்பிடுங்கள் ' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ' துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ' என்றார்கள்.50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.51 இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.52 இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
(thanks to www.arulvakku.com)


இயேசு நம் வாழ்வை தொட்டு, காயங்களை குணமாக்கி , நம் வாழ்வை மாற்றி, அல்லது, நம் வாழ்வில் ஏதாவது ஒரு நல்ல மாறுதல் கொடுத்த பிறகு, நாம் என்ன செய்கிறோம்? தெய்வ கிருபையால் நம் வாழ்வு மாறியுள்ளது. புதிய வாய்ப்பினை முழுதுமாக எடுத்து கொண்டு அதனை உபயோகிக்கிறீர்களா ?
நாம் கண்டிப்பாக புதிய பாதையில் செல்ல வேண்டும் என்று கடவுள் நம்மை கட்டாயபடுத்துவதில்லை. கடவுளிடம் "என்னை குணமாக்கினால், தினமும் திருப்பலிக்கு செல்வேன் " என்று நாம் பேரம் பேசுவதை கூட அவர் ஒன்றும் குறை கூறியதில்லை.
பர்திமேயுவிடம் என்ன சொன்னாரோ அதையே தான், இயேசு நம்மிடமும் சொல்கிறார். ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்று அவரை குணமாக்கியபின் சொல்கிறார். "எங்கே செல்வது? "

சில நேரங்களில், அவருடைய கட்டளைகள் கொஞ்சம் விளக்கத்துடன் இருக்கும். சில நேரங்களில், அவர் சிலரை குண்மாக்கியபின்பு, "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று சொல்லியிருக்கிறார்ஆனால், எங்கே போவது?

நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானது. நாம் எங்கு சென்றாலும், என்ன செயல்கள் செய்தாலும், நமது எதிர்கால வாழ்வில் அது ஆசிர்வாதத்தை கொடுக்கிறதா? அல்லது அழிவை தருகிறதா? என்று நம்மால் சொல்ல முடியாது. இயேசு  நம் செயல்களின் பலன்களை குறைத்து ஒன்றும் மதிப்பிடவில்லை. அதற்கு பதிலாக நம் செயல்களுக்கு நாமே முழு பொறுப்பையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
பர்திமேயுவிடம் இயேசு "உன் வழியில் செல்" என்று சொல்கிறார். அந்த சுதந்திரத்துடன் பர்திமேயு என்ன செய்தார்? "இயேசுவை அவர் வழியில் பின் சென்றார்!" சரியான திசைக்கு  செல்வதில் பர்திமேயு தேர்ந்து கொண்டார். அவருடைய வாழ்வு எதிர்பாராத மாற்றமடைந்தது. அவருக்கு கண் பார்வை கிடைத்ததினால் அல்ல மாறாக, இயேசுவை பின் சென்று, அவருடைய வழிகாட்டுதலில் வாழ்ந்தார்.
கிறிஸ்து நமக்கு குணமளித்தோ அல்லது, உங்கள் வாழ்வை மாற்றிய பிறகு, நமக்கு பரிச்சயமான, மிகவும் சுலபமான, வாழ்வை மீண்டும் மீண்டும் எத்தனை தடவை நாம் திரும்பி சென்றிருக்கிறோம். நாம் இயேசுவை பின் சென்றோம் என்றால், புதிய வழியில் நம் வாழ்வை எடுத்து சென்று, புதிய இறைசேவையில்  ஈடுபட்டு, புதிய வேலைக்கு சென்று, புதிய நண்பர்களோடு இனைந்து, நாம் மாற வேண்டுமா? அடிக்கடி நம் பழைய வாழ்விற்கு சென்று விடுகிறோம். சுலபமான வாழ்க்கையை விட்டு வெளியே வர மிகவும் கடினம். நமது விசுவாசத்தில்நாம் உண்மையாக இருந்தால், இயேசுவை பின் செல்வது என்பது துனிகரமான வீர செயல் போல நமக்கு இருக்கும்.
இயேசுவை பின்செல்வதும், அவரிடமிருந்து கற்று கொள்வதுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை கிறிஸ்துவோடு நாம் இனையும் போது, நமது வாழ்வு மாற வேண்டும். திருப்பலியிலும் நாம் திவ்ய நற்கருணையோடு இணையும்போது, நம்மை மாற்றவேண்டும்.
© 2012 by Terry A. Modica


Friday, October 19, 2012

அக்டோபர் 21 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



அக்டோபர் 21  2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45 


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10
செபதேயுவின் மக்களது வேண்டுகோள்
(மத் 20:20 - 28)
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார். http://www.arulvakku.com/images/footnote.jpg
(thanks to www.arulvakku.com)

இறையரசில் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக மற்றவர்களின் தேவையை அறிந்து நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இதனால், நாம் நமது ஆசைகளை, கனவுகளை விட்டு தள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளுக்கு ஊழியனாய் இருப்பது ஒன்றும் அடிமையாக இருப்பதில்லை;இது நமக்கு கிடைத்த மரியாதை மற்றும் ஆசிர்வாதம்,ஏனெனில், இவ்வூழியம் கிறிஸ்துவின் இறைசேவையுடன் நம்மை இனைக்கிறது. கிறிஸ்துவை போல இறைசேவகனாக இருப்பது, தந்தை கடவுள் இயேசுவை எப்படி நடத்தினாரோ, அதே போல் தன் நம்மையும் நடத்துகிறார். கடவுள் நம்மை சிறுமைபடுத்த மாட்டார். அவமரியாதை செய்யமாட்டார், நமக்கு அதிக வேலையும் கொடுப்பதில்லை.
இதற்கு மாறாக இவ்வுலக சொத்துகளிலும், ஆசைகளிலும் நாம் கவனம் செலுத்தினால்,இவ்வுலகிற்கு நாம் அடிமையாவோம். இந்த அடிமைதனம், நம்மை சிறுமை ஆக்குகிறது. கடவுள் நமக்கு என்ன மதிப்பு கொடுத்தாரோ, அதைவிட நமது மதிப்பு இன்னும் நாமே குறைத்து கொள்கிறோம். கிறிஸ்து அவரைபோல நாம் மாற நமக்கு அதிகாரமும், ஆசிரும் கொடுத்துள்ளார்இறையரசின் எல்லா பலன்களையும் சந்தோசமாக கொண்டாடுங்கள். பரிசுத்த வாழ்வை வாழ  நாம் அழைக்கபட்டிருக்கிறோம். அதனால், பெரிய ஆளாக கடவுளின் கண்களுக்கு தெரிவோம்.

இந்த சுதந்திரத்தில், நமக்கு மிகவும் சந்தோசம் கிடைக்கிறது. கிறிஸ்துவின் வழி, மிகவும் கஷ்டமாக இருந்தாலும், சில நேரங்களில் சிலுவையை கூட சுமக்க வேண்டியிருக்கும், இருந்தாலும் நமக்கு மிகவும் சந்தோசமே. இந்த துயரங்கள் நம்மை இன்னும் பரிசுத்தமாக வாழ வைக்கிறது. மேலும், மோட்சத்தில் இன்னும் பெரிய ஆளாக இருப்போம். எது நமக்கு சாபமாக இருந்தோ, அதுவே ஆசிர்வாதமாக மாறிவிடுகிறது.
உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு அவர் ஜெபம் பன்னியும், இன்னும் பதில் கிடைக்கவில்லையாகடவுள் நம் மேல் அக்கறையில்லாமல் இல்லை என்று அர்த்தமில்லை. அவரால் உதவி செய்ய முடியாதென்றில்லை. அவர் உங்கள் ஜெபத்திற்கு மற்றோரு இறைசேவகர் மூலமாக கொடுக்கிறார். இயேசு மற்றவர்களுக்கு உங்கள் மூலமாக உதவி செய்கிறார்.
நாம் கடவுளடான உறவிற்கு தான் நாம் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலம், மற்றவர்களோடு கடவுள் கொடுக்க வேண்டியதை நமக்கு அளித்து , நம் மூலமாக அவர்களுக்கு கொடுக்க வைக்கிறார். நம்மில் இல்லாததை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. கடவுள் நமக்கு கொடுக்காமல், நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியாது, மேலும், கிறிஸ்துவின் ப்ரசன்னம் நம்மில் பெறாமல், நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவை கொடுக்க முடியாது.

© 2012 by Terry A. Modica


Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


அக்டோபர் 14, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(மத் 19:16 - 30; லூக் 18:18 - 30)
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது 'என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், ", ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே." என்று இயேசு அங்கே வந்த பணக்காரரை நோக்கி கேட்கிறார். இதில் இரண்டு வகை செய்தி இருக்கிறது.

முதலில், இயேசு மிகவும் நல்லவர் என்றும், அவரின் போதனைகள் நல்ல படிப்பினையை கொடுக்கிறது என்றும், அந்த இளைஞர் நம்பினார். மேலும், இயேசு செய்த அருஞ்செயல்களையும், பாவமில்லாத அவரின் வாழ்வையும் அந்த இளைஞர் பார்த்திருந்தால் , இயேசு நல்லவர் என்பதை அவர் நம்புவதற்கு ஆதாரமாக இருந்திருக்கும்.

இரண்டாவதாக, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, பணிவுடனும், தாழ்ச்சியுடனும் நடந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்தது. இயேசு சொன்னதை, அந்த இளைஞன் உண்மையாகவே நம்பினால், கடவுள் நல்லவர், அவரை விட  வேறு யாரும் நல்லவரில்லை, அதனால், கட்டளைகளை முழுதுமாக கடைபிடிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருப்பார். அந்த புரிதலின் மூலம், அவர் இதயம் திறந்து, அதற்கு பிறகு இயேசு சொன்னதையும், அதன் உண்மையையும், அந்த  இளைஞன் அறிந்திருக்க முடியும்.

இந்த உண்மை, உங்கள் இதயத்திற்கு என்ன விளைவை கொடுக்கிறது? இயேசு "கடவுளை போல உங்களை பரிசுத்தமாக வைத்திருக்கும் ஒரே செயல், இவ்வுலக சொத்துகளைவிட்டு, இறையரசின் சொத்துகளை கொண்டிருந்தால் மட்டுமே கடவுளை போல இருக்க முடியும் " என்று இயேசு கூறுகிறார்.
கடவுள் நம்மை ஒன்றும் , அனாதைகளாகவோ, ஒன்றும் இல்லாதவர்களாகவோ ஆக சொல்லவில்லை. நம்மிடம் உள்ளவற்றை கொடுக்க வேண்டும் என்பது, நாம் எதற்கும் ,கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், விருப்பத்துடன் உள்ளோம் என்பதும் ஆகும். நம்மிடம் இருக்கும் சொத்துக்கள், நமக்க் ஆசிர்வாதம் கொடுக்கபட்டிருக்கிறது. அதனை கொண்டு, நாம் சந்தோசமாக இருக்க கடவுள் விரும்புகிறார். ஆனால், கடவுள் கொடுத்த சொத்துகளை, அவரோடு இனைந்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் போது தான், உண்மையான சந்தோசம் நமக்கு வருகிறது.

கடவுள் நமக்கு கொடுத்ததை, மற்றவர்களோடு பகிர்ந்து கொளவது மிகவும் அற்புதமானது தான். இது மாதிரியான வாழ்வு தான் முழுமையான வாழ்வாக இருக்கும்இதுமாதிரி வாழ தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இவ்வுலக இன்பங்களோடு நாம் இனைந்தே இருந்தால், கடவுளிடமிருந்து நாம் விலகி செல்கிறோம். மேலும், நம்மிடமிருந்து பயன் பெற வேண்டியவர்களை புண்படுத்துகிறோம்.  ஆனால், நம்மோடு இனைந்துள்ள எல்லாவற்றையும் விட்டு விலக, நம் சொந்த முயற்சியைமட்டும் நம்பிகொண்டு இருக்க முடியாது. நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிரவும், அது மற்றவர்களுக்கு பயன்படும் வழியில் நடக்கவும், நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இயேசு நமக்கு 'தியாகம்' செய்வதை அவரது வாழ்வில் காட்டியிருக்கிறார். நம் பாவங்களுக்காக, சிலுவை மரணத்தை எடுத்து கொண்டும், பரிசுத்த ஆவியை நம்மோடு பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு எதிரான விசயங்களிலே, நம் உலக வாழ்வு இருக்கிறது. நம் வாழ்வு இதிலிருந்து விலகி இருந்தாலே, மோட்சத்தின் வெகுமதியை இங்கு பெறுவோம்.
© 2012 by Terry A. Modica

Friday, October 5, 2012

அக்டோபர் 7 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



அக்டோபர் 7 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16

மாற்கு நற்செய்தி

Description: http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 10
மண விலக்கு
(மத் 19:1 - 12)
.2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ' என்றார்.

சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13 - 15; லூக் 18:15 - 17)
13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ' சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
(thanks to www.arulvakku.com)


உங்களை அன்பு செய்யாதவர் ஒருவரிடம் நீங்கள் அன்புடன் நடந்து கொள்கிறீர்களா? கடவுளின் இயற்கையை தான்டிய அன்பு, நீங்கள் அன்பை காட்ட கஷ்டமாக கருதும்போது, உங்களுக்கு உதவியிருக்கிறதா? அதனை அனுபவித்திருக்கிறீர்களா?
திருமணம ஆனவர்கள் எல்லாம், நாம் எப்படி அன்பு செய்கிறோமோ, அதே போல, நம் துனைவரும் அன்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது இருவருக்கும் ஒத்து போக வேண்டிய விசயம் என்று நாமாக அனுமானித்து கொள்கிறோம்; நாம் எவ்வளவு அன்பு செய்கிறோமோ அதே போல தமது துனைவரும் அன்பு செய்வார் என்று அனுமானிக்கிறோம்.

எனினும், நிறைய திருமணங்கள்,மோசமான ப்ரச்னைக்கு தள்ளபடுகிறது, அதற்கு இயற்கையை விட அதிகமான, அன்பும், விடா முயற்சியும் தேவைபடுகிறது. அதனால் தான் நமது திருமண சடங்குகள் இறைவழிபாட்டோடு இனைந்துள்ளன, இதற்கு மாறாக ஒரு சமூக விழாவாக நாம் இதனை நடத்துவதில்லை. ஒவ்வொரு திருமணத்திற்கு கடவுளின் அருளும், ஆசியும், கிடைத்தால் தான், நமது திருமண பந்தம் இறுதி வரை நீடித்திருக்கும். இதனை கடவுள் ஒவ்வொரு திருமணத்திலும் நமக்கு அருளுகிறார்.
இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், மோசஸ் காலத்தில் விவாகரத்து அனுமதிக்கபட்டிருந்தை விளக்கி, , மனிதர்களிடம் மிகவும் கடினமான மணம் இருந்ததால்.அவ்வாறு கட்டளை இடப்பட்டிருந்தது எனவும், இது ஒன்றும் விவாகரத்திகான அனுமதி கிடையாது என்றும் கூறி, அவரை போல இளகிய மணம் கொண்டிருக்க வேண்டும்  என்று கூறுகிறார். அந்த மணம்அன்பு செய்ய என்றுமே  தடுத்ததில்லை.

மோசஸ் காலத்தில், ஒரு திருமணம் ப்ரச்னைக்குள்ளானால், பல ஆண்கள், அவர்களின் மனைவியை ஒதுக்கி தள்ளினர். ஆதி காலத்திலிருந்து, திருமணம் இறுதி வரை ஒன்றாய் , ஒருவன் ஒருவளோடு வாழ்வேண்டும் என்ற பழக்கம் இருந்தாலும், விவாகரத்து சட்டம் பெண்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது, அது அவர்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும். ஆனால், யார் வேண்டுமானாலும் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று அனுமதியை அது கொடுக்கவில்லை.

கடவுள் நம்மோடு கொண்டுள்ள விசுவாசமான இனைப்பை தான் திருமணம் ப்ரதிபலிக்க்றது. திருமணம் இறுதி வரை ஒன்றாக இருப்பது, கடவுள் நமக்கு தரும் அன்பளிப்பு ஆகும். திருமணத்தில், நிரந்தர இனைப்பு என்பதை நாம் நம்பாவிட்டால், எப்படி கடவுள் நம்மோடு எப்பொழுது அன்புடன் உள்ளார் என்பதை நம்புகிறீர்கள்? நாம் அந்த அன்பிற்கு தகுதியில்லாதவராக இருந்தால் கூட, அவர் என்றென்றும் நம்மை அன்பு செய்கிறார். நம் வாழ்வை பார்ப்பவர்கள் எப்படி நம்புவார்கள்?

சில நேரங்களில் நம்மை அன்பு செய்பவர்கள் நமக்காக கஷ்டப்படுவார்கள். நம் சிலுவை அவர்கள் தூக்கி கொள்வார்கள். திருமண அழைப்பும், ஒவ்வொரு தம்பதியினரையும், கிறிஸ்துவின் பாடுகளையும், தியாகத்தையும் நாம் ப்ரதிபலிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடவுள் நீங்கள் அவரோடு எப்பொழுது இனைந்திருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே கட்டளை இடவில்லை. அவரை விட்டு ஒதுங்கி சென்றாலும், நம்மை அவர் அன்பு செய்கிறார். அதேபோல, திருமணத்திலும் ஒருவர் அன்பு செய்யாமல் ஒதுங்கி சென்று விட்டாலும், மற்றவர் அவரை அன்பு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதே போல எந்த ஒரு கடவுளின் அனுகிரகத்தில் உண்டான நட்பிற்கும், குருவானவர்களிடேஉம், பங்கு மக்களுக்கும், அவர்கள் குழந்தைகளையும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்தல் வேண்டும்.
© 2012 by Terry A. Modica