அக்டோபர்
7 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்
27ம் ஞாயிறு
Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10 |
மண
விலக்கு
(மத் 19:1 - 12)
(மத் 19:1 - 12)
.2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன்
மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர்
அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட
கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச்
சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு
இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை
எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால்
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர்
அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும்
சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு
எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம்
செய்கிறாள் ' என்றார்.
சிறு
பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
(மத் 19:13 - 15; லூக் 18:15 - 17)
(மத் 19:13 - 15; லூக் 18:15 - 17)
13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச்
சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக்
கண்டு, கோபம் கொண்டு, '
சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி
இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்
என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை
அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
(thanks to www.arulvakku.com)
உங்களை
அன்பு செய்யாதவர் ஒருவரிடம் நீங்கள் அன்புடன் நடந்து
கொள்கிறீர்களா? கடவுளின் இயற்கையை தான்டிய அன்பு, நீங்கள்
அன்பை காட்ட கஷ்டமாக கருதும்போது,
உங்களுக்கு உதவியிருக்கிறதா? அதனை அனுபவித்திருக்கிறீர்களா?
திருமணம
ஆனவர்கள் எல்லாம், நாம் எப்படி அன்பு
செய்கிறோமோ, அதே போல, நம்
துனைவரும் அன்பு செய்ய வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோம். இது இருவருக்கும் ஒத்து
போக வேண்டிய விசயம் என்று
நாமாக அனுமானித்து கொள்கிறோம்; நாம் எவ்வளவு அன்பு
செய்கிறோமோ அதே போல தமது
துனைவரும் அன்பு செய்வார் என்று
அனுமானிக்கிறோம்.
எனினும்,
நிறைய திருமணங்கள்,மோசமான ப்ரச்னைக்கு தள்ளபடுகிறது,
அதற்கு இயற்கையை விட அதிகமான, அன்பும்,
விடா முயற்சியும் தேவைபடுகிறது. அதனால் தான் நமது
திருமண சடங்குகள் இறைவழிபாட்டோடு இனைந்துள்ளன, இதற்கு மாறாக ஒரு
சமூக விழாவாக நாம் இதனை
நடத்துவதில்லை. ஒவ்வொரு திருமணத்திற்கு கடவுளின்
அருளும், ஆசியும், கிடைத்தால் தான், நமது திருமண
பந்தம் இறுதி வரை நீடித்திருக்கும்.
இதனை கடவுள் ஒவ்வொரு திருமணத்திலும்
நமக்கு அருளுகிறார்.
இன்றைய
ஞாயிறின் நற்செய்தியில், மோசஸ் காலத்தில் விவாகரத்து
அனுமதிக்கபட்டிருந்தை விளக்கி, , மனிதர்களிடம் மிகவும் கடினமான மணம்
இருந்ததால்.அவ்வாறு கட்டளை இடப்பட்டிருந்தது
எனவும், இது ஒன்றும் விவாகரத்திகான
அனுமதி கிடையாது என்றும் கூறி, அவரை
போல இளகிய மணம் கொண்டிருக்க
வேண்டும் என்று
கூறுகிறார். அந்த மணம், அன்பு செய்ய என்றுமே தடுத்ததில்லை.
மோசஸ் காலத்தில், ஒரு திருமணம் ப்ரச்னைக்குள்ளானால்,
பல ஆண்கள், அவர்களின் மனைவியை
ஒதுக்கி தள்ளினர். ஆதி காலத்திலிருந்து, திருமணம்
இறுதி வரை ஒன்றாய் , ஒருவன்
ஒருவளோடு வாழ்வேண்டும் என்ற பழக்கம் இருந்தாலும்,
விவாகரத்து சட்டம் பெண்கள் மீண்டும்
திருமணம் செய்து கொள்ளலாம் என்று
கூறுகிறது, அது அவர்களுக்கு பாதுகாப்பை
கொடுக்கும். ஆனால், யார் வேண்டுமானாலும்
விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று
அனுமதியை அது கொடுக்கவில்லை.
கடவுள்
நம்மோடு கொண்டுள்ள விசுவாசமான இனைப்பை தான் திருமணம்
ப்ரதிபலிக்க்றது. திருமணம் இறுதி வரை ஒன்றாக
இருப்பது, கடவுள் நமக்கு தரும்
அன்பளிப்பு ஆகும். திருமணத்தில், நிரந்தர
இனைப்பு என்பதை நாம் நம்பாவிட்டால்,
எப்படி கடவுள் நம்மோடு எப்பொழுது
அன்புடன் உள்ளார் என்பதை நம்புகிறீர்கள்?
நாம் அந்த அன்பிற்கு தகுதியில்லாதவராக
இருந்தால் கூட, அவர் என்றென்றும்
நம்மை அன்பு செய்கிறார். நம்
வாழ்வை பார்ப்பவர்கள் எப்படி நம்புவார்கள்?
சில நேரங்களில் நம்மை அன்பு செய்பவர்கள்
நமக்காக கஷ்டப்படுவார்கள். நம் சிலுவை அவர்கள்
தூக்கி கொள்வார்கள். திருமண அழைப்பும், ஒவ்வொரு
தம்பதியினரையும், கிறிஸ்துவின் பாடுகளையும், தியாகத்தையும் நாம் ப்ரதிபலிக்க வேண்டும்
என்று கூறப்படுகிறது.
கடவுள்
நீங்கள் அவரோடு எப்பொழுது இனைந்திருக்க
வேண்டும் என்று எப்பொழுதுமே கட்டளை
இடவில்லை. அவரை விட்டு ஒதுங்கி
சென்றாலும், நம்மை அவர் அன்பு
செய்கிறார். அதேபோல, திருமணத்திலும் ஒருவர்
அன்பு செய்யாமல் ஒதுங்கி சென்று விட்டாலும்,
மற்றவர் அவரை அன்பு செய்ய
வேண்டும் என்று கூறுகிறார். இதே
போல எந்த ஒரு கடவுளின்
அனுகிரகத்தில் உண்டான நட்பிற்கும், குருவானவர்களிடேஉம்,
பங்கு மக்களுக்கும், அவர்கள் குழந்தைகளையும் ஒருவருக்கு
ஒருவர் அன்பு செய்தல் வேண்டும்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment