Friday, October 12, 2012

அக்டோபர் 14, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


அக்டோபர் 14, 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 28ம் ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10

இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(மத் 19:16 - 30; லூக் 18:18 - 30)
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது 'என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? ' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், ", ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே." என்று இயேசு அங்கே வந்த பணக்காரரை நோக்கி கேட்கிறார். இதில் இரண்டு வகை செய்தி இருக்கிறது.

முதலில், இயேசு மிகவும் நல்லவர் என்றும், அவரின் போதனைகள் நல்ல படிப்பினையை கொடுக்கிறது என்றும், அந்த இளைஞர் நம்பினார். மேலும், இயேசு செய்த அருஞ்செயல்களையும், பாவமில்லாத அவரின் வாழ்வையும் அந்த இளைஞர் பார்த்திருந்தால் , இயேசு நல்லவர் என்பதை அவர் நம்புவதற்கு ஆதாரமாக இருந்திருக்கும்.

இரண்டாவதாக, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, பணிவுடனும், தாழ்ச்சியுடனும் நடந்து கொள்ள ஒரு வாய்ப்பளித்தது. இயேசு சொன்னதை, அந்த இளைஞன் உண்மையாகவே நம்பினால், கடவுள் நல்லவர், அவரை விட  வேறு யாரும் நல்லவரில்லை, அதனால், கட்டளைகளை முழுதுமாக கடைபிடிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டிருப்பார். அந்த புரிதலின் மூலம், அவர் இதயம் திறந்து, அதற்கு பிறகு இயேசு சொன்னதையும், அதன் உண்மையையும், அந்த  இளைஞன் அறிந்திருக்க முடியும்.

இந்த உண்மை, உங்கள் இதயத்திற்கு என்ன விளைவை கொடுக்கிறது? இயேசு "கடவுளை போல உங்களை பரிசுத்தமாக வைத்திருக்கும் ஒரே செயல், இவ்வுலக சொத்துகளைவிட்டு, இறையரசின் சொத்துகளை கொண்டிருந்தால் மட்டுமே கடவுளை போல இருக்க முடியும் " என்று இயேசு கூறுகிறார்.
கடவுள் நம்மை ஒன்றும் , அனாதைகளாகவோ, ஒன்றும் இல்லாதவர்களாகவோ ஆக சொல்லவில்லை. நம்மிடம் உள்ளவற்றை கொடுக்க வேண்டும் என்பது, நாம் எதற்கும் ,கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், விருப்பத்துடன் உள்ளோம் என்பதும் ஆகும். நம்மிடம் இருக்கும் சொத்துக்கள், நமக்க் ஆசிர்வாதம் கொடுக்கபட்டிருக்கிறது. அதனை கொண்டு, நாம் சந்தோசமாக இருக்க கடவுள் விரும்புகிறார். ஆனால், கடவுள் கொடுத்த சொத்துகளை, அவரோடு இனைந்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் போது தான், உண்மையான சந்தோசம் நமக்கு வருகிறது.

கடவுள் நமக்கு கொடுத்ததை, மற்றவர்களோடு பகிர்ந்து கொளவது மிகவும் அற்புதமானது தான். இது மாதிரியான வாழ்வு தான் முழுமையான வாழ்வாக இருக்கும்இதுமாதிரி வாழ தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இவ்வுலக இன்பங்களோடு நாம் இனைந்தே இருந்தால், கடவுளிடமிருந்து நாம் விலகி செல்கிறோம். மேலும், நம்மிடமிருந்து பயன் பெற வேண்டியவர்களை புண்படுத்துகிறோம்.  ஆனால், நம்மோடு இனைந்துள்ள எல்லாவற்றையும் விட்டு விலக, நம் சொந்த முயற்சியைமட்டும் நம்பிகொண்டு இருக்க முடியாது. நம்மிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிரவும், அது மற்றவர்களுக்கு பயன்படும் வழியில் நடக்கவும், நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இயேசு நமக்கு 'தியாகம்' செய்வதை அவரது வாழ்வில் காட்டியிருக்கிறார். நம் பாவங்களுக்காக, சிலுவை மரணத்தை எடுத்து கொண்டும், பரிசுத்த ஆவியை நம்மோடு பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு எதிரான விசயங்களிலே, நம் உலக வாழ்வு இருக்கிறது. நம் வாழ்வு இதிலிருந்து விலகி இருந்தாலே, மோட்சத்தின் வெகுமதியை இங்கு பெறுவோம்.
© 2012 by Terry A. Modica

No comments: