Thursday, October 25, 2012

அக்டோபர் 28, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



அக்டோபர் 28, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு


Jer 31:7-9
Ps 126:1-6
Heb 5:1-6
Mark 10:46-52


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
(மத் 20:29 - 34; லூக் 18:35 - 43)
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ' இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கத்தத் தொடங்கினார்.48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.49 இயேசு நின்று, ' அவரைக் கூப்பிடுங்கள் ' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ' துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ' என்றார்கள்.50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.51 இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.52 இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
(thanks to www.arulvakku.com)


இயேசு நம் வாழ்வை தொட்டு, காயங்களை குணமாக்கி , நம் வாழ்வை மாற்றி, அல்லது, நம் வாழ்வில் ஏதாவது ஒரு நல்ல மாறுதல் கொடுத்த பிறகு, நாம் என்ன செய்கிறோம்? தெய்வ கிருபையால் நம் வாழ்வு மாறியுள்ளது. புதிய வாய்ப்பினை முழுதுமாக எடுத்து கொண்டு அதனை உபயோகிக்கிறீர்களா ?
நாம் கண்டிப்பாக புதிய பாதையில் செல்ல வேண்டும் என்று கடவுள் நம்மை கட்டாயபடுத்துவதில்லை. கடவுளிடம் "என்னை குணமாக்கினால், தினமும் திருப்பலிக்கு செல்வேன் " என்று நாம் பேரம் பேசுவதை கூட அவர் ஒன்றும் குறை கூறியதில்லை.
பர்திமேயுவிடம் என்ன சொன்னாரோ அதையே தான், இயேசு நம்மிடமும் சொல்கிறார். ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்று அவரை குணமாக்கியபின் சொல்கிறார். "எங்கே செல்வது? "

சில நேரங்களில், அவருடைய கட்டளைகள் கொஞ்சம் விளக்கத்துடன் இருக்கும். சில நேரங்களில், அவர் சிலரை குண்மாக்கியபின்பு, "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று சொல்லியிருக்கிறார்ஆனால், எங்கே போவது?

நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் முக்கியமானது. நாம் எங்கு சென்றாலும், என்ன செயல்கள் செய்தாலும், நமது எதிர்கால வாழ்வில் அது ஆசிர்வாதத்தை கொடுக்கிறதா? அல்லது அழிவை தருகிறதா? என்று நம்மால் சொல்ல முடியாது. இயேசு  நம் செயல்களின் பலன்களை குறைத்து ஒன்றும் மதிப்பிடவில்லை. அதற்கு பதிலாக நம் செயல்களுக்கு நாமே முழு பொறுப்பையும் எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.
பர்திமேயுவிடம் இயேசு "உன் வழியில் செல்" என்று சொல்கிறார். அந்த சுதந்திரத்துடன் பர்திமேயு என்ன செய்தார்? "இயேசுவை அவர் வழியில் பின் சென்றார்!" சரியான திசைக்கு  செல்வதில் பர்திமேயு தேர்ந்து கொண்டார். அவருடைய வாழ்வு எதிர்பாராத மாற்றமடைந்தது. அவருக்கு கண் பார்வை கிடைத்ததினால் அல்ல மாறாக, இயேசுவை பின் சென்று, அவருடைய வழிகாட்டுதலில் வாழ்ந்தார்.
கிறிஸ்து நமக்கு குணமளித்தோ அல்லது, உங்கள் வாழ்வை மாற்றிய பிறகு, நமக்கு பரிச்சயமான, மிகவும் சுலபமான, வாழ்வை மீண்டும் மீண்டும் எத்தனை தடவை நாம் திரும்பி சென்றிருக்கிறோம். நாம் இயேசுவை பின் சென்றோம் என்றால், புதிய வழியில் நம் வாழ்வை எடுத்து சென்று, புதிய இறைசேவையில்  ஈடுபட்டு, புதிய வேலைக்கு சென்று, புதிய நண்பர்களோடு இனைந்து, நாம் மாற வேண்டுமா? அடிக்கடி நம் பழைய வாழ்விற்கு சென்று விடுகிறோம். சுலபமான வாழ்க்கையை விட்டு வெளியே வர மிகவும் கடினம். நமது விசுவாசத்தில்நாம் உண்மையாக இருந்தால், இயேசுவை பின் செல்வது என்பது துனிகரமான வீர செயல் போல நமக்கு இருக்கும்.
இயேசுவை பின்செல்வதும், அவரிடமிருந்து கற்று கொள்வதுமே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை கிறிஸ்துவோடு நாம் இனையும் போது, நமது வாழ்வு மாற வேண்டும். திருப்பலியிலும் நாம் திவ்ய நற்கருணையோடு இணையும்போது, நம்மை மாற்றவேண்டும்.
© 2012 by Terry A. Modica


No comments: