Friday, October 19, 2012

அக்டோபர் 21 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



அக்டோபர் 21  2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45 


மாற்கு நற்செய்தி
அதிகாரம் 10
செபதேயுவின் மக்களது வேண்டுகோள்
(மத் 20:20 - 28)
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார். http://www.arulvakku.com/images/footnote.jpg
(thanks to www.arulvakku.com)

இறையரசில் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்று இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக மற்றவர்களின் தேவையை அறிந்து நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இதனால், நாம் நமது ஆசைகளை, கனவுகளை விட்டு தள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளுக்கு ஊழியனாய் இருப்பது ஒன்றும் அடிமையாக இருப்பதில்லை;இது நமக்கு கிடைத்த மரியாதை மற்றும் ஆசிர்வாதம்,ஏனெனில், இவ்வூழியம் கிறிஸ்துவின் இறைசேவையுடன் நம்மை இனைக்கிறது. கிறிஸ்துவை போல இறைசேவகனாக இருப்பது, தந்தை கடவுள் இயேசுவை எப்படி நடத்தினாரோ, அதே போல் தன் நம்மையும் நடத்துகிறார். கடவுள் நம்மை சிறுமைபடுத்த மாட்டார். அவமரியாதை செய்யமாட்டார், நமக்கு அதிக வேலையும் கொடுப்பதில்லை.
இதற்கு மாறாக இவ்வுலக சொத்துகளிலும், ஆசைகளிலும் நாம் கவனம் செலுத்தினால்,இவ்வுலகிற்கு நாம் அடிமையாவோம். இந்த அடிமைதனம், நம்மை சிறுமை ஆக்குகிறது. கடவுள் நமக்கு என்ன மதிப்பு கொடுத்தாரோ, அதைவிட நமது மதிப்பு இன்னும் நாமே குறைத்து கொள்கிறோம். கிறிஸ்து அவரைபோல நாம் மாற நமக்கு அதிகாரமும், ஆசிரும் கொடுத்துள்ளார்இறையரசின் எல்லா பலன்களையும் சந்தோசமாக கொண்டாடுங்கள். பரிசுத்த வாழ்வை வாழ  நாம் அழைக்கபட்டிருக்கிறோம். அதனால், பெரிய ஆளாக கடவுளின் கண்களுக்கு தெரிவோம்.

இந்த சுதந்திரத்தில், நமக்கு மிகவும் சந்தோசம் கிடைக்கிறது. கிறிஸ்துவின் வழி, மிகவும் கஷ்டமாக இருந்தாலும், சில நேரங்களில் சிலுவையை கூட சுமக்க வேண்டியிருக்கும், இருந்தாலும் நமக்கு மிகவும் சந்தோசமே. இந்த துயரங்கள் நம்மை இன்னும் பரிசுத்தமாக வாழ வைக்கிறது. மேலும், மோட்சத்தில் இன்னும் பெரிய ஆளாக இருப்போம். எது நமக்கு சாபமாக இருந்தோ, அதுவே ஆசிர்வாதமாக மாறிவிடுகிறது.
உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு அவர் ஜெபம் பன்னியும், இன்னும் பதில் கிடைக்கவில்லையாகடவுள் நம் மேல் அக்கறையில்லாமல் இல்லை என்று அர்த்தமில்லை. அவரால் உதவி செய்ய முடியாதென்றில்லை. அவர் உங்கள் ஜெபத்திற்கு மற்றோரு இறைசேவகர் மூலமாக கொடுக்கிறார். இயேசு மற்றவர்களுக்கு உங்கள் மூலமாக உதவி செய்கிறார்.
நாம் கடவுளடான உறவிற்கு தான் நாம் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலம், மற்றவர்களோடு கடவுள் கொடுக்க வேண்டியதை நமக்கு அளித்து , நம் மூலமாக அவர்களுக்கு கொடுக்க வைக்கிறார். நம்மில் இல்லாததை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. கடவுள் நமக்கு கொடுக்காமல், நாம் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடியாது, மேலும், கிறிஸ்துவின் ப்ரசன்னம் நம்மில் பெறாமல், நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவை கொடுக்க முடியாது.

© 2012 by Terry A. Modica


No comments: