டிசம்பர் 2,
2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால
முதல் ஞாயிறு
Jeremiah 33:14-16
Ps 25:4-5, 8-10, 14
1 Thessalonians 3:12-4:2
Luke 21:25-28, 34-36
Ps 25:4-5, 8-10, 14
1 Thessalonians 3:12-4:2
Luke 21:25-28, 34-36
புனித.லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:25-36
அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும்அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாதுகுழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள்அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத்தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்: ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது." இயேசு அவர்களுக்கு மேலும் ஓர் உவமைசொன்னார்: "அத்தி மரத்தையும் வேறு எந்த மரத்தையும் பாருங்கள். அவை தளிர்விடும் போது அதைப் பார்க்கும் நீங்களே கோடைக்காலம்நெருங்கிவிட்டது என அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும் போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதைநீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. " மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி,களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல்உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும்.ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும்விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்" என்றார்.
(thanks to arulvakku group)

இரண்டாம் வத்திக்கான்
சங்கம் துவங்கி 50வது வருட நினைவாக, போப் பெனடிக்ட் 16ம் அருளப்பர், நம்மையெல்லாம்
இவ்வருடம் விசுவாச வருடமாக கொண்டாட நம்மை கலந்து கொள்ள அழைக்கிறார். அதனால்,
இத்திருவருகை காலத்தில், நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்க இந்த கிறிஸ்துமஸ்
காலத்தில் இயேசுவிடம் வேண்டுவோம். இன்றைய கால கட்டத்தில், நம்மிடையே உள்ள பல
கஷ்டங்களின் மத்தியில், கிறிஸ்தவர்களாகிய நாம், விசுவாசம் தான், நமக்கு
நம்பிக்கையையும் வெற்றியையும் தருகிறது என்பதை உண்மையாக புரிந்து கொண்டுள்ளோம்.
கத்தோலிக்கர்கள்
அனைவரும், இன்றைய உலக தேவைகளை அறிந்து, திருப்பலிக்கு செல்வது, ஒரு அற்புதமான
நிகழ்வு என்று நாம் உணர்ந்திருக்கிறோம். ரொட்டியும் திராட்சை ரசமும், கிறிஸ்துவின்
உடலாகவும், இரத்தமாகவும் தெய்வீக அற்புதத்தால் மாறுகிறது என்பதை நாம்
அறிந்திருக்கிறோம். திவ்ய நற்கருணையில், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தால், நீங்கள்
மாறியிருக்கிறீர்களா? அப்படியென்றால், கோவிலை விட்டு வெளியே வந்த பின்பு, உங்களை
விசுவாசத்தின் சாட்சியாய் மற்றவர்கள் பார்த்திருப்பார்கள் தானே?
உண்மைகளை
தெரிந்து வைத்திருப்பதற்கும், அதன்படி வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள்
எந்த வேண்டுதலை இறைவனிடம் கேட்டு, இன்னும் கடவுள் கொடுப்பார் என்று
காத்திருக்கிறீர்கள்? அந்த வேண்டுதலை திருப்பலியில் இறைவனிடம் கொடுக்கும் பொழுது,
விசுவாசத்தால் வரும் நம்பிக்கையில் நிலைத்திருந்து வேண்டுகிறீர்களா? திவிய நற்கருணை ஆசிர்வதிக்கப்படும்பொழுது,
கடவுள் ரொட்டி துண்டுகளையும், திராட்சை இரசத்தையும், கிறிஸ்துவின் உடலாகவும்,
இரத்தமாகவும் மாற்றுகிறார் என்ற நம்பிக்கை நம்மிடம் இல்லையென்றால், திவிய நற்கருணை
மூலமாக இயேசு நமக்கு இறைசேவை செய்து வருகிறார் என்று நாம் விசுவாசம்
கொண்டிருக்கமாட்டோம்.
இன்றைய
நற்செய்த்யில், இயேசு அவரது இரண்டாவது வருகையை குறிப்பிடுகிறார். அதையே நாம் அனுதின
வாழ்வில் எடுத்து கொண்டால், நமக்கும் எதிர்காலத்தை பற்றி பயமும், என்ன நடக்க
போகிறதோ என்ற் எண்ணத்துடனும் நாம் இருக்கிறோம். அது தான் இவ்வுலக வாழ்வாகும்.
இயேசு அதற்காக நமக்கு உதவி செய்ய ஆசைபடுகிறார். இதனை நாம் விசுவசித்தால், நமக்கு வெற்றியும் நம்பிக்கையும் வரும்.
எனினும்,
நாம் நமது ப்ரஸ்னையையே நினைத்து கொண்டு, கிறிஸ்துவை பாராமல் இருந்துவிட்டால், நாம்
விசுவாசத்தில் வாழ்வதில்லை. நமது இருதயம் தெய்வீக தேடலில் மங்கி விடுவதை இயேசு
கவனத்தில் கொண்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறார். கிறிஸ்துவை சுற்றியே இருக்க
வேண்டியதை நாம் மறந்து விடுகிறோம். பரிசுத்த ஆவியின் ஆலோசனையை கேட்க நாம்
தவிர்த்துவிடுகிறோம். ஆனால் இயேசுவிடம் நம் வாழ்வை விசுவாச வாழ்க்கையாக
மாற்றியமைக்க வேண்டினால், நமது வாழ்வு விழிப்புடனும், ஆர்வத்துடனும், கடவுளை
நம்பினால், நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவர் உதவி செய்வார் என்று இருப்போம்.
நமது
ப்ரச்னைகள் நம்மை பயம் கொண்டவராக செய்கிறது. இயேசுவின் நம்பிக்கை கொள்ளவும்,
பயத்தை விட்டொழிந்து மகிழ்ச்சியில் வாழவும், விசுவாசம் நமக்கு வழியாக இருக்கிறது.
தெய்வீக வாழ்வில் சோம்பலாயிருப்பது, நமது வாழ்வில் மிகவும் சோர்வை ஏற்படுத்தும்.
© 2012 by Terry A. Modica