நவம்பர் 4,
2012 ஞாயிறு நற்செய்தி மற்றும் மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Deut 6:2-6
Ps 18:2-4, 47, 51 Heb 7:23-28 Mark 12:28b-34
மாற்கு நற்செய்தி
அதிகாரம் 12 |
முதன்மையான
கட்டளை
(மத் 22:34 - 40; லூக் 10:25 - 28)
(மத் 22:34 - 40; லூக் 10:25 - 28)
28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு
அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு
இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம்
ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும்
முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது
நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் கட்டளை வேறு எதுவும் இல்லை 'என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம்,
' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர்
கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு
ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு
செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர்
அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை 'என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
இன்றைய நற்செய்தியில், இயேசு இரண்டு பெரிய கட்டளைகளை நமக்கு நினைவுபடுத்துகிறார்.
ஹீப்ருவின் வாசகத்திலிருந்த்து மேற்கோள் காட்டி நமக்கு கூறுகிறார். இதனை தான் நாம்
முதல் வாசகத்தில் படிக்கிறோம். இரண்டாவது வாசகமோ, புதிய ஏற்பாட்டில் ஹீப்ருவிற்கு எழுதிய
கடிதத்திலிருந்த்து , அன்பு தான் முக்கிய கட்டளை, மற்ற கட்டளைகள் எல்லாம், அன்பிற்கு
பிறகு தான், அன்பிற்கு தான் முன்னுரிமை. அன்பு தான் மேலான கட்டளை என இரண்டாவது வாசகம்
கூறுகிறது. முழுமையாக நம்மை அன்பு செய்த இயேசு,
எந்த பாவமும் செய்யாத இயேசு, நமது பாவங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார். அதனால், அவரை
பின்பற்றி மோட்சத்திற்கு செல்ல ஆசைபடும் நாம், இயேசுவின் அன்பின் காலடியில் நமது காலை
எடுத்து வைத்து, கடவுளையும் மற்றவரையும், முழு உள்ளத்தோடும் அன்பு செய்வோம்.
நமது அன்பு, குறையுள்ளதாய்
இருந்தாலும், நாம் பாவம் செய்கிறோம். அதற்கு சரியான தண்டனை அன்பு மட்டுமே. நமது பாவத்தால்,
ப்ரச்சினைக்கு உண்டானவர்களிடம் நாம் தியாகத்தை காட்டினால், அதுவே நமது பாவத்தின் தண்டணையாக
நாம் ஏற்கிறோம். ஆனால், நாம் அவர்களுக்கு செய்த தீமையால், அதன் விளைவுகளை நம் பார்வையை
தாண்டி சென்று விட்டது. கத்தோலிக்க திருச்சபையில்,
பாவசங்கீர்த்தனம் மூலமாக நாம் பாவமன்னிப்பு பெறுகிறோம். பாவசங்கீர்த்தனத்தில், இயேசு
குருவானவர் மூலமாக அமர்ந்து நமது பாவமன்னிப்பை ஏற்று, நமது பாவங்களை கழுவுகிறார். குருவானவர்
மூலமாக இந்த திருச்சபை நம் பாவங்களை , பாவ
தண்டனை மூலமாக , இவ்வுலகில் நாம் ஏற்படுத்திய பாதிப்பிற்கு மன்னிப்பு வழங்குகிறது.
பாவ தண்டனை ஒன்றும்
அன்பினால் ஆன வழி மட்டும் இல்லை, மேலும், நம்மை இன்னும் உறுதியாக்கி, இனிமேலும் பாவம்
செய்யாமலும், அன்பை தொடர்வதற்கும் சக்தி அளிக்கிறது. குருவானவர் நமக்கு சுலபமான தண்டனை கொடுத்தாலும்,
(எ.கா மூன்று அருள் நிறைந்த மரியே) , நீங்கள் உண்மையாகவே பரிசுத்தமாக விரும்பினால்,
அருள் நிறைந்த மரியே ஜெபம் சொல்லும்பொழுது, மிகவும் கடினமான அன்பு செய்யும் தண்டனையை
ஆண்டவரிடம் நாம் கேட்க வேண்டும். அன்பின் கடவுளை நாம் முழுதும் ஏற்று, நாம் தியாகம்
செய்ய தயாராக வேண்டும். முழு மனதுடனும், ஆன்மாவோடும், கடவுளையும் மற்றவர்களையும் அன்பு
செய்ய தயாராக இருக்க வேண்டும். புனித அந்தோணிமேரி க்ளாரட் “ கிறிஸ்துவின் அன்பு நம்மை
உற்சாகம் ஏற்பட செய்கிறது, பரிசுத்த வாழ்வின் சந்தோசத்தில், நாம் பறப்பதற்கும்,ஓடி
ஓடி அன்பு செய்யவும் “ நம்மை தள்ளுகிறது. உங்கள் அன்பு எவ்வளவு உயரம் பறக்கிறது.? உங்கள்
பெரும் உற்சாகம் தான் நீங்கள் கடவுளை எவ்வளவு அன்பு செய்கிறீர்கள் என்பதன் அளவாகும்.
© 2012 by Terry A. Modica
No comments:
Post a Comment