Saturday, November 24, 2012

நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை


நவம்பர் 25, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 34ம் ஞாயிறு
Dan 7:13-14
Ps 93:1-2, 5
Rev 1:5-8
John 18:33b-37

நற்செய்தி வாசகம்

அக்காலத்தில் பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், ``நீ யூதரின் அரசனா?'' என்று கேட்டான். இயேசு மறுமொழியாக, ``நீராக இதைக் கேட்கிறீராஅல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?''என்று கேட்டார்.
அதற்குப் பிலாத்து, ``நான் ஒரு யூதனாஎன்னஉன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?''என்று கேட்டான்.
இயேசு மறுமொழியாக, ``எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல'' என்றார்.
பிலாத்து அவரிடம், ``அப்படியானால் நீ அரசன்தானோ?'' என்று கேட்டான்.
அதற்கு இயேசு, ``அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்'' என்றார்.

இன்றைய வாசகத்தில், கிறிஸ்து அரசனா என்ற கேள்வி எழும்பியபொழுது, இயேசு அதனை விண்ணகத்தின் அரசனாகவும், அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளுமாறு நம்மை எல்லாம் வேறு பாதைக்கு அழைத்து சென்று விட்டார். மேலும் “. உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” என்றும் கூறுகிறார். அவர் ஒன்றும் ஒரு நாட்டிற்கோ அல்லது உலகத்திற்கோ அரசனில்லை; அவர் உண்மையின் அரசர், உண்மையை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்.

இந்த உண்மைகளையெல்லாம், நாம் முழுமையாக அறிந்து கொள்வதற்கு, இயேசு நமக்கு ஆசிரியாக இல்லாமலும், உண்மையை நமக்கு விளக்கமாக சொல்லாததாலும், நாம் சாத்தானின் ஆளுகைக்கு உள்ளான இவ்வுலக வாழ்வில் , நாமாக தப்பிதமாக அர்த்தத்தை புரிந்து கொண்டு, நாமாக ஒரு அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். சாத்தான் ஆளும் இவ்வுலகில் உண்மை மட்டும் மாற்றாக நெய்யபட்டிருக்கிறது. இது உண்மையில்லை. நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசு இவ்வுலகிற்கு வந்து சாத்தானை ஒழித்து அவர் படைத்தது அனைத்தையும் விண்ணக அரசின் ராஜ்ஜியத்திற்கு கொண்டுவந்தார். கிறிஸ்துவை அரசனாக ஏற்று கொள்வபவர்கள், அவருடைய குரலை கேட்டு , உண்மையில் வாழ்கிறார்கள்.

சூழ் நிலையின் உண்மையை அறியாமல், நாம் பாவம் செய்கிறோம். நமது வாழ்வின் முழுமையாக யேசு இன்னும் அரசராகவில்லை.

உதாரணத்திற்கு, உங்களை ஒருவர் ஏதாவது கேட்டு, அதனை உங்களால் கொடுக்க முடியாமல் போனால், எடுத்து காட்டாக , கோவில் கட்ட பொருளாதார தேவை  என்றோ அல்லது பக்கத்து விட்டு நோயாளியாக இருக்கட்டும், அல்லது நம்மோடு வேலை செய்பவர்கள் உங்களை விட விசுவாசம் குறைவாக இருந்தால், அல்லது வயதான பெற்றோர்கள் உங்கள் உதவி தேவைக்காக காத்திருப்பவர்கள்.


உங்களால் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களோடு சொந்த வேலைகளிலே நீங்கள் சோர்வாகி, மற்ற வேலைகள் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா? இது நமது உடல் சார்ந்த ஒரு முடிவாகும். நாம் செய்யும் இந்த வேலைகளை விட்டுவிட்டு நாம் வேறு வேலை செய்தால், நாம் வாழ்வை அனுபவிக்க முடியாது என்று நம் உடல் கூறுகிறது. இது தான் உண்மையை மறைப்பது ஆகும். நாம் நமது தேவைகளை மட்டும் பார்த்து கொண்டு, மற்றவர்களின் வேலைகளை செய்யாமல் இருந்தால், நாம் சந்தோசமாக இருப்போம் என்று நாமாக நினைத்து கொள்கிறோம்.

நிஜத்தில், இயேசுவின் குரலை கேட்டால்,  நாம் சந்தோசமாக நமது வாழ்க்கை முறை அமைந்துவிடும். இயேசுவே “சமாரியனாக இருங்கள் , மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறுகிறார். நாம் அவரின் போதனைகளை கேட்டு, அவரை விசுவசித்து , வாழ்ந்தோமானால், நமக்கு மிகவும் சந்தோசமாக வாழ்க்கை இருக்கும். அவர் சொல்வதில் கொஞ்சம் புரிந்தால் கூட போதும்.

கடவுளின் விருப்பம் எதுவோ அதனை செய்து கொண்டு வந்தால், இன்னும் அதிகமாக நாம் அவரை புரிந்து கொள்வோம். நாம் செய்த இறைசேவையால் வரும் சந்தோசத்தில் , நமது மகிழ்ச்சி இன்னும் அதிகமாகும். நாம் பாவம் செய்யும்போது, நல்ல செயல்கள் செய்வதால் வரும் பயனை நாம் புரிந்து கொள்ளாததால் நாம் பாவம் செய்கிறோம். கிறிஸ்துவின் அரசாட்சியில் , பரிசுத்த ஆவியின் ஞானத்தாலும், அவருடைய உதவியாலும், நாம் பாவ வாழ்விலிருந்து சுதந்திரம் அடைவோம்.

© 2012 by Terry A. Modica

No comments: