Friday, November 16, 2012

நவம்பர் 18 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



நவம்பர் 18 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு

Dan 12:1-3
Ps 16:5, 8-11
Heb 10:11-14, 18
Mark 13:24-32

நற்செய்தி வாசகம்
நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32
அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பிஅவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா. ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாதுவிண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.
 (thanks to www.arulvakku.com)

உங்களுக்குள் தீர்க்க முடியாத ப்ரச்சினை ஏதாவது உள்ளதா? கிறிஸ்து எங்கே போனார்? இன்றைய நற்செய்தியில் இயேசு அவரது இரண்டாவது வருகையை பற்றி சொல்கிறார். ஆனால், அவரின் முதல் வருகையையே இன்னும் இங்கு முடிக்கவில்லை. சீடர்களுக்கு இது எவ்வளவு குழப்பத்தை கொடுத்திருக்கும்.

இயேசு இறந்த பின்பு, சீடர்கள் இன்னும் குழ்ப்பமடைந்தனர். அவர் உயிர்த்தெழுந்து , விண்ணகத்திற்கு எழுந்து சென்று, இரண்டாவது முறை வருவதை காலம் தாழ்த்தியதால், இன்னும் அவர்கள் குழப்பமடைந்தனர். இயேசு , ‘இந்த தலைமுறை’ நாம் வரும்வரை இவ்வுலகை விட்டு மறைய மாட்டார்கள் என்று சொன்னதை நினைவில் வைத்திருந்தனர். இருந்தும், அப்போஸ்தலர்கள் ஒவ்வொருவராக இறக்க ஆரம்பித்தனர். இன்னும் இயேசு மேக கூட்டங்களிலிருந்து வரவில்லை. இந்த சோக வாழ்வு இன்னும் இவ்வுலகில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.


உங்களில் முடிவிற்கு வராத ப்ரச்சினை எடுத்து கொண்டால், இயேசு உடனே இவ்வுலகில் இரண்டாவது முறை வந்து இவ்வுலகில் உள்ள எல்லா தீமைகளையும் களைந்துவிட வேண்டும், என்ற ஆவல் உங்களில் உண்டா? இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். “அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” ஆனால், அவர் எந்த தேதியையும் கொடுக்கவில்லை. அவருடைய சீடர்களுக்கும் கொடுக்கவில்லை, நமக்கும் கொடுக்கவில்லை.  ஒரு அடையாளத்தையும் கூட கொடுக்கவில்லை. “அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாதுவிண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.” இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

அவர் அருகில் இருக்கிறார்!
கடந்த 2000 வருடங்களாக, நாம் இந்த ‘தலைமுறையில்’ தான் இருக்கிறோம், அவர் இரண்டாவது வருகையை தாண்டி தான் நாம் இவ்வுலகை விட்டு செல்வோம். கிறிஸ்து மனிதனாக பிறந்த தலைமுறையில் தான் நாமும் இருக்கிறோம். கிறிஸ்து இவ்வுலக திருச்சபையில் இருந்த திருச்சபையில் தான் நாமும் ஒரு அங்கமாக இருக்கிறோம். தந்தை கடவுளால் தத்தெடுக்கபட்டு , அவருடைய ஒரே மகனால், அவருடைய தியாகத்தால், மீட்கப்பட்ட தலைமுறையில் நாம் இருக்கிறோம்.

கடவுளின் பாவ மீட்பு முதல் ஈஸ்டர் ஞாயிறன்று ஆரம்பித்தது. அந்த “கடைசி நாட்கள்” கிறிஸ்து மீண்டும் வரும்வரை தொடரும். இது பரிசுத்த ஆவியின் காலமாகும். கிறிஸ்துவின் முதல் இறைசேவை தொடர்ந்து,  பரிசுத்த ஆவியின் ஆற்றலால் நாம் இவ்வுலகில் தொடர்கிறோம்.

உங்களின் அடுத்த செயலுக்காக, மோட்சத்திற்கு செல்ல உங்கள் அடுத்த ஸ்டெப்பிற்காக இயேசு கதவின் வாயிலில் காத்திருக்கிறார், கதவை திறந்து தான், நாம் அதன் வழியே செல்ல முடியும். இயேசு உங்களுக்கு இப்போதே கதவை திறக்கிறார். பரிசுத்த வாழ்வின் கதவை, அன்பின் கதவை திறக்கிறார். உங்களுக்காக அவர் வகுத்த வாழ்க்கையை , இறைசேவையை முழுதுமாக வாழ அந்த கதவில் நுழையுங்கள்.
© 2012 by Terry A. Modica

No comments: