Friday, November 9, 2012

நவம்பர் 11 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


நவம்பர் 11 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 32ம் ஞாயிறு
1 Kgs 17:10-16
Ps 146:7-10 (with 1b)
Heb 9:24-28
Mk 12:38-44

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 12

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை
(மத் 23:1 - 36; லூக் 20:45 - 47)
38 இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, ' மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்;39 தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்;40 கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே ' என்று கூறினார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை
(லூக் 21:1 - 4)
41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர்.42 அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, ' இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.44 ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார் ' என்று அவர்களிடம் கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவை பின் செல்வதற்கு, மிக ஆழ்ந்த விசுவாசம் வேண்டும், ஏனெனில் அடிக்கடி நம்மை எதிர்பார்க்காத இடத்திற்கு அழைத்து செல்கிறார், அங்கே புது வாழ்விற்கு நாம் தயாராக வேண்டும்,  நமக்கு சுலபமான வாழ்வியல் சூழ் நிலையை விட்டு அதன் எல்லையை தாண்டி நாம் செல்ல வேண்டும்.

இன்றைய ஞாயிறின் முதல் வாசகத்திலும், நற்செய்தியிலும் வரும் இரண்டு விதவைகளை பாருங்கள். அவர்களிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தால், திரும்ப சம்பாதிக்க மிகவும் கடினம் என்று  அவர்களின் சாதாரண அறிவிற்கு ஏன் எட்டவில்லை? கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்பது கண்டிப்பாக அவர்களுக்கு தெரியுமா? இல்லை, கடவுள் மேல் உள்ள அன்பினாலும், அசாத்திய நம்பிக்கையாலும், அவர்களிடமிருந்த அனைத்தையும் கொடுத்தனர்.

விசுவாசம் நியாயமான அன்பின் வெளிப்பாடு – கடவுளாக ஒருவரை நாம் தெரிந்தெடுத்து, அவரை அன்பு செய்கிறோம். நாம் கடவுளை நம்பி , நமது கஷ்டத்தை போக்க அவரிடம் வேண்டினால், நாம் மற்றவர்களை தாரளமாகவும், சந்தோசத்துடனும் அன்பு செய்ய முடியும் . எவ்வித நிபந்தனையும் இன்றி, நாம் சுதந்திரமாக மற்றவர்களோடு அன்புடன் இருப்பது , நாம் அவர்களோடு கொண்டுள்ள பாதுகாப்பினால் அல்ல, நாம் கடவுளோடு பாதுகாப்பில் இருக்கிறோம். அதனால் தான் நாம் மற்றவர்களோடு அன்புடன் இருக்க முடிகிறது.

அந்த விதவைகள் அவர்களால் இழக்க கூடாததை, கடவுளுக்கு கொடுத்தனர். நமக்கு ஏமாற்றத்தையும், துக்கத்தையும் , நிராகரிப்பையும் கொடுத்தவர்களை நம்மால் அன்பு செய்ய முடியாது. இருந்தாலும், இயேசு நம்மை  நோக்கி, அவர்களையும் அன்பு செய்து , மன்னித்து அன்பு செய்ய வேண்டும் என்றும், கூறுகிறார்.

சிலரை அன்பு செய்ய கடினமாக இருக்கும், அவர்களை சுற்றி ஒரு வளையத்தை வைத்திருப்பார்கள், அதனை தாண்டி செல்லவே மிகவும் கடினமாக இருக்கும். இயேசு என்ன சொன்னார் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பெரிய வெள்ளி அன்று வரை , அவரை கேலி பேசியவர்களிடமிருந்தும், குற்றம் சாட்டியவர்களிடமிருந்த்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆனால் அவர்களின் தொடர்பை விடவில்லை. திருந்த மாட்டார்கள் என்று ஒதுங்கி போகவில்லை. அவர்களை அன்பு செய்வதை நிறுத்தி விட்டாரா? கண்டிப்பாக இல்ல. இயேசுவை பின் செல்வது, கடவுளின் சரியான நேரத்திற்கு கவனமாக காத்திருந்து அந்த நேரத்தில் அவர்களை அனுகி கடவுளின் அன்பை பகிர்ந்து அவர்களோடு இனிய முகத்துடன் பேசவேண்டும், மாறாக, அவர்களை விட்டு ஒதுங்கி செல்ல கூடாது.
சில நேரங்களில், அவர்களின் கடினமான மனதின் காரணமாக, அவர்கள் விதைத்ததை, அவர்களே அறுவடை செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதும் ஒரு வகையில் நல்லதாகவே அமையும். ஏனெனில், அவர்களுக்கு அது நல்ல புரிதலை கொடுத்து, அவர்கள் மணம் மாற உதவும். அவர்கள் அதில் கஷ்டப்பட விட வேண்டும். கடவுள் நம் குறைகளை நாம் மணம் திருந்துவதற்கு முன் சுத்தம் செய்கிறாறா? என்று சிந்தித்து பாருங்கள். இயல்பாக நாம் மணம் திருந்திய பின் நமது குறைகளை நீக்க/சுத்தம் செய்ய முற்படுவதில்லை. வேறு யாராவது அழிவிலிருந்து காக்க முனையும்போது, நாம் அதிலிருந்து என்ன கற்று கொள்கிறோம்?  மற்றவர்களை அன்பு செய்வது என்பது, நாம் நம்மையே தியாக செய்து கடவுள் மேல் முழு பாரத்தையும் போட்டு, அவர் நம் காயங்களை குணப்படுத்தவும்,  நம்மை மீண்டும் புதுபிக்கவும், ஆசிர்வதிக்கவும் இறைவனிடம் நாம் வேண்டவேண்டும்.  மற்றவர்களுக்காக நம்மிலிருந்து வெளியே செல்லும் எதுவும் காலியாக இருப்பதில்லை. கடவுள் அதனை நிரப்பி கொண்டே இருப்பார்.

© 2012 by Terry A. Modica

No comments: