Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



டிசம்பர் 23, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 44434நான்காம்  ஞாயிறு
Micah 5:1-4
Ps 80:2-3, 15-16, 18-19
Hebrews 10:5-10
Luke 1:39-45

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-45

அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார்அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்துஎலிசபெத்தை வாழ்த்தினார்மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்அப்போது எலிசபெத்து உரத்த குரலில்பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்உம்வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதேஎன் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என்வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்றுஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்''என்றார்.

(thanks to www.arulvakku.com and arulvakku google group)
திருவருகை கால நான்காவது வாரமான இன்று, எலிசபெத்தும், அவருடைய வயிற்றில் உள்ள குழந்தை ஜானும், சிசுவான இயேசு அருகில் வந்ததை அறிந்து மிகவும் சந்தோசமாக வரவேற்பளித்தனர். துய அன்னை கர்ப்பமுற்று இருக்கிறார் என்பதை எலிசபெத் புரிந்து கொண்டார் என்று நமக்கு தெரியும், ஏனெனில், நற்செய்தியில் எலிசபெத் பரிசுத்த அவியால் நிரம்பபட்டிருந்தார் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், சிசுவான ஜான் எப்படி அறிந்து கொண்டார்? வயிற்றுனுள் எப்படி அவர் துள்ளி குதிதார்?

குழந்தை பிறந்து முதல் மூச்சு விடும்போது தான் அதற்கு ஆண்மாவும் , உடலும் உள்ள மனிதனாக ஆகிறது என்று அபார்ஷனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் ஆனால், இன்னும் பிறக்காத ஜான் எப்படி இன்னும் பிறக்காத இரட்சகரை அறிந்து கொண்டார். ?

கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, சிசுவாகவும், திவ்ய நற்கருணையிலும், பெண்களின் வயிற்றில் வளரும்  மனிதனிலும் அறிந்து கொள்ள, நாம் பரிசுத்த ஆவியின் முழுமையில் இருக்க வேண்டும். நமது ஞானஸ் நானத்திலிருந்து நமக்கு முழுமையாக பரிசுத்த ஆவி வழங்கப்பட்டு உள்ளது. எனினும், கடவுள் நம்மையும், நம் மனதையும்  மாற்றிட நம்மையே அனுமதித்து, அவரிடம் சரணடைந்தால், நாம் என்ன நினைக்கிறோமோ அதன் உண்மையான அர்த்தத்தை நமக்கு கடவுள் பரிசுத்த ஆவியின் மூலம் புரிய வைப்பார்.

சிசுவாக இருந்த யோவானுக்கு ஒன்றும் புரிந்திருக்காது, மேலும், கருவின் வெளியே நடக்கும் விசயம் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாது தான், இருந்தாலும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இதனிலிருந்து நமக்கு கிடைக்கும் போதனை என்னவென்றால், கடவுள் நமக்காக பிரச்சினைகளை கையாண்டு அதற்கு நல்ல முடிவை கொடுக்கும் முன்பே நாம் சந்தோசம் அடையலாம். கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நமக்கு புரியாது, மேலும் அவரின் திட்டம் என்ன என்று கூட நமக்கு தெரியாது.
திருவருகை காலம் முதலே, கிறிஸ்துமஸுக்காக நம் விசுவாசம் வளர நாம் தயாரித்து கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை  நாம் அறிந்து கொண்டு அதில் சந்தோசம் அடைய கடவுள் அந்த விசுவாசத்தை கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக நமக்கு கொடுப்பார். இந்த சந்தோசம் வருசம் முழுதும் நமக்குள் நீடிக்கும்.  இது வாழ்வின் வழிமுறை, விடுமுறை காலம் அல்ல. கடவுள் நமக்காக வழிகளை உண்டாக்கிகொண்டிருக்கிறார் என்று நாம் நம்புவதே கடவுள் மேல் நாம் கொண்டுள்ள விசுவாசத்தால் ,  கடவுள் என்ன செய்கிறார் என்பதே நமக்கு தெரியாவிட்டாலும், நாம் கடவுளின் நல்ல விசயத்தில் நம்பிக்கை வைக்கிறோம்.  நாம் வருத்தத்தில் இருந்தாலும், பிரச்சினைகளில் மாட்டியிருந்தாலும், கிறிஸ்துவின் ப்ரசன்னத்தை, நம்மிடையே இருக்கிறார் என்பதை,  நாம் கற்று கொள்ளலாம்.

அடுத்து என்ன? யோவானை போல நாமும், இறைவனின் இருப்பை,  ப்ரகனப்படுத்துபவன் ஆவோம். எப்படி? முதலில் நம்மில் உள்ள சந்தோசத்தை மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். விசுவாச ஆற்றலை இன்னும் அதிகம் அனுபவிக்க, கிறிஸ்துவின் அன்பை எல்லோருக்கு அறிவிக்கும் பணியில் ஈடுபட்டால், அவரின் சமாதானத்தையும், தாராள மனசையும் எல்லோருக்கும் அறிவிக்கும் பணியில் ஈடுபட்டால், கிறிஸ்துமேல் உள்ள நம்பிக்கை இன்னும் வளரும். கிறிஸ்து மற்றவர்கள் மேல் கரிசனத்தோடு இருக்கிறார் என்பதை நாம் மற்றவர்களுக்கு வெளிபடுத்துவதன் மூலம் இயேசுவை நாம் அவர்களுக்கு காட்டுகிறோம்.
கிறிஸ்துவின் எல்லா நல்ல பலண்களும், குணமும் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தாராள குணத்துடன் கிறிஸ்துவின் கொள்கைகளை அறிவிக்க தேவையானவர்களுக்கு பண உதவியும் செய்து நாம் அவரின் இறைசேவையில் பங்கு கொள்ளலாம். அதன் மூலம் நாம் சந்தோசம் அடைவோம். கிறிஸ்துவின் தாராள குணத்தில் நாமும் பங்கு கொள்கிறோம்.
© 2012 by Terry A. Modica

No comments: