Friday, December 28, 2012

டிசம்பர் 30 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 30 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருகுடும்ப விழா
Sirach 3:2-6, 12-14 or
1 Sam 1:20-22, 24-28
Ps 128:1-5
Colossians 3:12-21
Luke 2: 41-52
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 2:41-52
கோவிலில் சிறுவன் இயேசு
41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.43விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது;44பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்;45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.46 மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ' மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ' என்றார்.49 அவர் அவர்களிடம்,  நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்றார். 50அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
(thanks to www.arulvakku.com)



மகிழ்ச்சியும், ஒரு நாடகம் மூலம் கிடைப்பது தான் 5வது சந்தோச தேவ ரகசியம்” என்று போப் 2ம் ஜான் பால் அவருடைய ஜெபமாலையை பற்றிய குறிப்புகளில் கூறியுள்ளார். சிறுவன் இயேசு கிறிஸ்து கானாமற் போய் கிடைப்பதை இன்றைய நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதை தான், போப் 2ம் ஜான் பால்  நினைவு கூர்ந்துள்ளார். கோவிலில், இயேசு இறைப்ரசன்னத்தோடு, இயேசு இருந்த்தை பார்க்கிறோம். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அங்கே அவரே போதனையை ஆரம்பித்தது போல, பேசினார். இந்த நற்செய்தி வாசகம், தனது தந்தை கடவுளின் இறைசேவையை ஆரம்பித்து, அவருக்காக தனது முழு நேரத்தை செலவழிக்க தயாராகிவிட்டார் என்பதை கான்பிக்கிறது. இந்த 5ம் தேவ ரகசியத்தில், எவ்வளவு சீக்கிரம் இயேசு தந்தை கடவுளுக்காக இறைசேவை செய்ய தயாராகிவிட்டார் என்பதை நமக்கு காட்டுகிறது.

இந்த தேவ ரகசியத்தின் இரண்டாம் பகுதியில், இரண்டாம் ஜான் பால் இவ்வாறு கூறுகிறார்: “நற்செய்தியின் இயற்கையான கொள்கை மூலம் அறிந்தால், மிகவும் நெருங்கிய உறவினர்கள் கூட, இறையரசின் அழைத்தலுக்கு சவால் விடப்படுகிறார்கள்” , எந்த உறவு? கண்ணி மரியாளும், சூசையப்பரும் இந்த சவாலை எதிர்கொண்டனர். அவர்கள் “கவலையோடும், பயத்தோடும்” இருந்தனர். ஏனெனில், இந்த நிகழ்ச்சியை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.  இன்றைய உலகிலும் நாம் இதே சவாலை எதிர் கொள்ளுகிறோம்.

இயேசுவின் வார்த்தைகள்  நாமும் கூட பல  நேரங்களில் புரிந்து கொள்வதில்லை. அவருடைய போதனைகள் நம் வாழ்வில் இன்னும் கடினமான சவால எதிர்கொள்ள, ஏற்றுகொள்ள தூண்டுகிறது. நம் பகைவருக்கும் நல்லது செய்ய வேண்டிய வாழ்வை வாழச்சொல்கிறது. அநீதிக்கு எதிராக இருக்க வேண்டும், அதனால் நீங்கள் பரிகாசத்திற்கு உள்ளாவீர்கள். உங்கள் மேல் குறைகள் கூறப்படும். இன்னொரு கண்னத்தை காட்ட வேண்டியிருக்கும். இன்னும் ஒரு மைல் நாம் அதிகமாக  வாழ்வில் நடக்க வேண்டும். கடவுளின் நல்ல உயர்ந்த குணங்க்களை நம் வாழ்வில் தைரியத்தோடு கடைபிடிக்க வேண்டும். பரிசுத்த வாழ்வு வாழ எது முறையோ, அது கடினமாக இருந்தாலும், அதன் படி வாழ்வேண்டும், அதே போல், கிறிஸ்துவிற்கு எதிரான வாழ்வை அறவே விட்டு விலக வேண்டும். எனினும், கிறிஸ்துவை பின் செல்ல மனப்பூர்வமாக இருந்தால், எந்த கஷ்டமாக இருந்தாலும், அதனை ஏற்று கொள்ள நாம் தயாராக இருப்போம். மேலும் இந்த செயல்கள் மூலமாக, நாம் கிறிஸ்துவை போல மாற இன்னும் அதிக புரிதலை நாம் பெற்று கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகளை நாம் நம்பவேண்டும். கன்னி மரியாளையும், சூசையப்பரையும் போல, நமது இருதயத்தில், என்ன புரியவில்லையோ, அதனை இருத்தி, மேலும் அதன் அர்த்தங்களை தேடியும், கிறிஸ்துவின் பின்னே சென்று, அவர் என்ன கேட்டு கொண்டாரோ அதனை செய்ய வேண்டும். கிறிஸ்துவிற்குள் நம் வாழ்வை அர்ப்பணித்து வாழும் பொழுது, அதனிடமிருந்து வரும் மகிழ்ச்சியை நாம் கண்டு கொள்ள முடியும்.

இன்றைய திருகுடும்ப விழாவில், கன்னி மரியாளும், சூசையப்பரும் நமக்காக இயேசு என்ன சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள நாம் அவர்களிடம் வேண்டி கொள்வோம். நமது சோதனைகளிலும், வேதனையிலும், இயேசுவை பாராமல் இருக்கும் நேரத்திலும்,  இயேசு பரிசுத்த ஆவியில் மூலம் நம்மில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள நாம் கற்று கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் மூலம், நமக்கு உதவி செய்கிறார், நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்கிறார், பேரிரக்கத்தோடு நம்மை அன்பு செய்கிறார் மேலும், நாம் சவால்களை சந்திக்கும் நேரத்தில் இன்னும் அதிகம் நமக்கு உதவி செய்கிறார்.

© 2012 by Terry A. Modica

No comments: