Friday, December 7, 2012

டிசம்பர் 9, 2012 ஞாயிறு நற்செய்தி மறையுரை



டிசம்பர் 9, 2012  ஞாயிறு  நற்செய்தி மறையுரை
திருவருகை கால இரண்டாம் ஞாயிறு
Baruch 5:1-9
Ps 126:1-6
Philippians 1:4-6, 8-11
Luke 3:1-6

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 3

3. திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்

(மத் 3:1 - 12; மாற் 1:1 - 8, யோவா 1:19 - 28)
1 திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர்.2 அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார்.3 ' பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் ' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார்.4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ' பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ' ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்;5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்.6 மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர் ″ .

(thanks to www.arulvakku.com)

திருவருகை காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று , நற்செய்தி வாசகம், நாம் இக்காலத்தில் நமது ஆண்மிக வளர்ச்சிக்காக செலவிட வேண்டும் என்று நம்மை அறிவுறுத்துகிறது. அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்புவதிலும், நாம் அதிக நேரம் செலவழிக்கிறோம். கிறிஸ்து நம் வாழ்வில் மீண்டும் பிறக்கவும், அதனை ஒரு பரிசுத்த நாளாகவும் ஆக்க நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?


இந்த ஆண்டு, நாம் விசுவாச ஆண்டாகவும் கொண்டாடுகிறோம், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி தான், நாம் விசுவாச ஆண்டாக கொண்டாடுகிறோம். விசுவாசத்தில் புதிய வளர்ச்சியை அடைய நாம் என்ன செய்கிறோம்?

இன்றைய முதல் வாசகத்தில் பதிலுரை பாடலில் நாம் “ ஆண்டவர் நமக்கு மாபெரும்செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.” என்று முழக்கமிட்டு சொல்கிறோம். இதனை நீங்கள் சொல்லும்பொழுது, உண்மையாக மகிழ்ச்சியாக சொல்கிறீர்களா? கடினமான  நமது ஒவ்வொரு நாள் வாழ்விலும், விசுவாசத்தோடு இருந்தால் தான், நாம் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” என்று யோவான் முழங்குகிறார்.
இயேசுவோடு நல்லுறவு கொண்டு, அவர் மேல் உள்ள விசுவாசத்தில் நிலைத்து, மகிழ்ச்சியோடும் சந்தோசத்துடனும் இருக்க எப்படி நம்மை தயாரிப்பது என்று நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய நேரமிது.

உங்கள் வாழ்வில் உள்ள குழப்பங்களையும், கோணல்களையும் நேராக்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உறுதியான விசுவாசத்தை உங்களிடம் வைக்காமல் இருக்க செய்யும் பாவத்தை ஒழிக்க நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்ன மாதிரியான தண்டனை உங்களை நேராக்கும்? உங்களுக்கு நம்பிக்கையில்லையா? ஏனெனில், இயேசு உங்கள் வாழ்வை நேராக்குவார் என்ற விசுவாசத்தின் கதவுகளை நீங்கள் இன்னும் திறக்கவில்லை.


இயேசுவின் மேல் விசுவாசம் கொள்ள, மலை போல் குவிந்திருக்கும் தடைகளை அகற்ற இயேசு பல முறைகளில் , அந்த மலையை தகர்த்தெறிவார். இந்த திருவருகை காலத்தில், அந்த வழி முறைகளை தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. அந்த வழி முறைகளை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் இது. இந்த விசுவாச ஆண்டின் மூலமாக இயேசு நமக்கு வழிமுறைகளை காட்டுகிறார். இது நமது கோவிலிலும், விசுவாச கூட்டங்கள் மூலமாக நமக்கு கிடைக்கிறது.

குழப்பமான பாதை கொண்ட சாலைகள் போல உங்கள் மனதில் எதையெல்லாம் நினைத்து குழம்பி கொண்டிருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் மேல் உள்ள விசுவாசம் உங்களை பரிசுத்த வாழ்விற்கு அழைத்து செல்லும். உங்களில் கடினமானது எது? எது கூர்முனையோடு அடுத்தவரை காயப்படுத்துகிறது? வைரத்தை பட்டை தீட்டுவது போல, இயேசு உங்களை பட்டை தீட்ட ஆசைபடுகிறார். இதையே வேறு மாதிரி சொல்லவேண்டுமானால், கடவுளின் மீட்பை எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்? அதற்காக என்ன செய்ய போகிறீர்கள்?
© 2012 by Terry A. Modica


No comments: