Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 22, 2013  ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு

Isaiah 7:10-14
Psalm 24:1-6 (with 7c & 10b)
Romans 1:1-7
Matthew 1:18-24

மத்தேயு நற்செய்தி

18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 23இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 
(thanks to www.arulvakku.com) 
திருவருகை கால நான்காவது ஞாயிறின் முக்கிய நோக்கம்/கருத்து அன்பு தான். அன்பின் விளக்கமான கருத்து என்ன என்று முதல் வாசகத்தில் நாம் பார்க்கலாம். பைபிளில் ஆருடம் கூறியதை நடந்துள்ளது”: இம்மானுவேல் என்றால், “கடவுள் நம்மோடு” . அன்புடன் இருப்பது என்பது “கடவுள் நம்மோடு “ இருப்பது என்பதாகும். அன்பினை கொடுப்பது என்பது கடவுள் நாம் நம்மோடு இருப்பவர்களுக்கு கொடுப்பது.

மற்றவர்களை அன்பு செய்ய உங்களால் முடியவில்லை என்று என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? அது மாதிரி நாம் இருக்க முடியாது. நாம் சில நேரங்களில் பொறுமை இழ்ந்து விடுவோம். மற்றவர்களிடம் இருந்து வரும் அன்பை விட நாம் அதிகம் கொடுக்கும் அன்பினால் நாம் சோர்வடைந்து விடுகிறோம். அன்பே உருவான கடவுள் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறார்.
நாம் எவ்வளவு தான் அன்பு செய்தாலும், மற்றவர்கள் அதற்கு பதிலாக நம்மிடம் அன்பு செலுத்தாமல் நம்மை நின்த்தித்தால், நாம் வெறுமையா நம் மனதில் எண்ணுவோம் . இது மாதிரியான நேரத்தில், நாம் கடவுளின் அன்பை நாம் கேட்டு அதன் முலம் நாம் அன்பு செய்ய வேண்டும். இது மாதிரியான வேண்டுதல் கண்டிப்பாக பலன் கொடுக்கும். இப்படிதான் நாம் கடவுளின் அன்பை பகிரும் இவாஞ்சளைசர் நாம் மாற முடியும்.

யாரெல்லாம் அன்பு செய்ய முடியாமல் இருக்கிறார்களோ , அவர்களிடம் நாம் அன்பு செய்தால், நம்மில் உள்ள கடவுளை நாம் அவர்களுக்கு தெரியபடுத்துகிறோம்.
நம்மில் பலர் கிறிஸ்துவாக நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அவர்களிடம் கேட்டுள்ளது போல நாம் அவர்கள் நம்மை அன்பு செய்யாமல் இருக்கலாம். இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், மற்றவர்களை சார்ந்து நாம் இருக்க வேண்டியதில்லை. கடவுள் நம்மோடு. அவரை தான் நாம் நாட வேண்டும். நம்மோடு இருக்கும் கடவுள் , நம்மை முழுவதுமாக அன்பு செய்கிறார். நிபந்தனையின்றி நம்மை கடவுள் அன்பு செய்கிறார். நாம் அதற்கு தகுதியானவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அன்பு செய்து கொண்டிருக்கிறார்.
மற்றவர்கள் நம்மை அதிகம் அன்பு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாம் இருந்தோமானால், நாம் அவர்கள் அன்பு செய்யவில்லை என்று தான் எண்ணுவோம். ஆனால் இயேசுவின் மேல் நாம் கண்களை திருப்பினால், அவர் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே இயேசுவின் அன்பால் முழுதும் நிறைத்துவிடுவர்.
இம்மானுவேல், கடவுள் நம்மோடு என்று எல்லா காலமும் நாம் அதன் நினைப்பிலே இருத்தல் வேண்டும.
இம்மானுவேல், அது தான் நமக்கு சின்னம். அதனை கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கிறிஸ்துமஸ் அன்பளிப்பாக நமக்கு தருகிறார்.

© 2013 by Terry A. Modica

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை


டிசம்பர் 15, 2013 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால மூன்றாம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Psalm 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11

மத்தேயு நற்செய்தி

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்
(
லூக் 7:18 - 35)
யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.அதற்கு இயேசு மறுமொழியாக, ' நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர் என்றார்.அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: ' நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையா?8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.10 ' இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.11 மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(thanks to www.arulvakku.com )
சந்தோசம் தான் கிறிஸ்து வருகை காலத்தின் மூன்றாம் ஞாயிறின் முக்கிய கருத்தாகும். முதல் வாசகத்தில் சொல்வது போல, “உறுதி ஆக இருங்கள், பயப்பட வேண்டாம். உங்கள் கடவுள் இங்கே இருக்கிறார். உங்களை மீட்க உறுதி உடன் வந்துள்ளார். “ நாம் சந்தோசப்படுவதற்கு இது தான் காரணம். நாமெல்லாம் பாவத்தினால் அழிவின் முனையில் உள்ளோம். இயேசு சிலுவையின் முலம், மிக பெரிய தியாகத்தினால், நம் பாவங்களுக்கு பரிசளித்தார். இதற்காக தான், இயேசு இந்த புவியில் பிறந்தார். நம்மை மீட்கவே, கடவுளின் அன்பிலுருந்து பிரிந்து சென்ற நம்மை அவரிடம் அழைத்து செல்லவே வந்தார்.

நித்திய வாழ்வை ஒப்பிட்டு பார்க்கையில், இவ்வுலக பிரச்சினைகள் மிகவும் சிறியது.
இயேசுவினால், நமது பாவங்கள் , அதன் அழிவுகள் நம்மை ஒன்றும் செய்யாது என்று  நாம் புரிந்து கொள்ளும் பொழுது, நமக்கு சந்தோசம், மகிழ்ச்சி அடைகிறோம். கடவுள் நமக்கு தேவையான எல்லாவற்றயும் செய்கிறார், சாத்தானை விரட்டி அடித்து நம்மை ஆசிவதிக்கிறார்.

மிகவும் மோசமான பிரச்சினைகள் கூட, அதனை இயேசுவோடு இணைத்தால்,  நமக்கு ஆசிர்வாதமாக மாறும்., கிறிஸ்து எப்படி சிலுவையில் துன்ப பட்டாரோ, அதனை போல , நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொண்டு, இந்த துன்பங்கள் நமக்கு என்ன கற்று கொடுத்ததோ அதனை மற்றவர்களுக்காக அர்ப்பன்னித்து, நாம் செய்யும் பொழுது, அது இறைசெவையாக ஆகி விடுகிறது.  நமது துன்பங்களுக்கு, ஒரு மதிப்பு கிடைக்கிறது. அதன் அர்த்தம் என்ன என்றால்,  நமது மகிழ்ச்சி இரட்டிப்பாக, பல மடங்காகிறது.  
கிறிஸ்துவில்  நாம் மகிழ்ச்சியினால் அர்ச்சிக்கபடுகிறோம். அந்த சந்தோசம் என்றும் நிலையானது. நாமும் அந்த சந்தோசத்தை பெற்று மகிழ்ச்சியோடு, நல்லது நமக்கு நடக்க போகிறது என்ற எண்ணத்துடன் வாழ்கிறோம். கவலைகளும், பயமும், நம்மை விட்டு ஓடிவிடும். அதன் முலம், கிறிஸ்துவின் சேவையை நாம் மகிழ்ச்சி அடைகிறோம். விசுவாசத்தின், கருணையின் கடவுள் முலம், நாம் எழுகிறோம்.
இரண்டாவது வாசகத்தில் கூறப்பட்டது போல, நமது சோதனைகளை வெற்றியாக்க கடவுள் நேரம் எடுத்து கொள்ளும்பொழுது, நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் மகிழ்வுடன் இருக்க, நாம் எப்பொழுதும் விசுவாசத்துடனும், கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்ற தயக்கத்துடன் இல்லாமலும், இருக்க வேண்டும். மேலும், நாம் எந்த ஒரு குற்றம் கூறாமாலும் ,நாம் கடவுளை விட நம் பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியும் என்ற மனப்பான்மையுடனும் இல்லாமல்   நாம் இருக்க வேண்டும்.
கடவுள் உண்மையாக நம் மேல் அக்கறை கொண்டு, நமது துன்பங்களிலிருந்து, நம்மை மீட்க, அதன் முலம் நாம் ஆசிர்வாதம் பெற, அவர் செயல் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதனை நாம் புரிந்து கொண்டால், நமக்கு மகிழ்ச்சி தானாக வந்து விடும். இயேசு சொல்வது போல “என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”
© 2013 by Terry A. Modica



Friday, November 22, 2013

நவம்பர் 24 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 24 2013 ஞாயிறு  நற்செய்தி மறையுரை
கிறிஸ்து அரசரின் பெருவிழா

2 Samuel 5:1-3
Psalm 122:1-5
Colossians 1:12-20
Luke 23:35-43


லூக்கா நற்செய்தி


35 மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், ' பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும் ' என்று கேலிசெய்தார்கள்.36 படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து,37 ' நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள் ' என்று எள்ளி நகையாடினர்.38 ' இவன் யூதரின் அரசன் ' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், ' நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று ' என்று அவரைப் பழித்துரைத்தான்.40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய்.41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான்.42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான்.43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் என்றார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசுவோடு மற்ற சிலுவைகளில் தொங்கி கொண்டிருந்த குற்றவாளிகளில் ஒருவனை போல நாமும் இருக்கிறோம். இயேசுவின் இறையரசில், கிறிஸ்து அரசரோடு நித்தியா வாழ்வில் இணைந்து வாழவே விரும்புகிறோம்.  இந்த மனப்பான்மையோடு இருந்தோமானால், நிச்சயம், நாம் இறந்த பிறகு, பரலோக ராஜ்ஜியத்தில் இருப்போம்.



விண்ணகத்தின் ராஜாவான இயேசு, விண்ணரசிறகு யார் வரலாம், யார வர கூடாது என்று முடிவு செய்வதில் அவருக்கு அதிகாரம் உள்ளது. பெரிய வெள்ளியன்று சிலுவை மரணமடைந்த குற்றவாளிகளை ஒருவன் இதனை நமக்கு உணர்த்துகிறான். அவனிடம் இயேசு, “' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்” என்று அவரிடம் சொல்லி, அவருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை நமக்கு எல்லாம் காட்டுகிறார்.

இயேசுவின் அதிகாரம் என்ன என்று பார்ப்போம். கடைசி இரா உணவின் பொழுது, சீடர்களின் பாதங்களை கழுவியபோழுது, விண்ணக அரசர், தனது அதிகாரத்தை, இறையரசின் சார்ந்தவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நமக்கு காண்பிக்கிறார்.


அதற்கு மறுநாள், தங்கத்தினால் ஆனால் கிரீடம்  சுட்டி கொள்ளாமல், முள்ளினால் ஆன கிரிடம் சுட்டி கொண்டார். ஏனெனில், கிறிஸ்துவின் அரசின் புகழ் , இவ்வுலக ஆபரணங்களால், ஆனது அல்ல, மாறாக அன்பினால், மற்றவர்கலுக்காக நாம் செய்யும் தியாகம் பெரியது. அந்த தியாகத்திற்கு , அவர்கள் தகுதியானவர்கள் இல்லையென்றால் கூட , அவர்களுக்காக தியாகம் செய்வது, இறையரசின் கருணையாகும்.

அவர் உயிர்த்து எழுந்த பின்பு, மரணத்தின் அழிவிழுருந்து,, அவரது காயங்கள் ஆறிவிட்டாலும், அவரின்  ஐந்து காயங்கள் ஆறவில்லை. இன்று வரை , அவர் அதனை தனது உடலில் இருக்கிறது. இதன் முலம் நாம் அறிவது என்ன என்றால், அவர் அதிகாரத்தை , அவருக்காக உபயோகித்து கொள்ளவில்லை மாறாக, நமக்காக எல்லாம் செய்தார். இந்த உலக அரசர்கள், விலை மதிப்பு மிக்க மோதிரத்தை அணிந்திருக்கிராற்கள். நமது மோட்சத்தின் அரசரோ, அவரின் தியாக அடையாளங்களை அணிந்து இருக்கிறார்.


நாம் அனைவரும், கடவுளரசின் பிள்ளைகள் ஆவோம்.எப்பொழுது?  கிறிஸ்துவோடு இணைந்து, அன்போடு, நாம் மற்றவர்களுக்கு சேவை செய்யும்பொழுது, தாராளமாக மற்றவர்களுக்கு கொடுக்கும் பொழுதும், நமது அன்பிற்கு தகுதியில்லாதவர்களுக்கும, அன்பு செய்வதால் நாம் கடவுளரசின் பிள்ளைகள் ஆகிறோம்.

நமது துன்பங்களை, இயேசுவிடம் அர்ப்பனித்து, , அதற்கு கண்டிப்பாக மதிப்பு இருக்கிறது என்று நாம் அறிந்து, அவரிடம் அதனை சமர்ப்பிக்கிறோம். இயேசு ஐந்து காயங்களையும் நமது ஆன்மாவில் சுமப்போம். கண்டிப்பாக ஏசுவோடு அவரது பேரரசில் இணைவோம். இப்பொழுதே நாம் அவரோடு இணைந்து விட்டோம்.


© 2013 by Terry A. Modica

Friday, November 15, 2013

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை

நவம்பர் 17 2013 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 33ம் ஞாயிறு

Malachi 3:19-20a
Psalm 98:5-9
2 Thessalonians 3:7-12
Luke 21:5-19

லூக்கா நற்செய்தி

எருசலேம் கோவிலின் அழிவு பற்றி முன்னறிவித்தல்
(
மத் 24:1 - 2; மாற் 13:1 - 2)
கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.6இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார்.

வரப்போகும் கேடு பற்றி அறிவித்தல்
(
மத் 24:3 - 14; மாற் 13:3 - 13)
அவர்கள் இயேசுவிடம், ' போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? ' என்று கேட்டார்கள்.அதற்கு அவர், ' நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ' நானே அவர் ' என்றும், ' காலம் நெருங்கி வந்துவிட்டது ' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள்.ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது என்றார்.10 மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: ' நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.11 பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.12 இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள்.13 எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.14 அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.15 ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது.16 ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள்.17 என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள்.18 இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது.19 நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.
 (thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு, ' இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும் என்றார். இவ்வுலகில் உள்ள அனைத்துமே நிரந்தமற்றவை என்பதை நமக்கு இயேசு எடுத்து உரைக்கிறார் .


இவ்வுலகில் நீங்கள் எதையெல்லாம் சந்தோசமாக அனுபவிக்கிறீர்கள் என்று பாருங்கள். இவை அனைத்துமே தற்காலிகமானது. உங்களுக்கு துக்கம் , துன்பம் தருவது எது, அதுவும் தர்காமானது தான். இவ்வுலகில் எந்த விசயங்களை , பொருளை நீங்கள் சார்ந்து இருக்கிறீர்கள். அதுவும் நிரந்தரமானது இல்லை. எதனை பார்த்து ஆச்சரியபடுகிரஈர்கள்?  எதற்காக நீங்கள் அதிக நேரம் செலவழித்து, உழைத்து பலன் பெறுகிறீர்கள்? அதுவும் தற்காலிகமானதே , இறையரசிர்காக இவை அனைத்தும் செய்யும்பொழுது, அவை  நிரந்தரமானது. பலன் தர கூடியது.

கடவுளை நோக்கியே நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும், என்று நமக்கு தெரியும். நித்திய வாழ்விற்கு தேவையானதையே நாம் செய்ய வேண்டும் என்றும் தெரியும். ஆனால், அதனை செய்வதில் நாம் அவ்வளவு விருப்பத்துடன் இருபதில்லை. கண்மூடி தனமான விசுவாசம் நம்மிடம் இருப்பதில்லை. கடவுள் அநியாயத்திற்கு எதிரான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், இவ்வுலகில் தவறு செய்பவர்கள் துன்ப பட வேண்டும் என்று சீடர்கள் சிலர் கருதுவது போல நாம் இருக்கிறோம். போர்களும், கடும் நோய்களும், துன்பமும், தற்காலிக உலகில் நடப்பவை. இயேசு மீண்டும் இரண்டாம் முறை வந்து, இவ்வுலகில் உள்ள துன்பத்தையும், கடினமானதையும் போக்க வேண்டும். என நாம் ஆசைபடுகிறோம்.

நம் அனுதின நிகழ்வில், கடவுளின் உதவியை நாம் வேண்டுகிறோம். நாம் நம் விசுவாசத்தின் அடிப்படையில், கண்டிப்பாக நமக்கு உறுதியான பலன் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எதிர்காலம் பற்றி அறிய நாம் ஆசைபடுகிறோம். கடவுள் என்ன நமக்கான என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்ற அறிய நாம் ஆவல் படுகிறோம். அதனை தெரியாமல் நாம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்க விரும்புபவதில்லை. நாம் நம் கண் முன்னே என்ன தெரியுதோ அதனை தான் நாம் சார்ந்து இருக்கிறோம். கடவுளை நம்புபவதை விட , அவர் கொடுப்பதை நம் கண் முன்னே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

எனினும், கடவுளோடு இணைந்து நடப்பதற்கு முதலில் ஒரு அடியை எடுத்து வைக்க வேண்டும். அடுத்த அடியை எடுத்து வைக்க தயாராக இருக்க வேண்டும். அந்த கால் காற்றில் இருக்கும்பொழுதே , கடவுளே, எனது காலை எங்கே வைக்க வேண்டும். என்று நாம் கேட்க வேண்டும்.
இதற்கு நாம் நிதானமாக இருக்க வேண்டும்: கடவுளே சுற்றியே நம் எண்ணங்கள் இருக்க வேண்டும். சில நேரங்களில் குழம்பி நாம் விழுந்து விடுகிறோம். ஆனால் கடவுள் உடனே உங்களுக்கு பதில் கொடுக்க வில்லை என்றால். நாம் கிழே விழ வேண்டும், அல்லது கடவுளின் கைகளில் விழ வேண்டும். கடவுளின் கைகள் நிரந்தரமானது, அவர் கைகள் உங்களுக்க பாதுகாப்பை கொடுக்கும். அந்த பாதுகாப்பு முடிவில்லாதது, சக்துயுள்ளது, முழு அன்பு நிறைந்தது. அவரின் அன்பு, பாதுகாப்பும், என்றுமே தோற்றதில்லை.
© 2013 by Terry A. Modica



Friday, November 1, 2013

நவம்பர் 3 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

நவம்பர் 3 2013  ஞாயிறு  நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 31ம் ஞாயிறு
Wisdom 11:22–12:2
Psalm 145:1-2,8-11,13,14
2 Thessalonians 1:11–2:2
Luke 19:1-10

இயேசுவும் சக்கேயுவும்
இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார்.2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர்.இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார்.அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார்.இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், ' சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் 'என்றார்.அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்.இதைக் கண்ட யாவரும், ' பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர் ' என்று முணுமுணுத்தனர்.சக்கேயு எழுந்து நின்று, ' ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் ' என்று அவரிடம் கூறினார்.இயேசு அவரை நோக்கி, ' இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!10 இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார் என்று சொன்னார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில் சக்கேயுவின், தீவிரத்தை தீர்மானமாக இயேசுவை க்கான அவர் எடுத்து கொண்ட முயற்சியை பார்த்தீர்களா? இயேசுவை அவரால் பார்க்க முடியவில்லை. ஆனால் அது ஒன்றும் அவர் இயேசுவை பார்ப்பதை தடை செய்யவில்லை. மக்கள் கூட்டமும், குள்ளமாக இருப்பதாலும், அவருக்கு பெருந் தடையாக இருந்தது. இருந்தும் , இயேசுவை பார்க்கும் அவர் நோக்கம் ஒன்றும் அவர் விடவில்லை.

இயேசுவை அவர் பார்த்தே ஆகவேண்டும், அவரை அருகாமையில் இருந்து அவர் செய்வதை பார்க்க வேண்டும், என்ற ஆர்வத்தில், மரத்தின் மேல் ஏறினார். அவர் மரக்கிளையில் ஏறி நிற்பதால், அவருக்கு அவமானமாக கூட இருந்திருக்கலாம். அவரை பார்ப்பவர்கள், அவரை ஒரு மாதிரியாக கூட பார்த்திருக்கலாம். சிலர் கீழ்த்தரமாக கூட பேசியிருக்கலாம். மரத்தின் கடினமான உராய்வு கூட அவரின் சட்டையை கிழித்திருக்கலாம்,  ஆனால் இதெல்லாம் சக்கேயுவை நிறுத்தவில்லை.

நமக்குள்ளும் பல குறைகள் உள்ளன – தவறான கண்ணோட்டம், தவறான பயிர்ச்சிகள், பயம், தெய்வ விசயத்தில் சோம்பல், பயம், சந்தேகம், இன்னும் பல – இவையெல்லாம் நாம் இயேசுவை பார்ப்பதற்கு தடையாக இருக்கின்றன. நமக்குள்ளும், பல குறைவான குணங்கள் உள்ளன. கடவுளோடு ஒப்பிடுகையில், நாம் மிகவும் சிறியவர்களே, கடவுளின் மேலான குணங்கள் , அவர் பார்ப்பது போன்று நம்மால் பார்க்க இயலாது, நம் குறைவான குணங்களால் , இயேசு நம்மை நிராகரித்து விட்டார் என்று நாமாக ஒரு முடிவிற்கு வந்து விடுகிறோம். அதன் பிறகு தனிமையாகி விடுகிறோம்.
மாறாக, நாம் சக்கேயுவை போல இருக்க வேண்டும். இயேசுவை முழுதுமாக பார்க்க வேண்டும் என்று விருப்பத்துடன், எல்லா வகையான வழியிலும், முயற்சி செய்து, எல்லா தடைகளையும் மீறி அவரிடம் செல்ல வேண்டும்.

சக்கேயு மரத்தின் மேல் ஏறியவுடன், இயேசு தனியாக அவரை கண்டறிந்ததை பாருங்கள், மேலும், அவரை தனியே அழைத்து, அவருக்கு உறுதியளிக்கிறார். சக்கேயு அதற்கு எவ்வாறு பதிலுரைத்தார், எப்படி எப்படி ஏற்றுகொண்டார், உடனடியாக மரத்திலிருந்து இறங்கி ஓடோடி வந்து, இயேசுவை சந்தோசமாக ஏற்றுகொண்டார்.  மிகவும் உற்சாகத்துடன் வந்து, அவருடைய பாவங்களுக்காக, அதன் தண்டனையாக பல மடங்கு ஏற்றுகொள்ள தயாரானார்.

திருப்பலியில் இயேசுவை திவ்ய நற்கருணையில் பார்க்கிறீர்களா? கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு எவ்வாறு சக்கேயு நடந்து கொண்டாரோ, அதே போல், நாம் நடந்து கொள்கிறோமோ, அப்படி இல்லையெனில், நம்மில் இன்னும் தடைகள் இருக்கின்றன என்று அர்த்தம், இன்னும் நாம் மேலே போக வேண்டும்.

© 2013 by Terry A. Modica

Friday, October 25, 2013

அக்டோபர் 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 27, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30ம் ஞாயிறு
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14


லூக்கா நற்செய்தி
அதிகாரம் 18: 9-14

பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், நம் முக்கிய நோக்கம், நாம் எதை நோக்கி நம் செயல்களை செய்கிறோமோ, அவைகள் அன்பினால் அல்ல, மாறாக, நம் சுய நலத்திற்காக என்பதை எடுத்து காட்டபடுகிறது. “தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்
மிகவும் விரைவாகவோ அல்லது சில காலம் தாழ்த்தியோ, அவர்கள் அவர்களது சொந்த பழக்க வழத்தினாலே, தாழ்த்தபட்டுவிடுவார்கள். அவர்களை அருகில் அடிக்கடி பார்ப்பவர்கள் அவர்களை பற்றி உயர்வாக பார்ப்பதில்லை. அதே போல், கண்டிப்பாக கடவுளும் அவர்களை உயர்வாக பார்ப்பதில்லை
இதற்கு மாற்று வழி, நமது அன்பு மற்றவர்களுக்காக காட்டும்பொழுது, நாம் நம்மையே தாழ்த்திகொள்கிறோம். அன்பில்லாத எந்த ஒரு செயலும், நமக்காக நாமே செய்து கொள்ளும் முயற்சியாகும். நாம் செய்வது சரி என்று நாம் நினைத்து கொள்கிறோம். ஆனால் அது சரியல்ல. மற்றவர்கள் மேல் உண்மையான அக்கறை கொண்டு , அவர்களுக்காக நல்லது செய்யும்பொழுது, நமது கர்வம், எல்லாம் போய், நாம் தாழ்ச்சி அடைகிறோம். அதன் மூலம் பரிசுத்தமாகிறோம்.

நாம் மற்றவர்கள் மேல் கொண்டுள்ள அன்பினால், நாம் நல்லவர்களாக மாற்றபடுகிறோம்.  நாமாகவே நம்மை நியாயமாக மாற்றிகொள்வது – நம்மை நல்லவனாக மாற்றும். ஆனால், நாம் விரும்பும் செயல்கள் செய்கிற பொழுது, கடவுளுக்காகவும், அல்லது நம் சொந்த நலங்களுக்காகவும், செய்கிறோம். அன்பு தான் எல்லாவற்றிற்கும் முதன்மையானது, அது தான் நல்லதும் கூட, அது தான் மற்றவர்களுக்காக நாம் நல்லது செய்ய தூண்டும். இயேசுவின் உவமையில் உள்ள அர்த்த்த்தை பாருங்கள். நாமும் அவர்களை போலவே சில நேரங்களில்  நடந்து கொள்கிறோம். நீங்கள் பரிசுத்தமாக இருப்பதை விட, சிலர் குறைவாக இருப்பவரை பற்றி நினைத்து கொள்ளுங்கள், அவர் நீங்கள் கோவிலுக்கு செல்வதை விட, குறைவாக செல்பவராக இருக்கலாம், நீங்கள் ஜெபிப்பது போல், அவர்கள் ஜெபிக்காமல் இருக்கலாம். உங்களோட அக்கறைக்கு தகுதியில்லாதவர் ஒருவரை பற்றி நினைத்து கொள்ளுங்கள். யாரை அன்பு செய்ய மிகவும் கஷ்டமோ, அவர்களை பற்றி நினைத்துகொள்ளுங்கள்.


இதற்கு மருந்து, கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று நாம் நினைத்து அவர்கள் மேல் நாம் அன்பு கொள்ள வேண்டும். அவர்கள் மேல் உள்ள  கடவுளின் அன்போடு, நம் இதையத்தை இனைத்து, அவர்கள் மேல் அக்கறை கொள்ள வேண்டும். கடவுளோடு நாம் இனைவதற்கு மிகவும் உதவிடும் செயல், பாவசங்கீர்த்தனம். அதன் மூலம், நம் பாவங்கள் அனைத்தும் எடுக்கபட்டு, கிறிஸ்துவின்  நல்லவை அனைத்தும், நமக்கு கிடைக்க பெற்று, தேவனின் அருள் நம்மில் நிறைந்து, அவரை போல நாமும் மற்றவர்கள் மேல் அன்பும், அக்கறையும் கொள்வோம்.


© 2013 by Terry A. Modica

Saturday, October 19, 2013

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 20, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8

லூக்கா நற்செய்தி

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை

1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
“தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”  என்று இன்றைய நற்செய்தியில் நமக்கு உறுதியளிக்கிறார்.
நம்மை யாராவது நிராகரித்தாலோ, துன்புறுத்தபட்டாலோ, தவறாக நம் மேல் குறை சொன்னாலோ, கடவுள் நம்மை காப்பாற்ற வருவார். மிகவும் விரைவாக வருவார். அவர் விரைவாக வரவில்லையா? அவர் கொடுத்த வாக்குறுதியை மீறினாரா? கடவுள் சில நேரங்களில் மெதுவாக நம் வேண்டுதல்களுக்கு பதில் கூறுவது போல் தோன்றுகிறதா? உங்கள் ப்ரச்சினை முடிய சில  நேரங்களில், பல மாதங்கள் , வருடங்களாக கூட இருக்கும். நீங்கள் எப்பொழுது இயேசுவிடம் கேட்க ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுதே இயேசு உங்கள் அருகில் வந்து , சாத்தானிடமிருந்து உங்களை மீட்க வருகிறார்.

உண்மையான கேள்வி என்ன என்றால் “யேசு எங்கே? “ அல்லது முழுமையாக என்னை ஏன் காப்பாற்றவில்லை? சீக்கிரமே என்னை விடுவிக்கவில்லை? என்றும் நாம் கேட்கலாம். ஆயினும், அதற்கான பதில், இன்றைய நற்செய்தியின் கடைசி வரியில் உள்ளது “ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” அல்லது பயம் நம் மனத்தில் சுத்தி சுத்தி வருகிறதா? அவர் அருகே உள்ளதை பார்க்காமல், அவர் நமக்கு உதவ காத்திருப்பதை அறியாமல்,  நாம் துன்பம் நேர்ந்து விடுமோ என்று பயப்படுகிறோம்

விசுவாசத்துடன் நாம் வாழ்வில்லையென்றால், கவனமில்லாமல், நாமே, நம் பிரச்சினையை பெரிசாக்குகிறோம். கடவுளிடம் உதவி கேட்டு விட்டு, நாம் கவலையோடு இருக்கிறோமோ? கவனமாக இருங்கள், இயேசு உங்கள் அருகில் இருந்து கொண்டு, நம்பிக்கையோடு , விசுவாசத்தோடு இருங்கள் என்று நம்மிடம் கெஞ்சுகிறார்.  நீங்கள் எதிர்கொள்ளூம் தடையை இயேசு எடுக்க வில்லை என்று செயல்குழுந்து இருக்கிறீர்களா? நன்றாக கவனியுங்கள், இயேசு நீங்கள் நினைத்து கொண்டிருக்கும் திசையை விட்டு, வேறு திசையில் அவர் பின்னே செல்ல அழைக்கிறார்.

நம் எல்லோருக்குமே, துன்பம் கஷ்டம் உள்ளது. இயேசு உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானை தன் கத்தி கொண்டு சுழற்றுகிறார். இருளை , சாத்தானை உங்களை விட்டு துரத்துகிறார். ஆனால் அவர் கூறும் உண்மையை நாம் ஒதுக்கிவிட்டால், அவர் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பு வீனாகிவிடும்.

உங்களுக்கு தொந்தரவு கொடுப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்கிறார்களா? இயேசுவிடம் நம் கண்களை கொண்டு செல்லாமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், இயேசு நம்மை 
,  நமக்கு நியாயம் கொடுக்க வரும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம்.
விசுவாசத்தோடு நாம் வாழ்கிற பொழுது, கடவுளின் நியாய தர்மங்களை, ஒவ்வொரு நாளும் நாம் பெறுகிறோம், நமக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு அநியாயத்திற்கும், நமக்கு பதில் தருவதை நாம் பெற முடியும். அவர் கொடுக்கும் அமைதியையும், சமாதானத்தையும், கஷ்டத்தை தாங்கும் ஆற்றலையும் நம்மால் பெற முடியும்

© 2013 by Terry A. Modica



Friday, September 27, 2013

செப்டம்பர் 29, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


செப்டம்பர் 29, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Psalm 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

செல்வரும் இலாசரும்
19 ' செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.20 இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.21 அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.22 அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.23 அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.24 அவர், ' தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன் ' என்று உரக்கக் கூறினார்.25 அதற்கு ஆபிரகாம், ' மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாது ' என்றார்.27 ' அவர், ' அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.28எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே ' என்றார்.29அதற்கு ஆபிரகாம், ' மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும் ' என்றார்.30 அவர், ' அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள் ' என்றார்.31 ஆபிரகாம், ' அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்ப மாட்டார்கள் ' என்றார். ' 
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், பணக்காரனின், பாவம் என்ன? அவன் இறப்பிற்கு பிறகு எதனால் அவன் வேதனை அடைந்தான்? செல்வம் மிகுந்தவனாக அவன் இருந்ததாலா? அவனது ஆண்மாவை துன்புறுத்த செய்தது எது என்றால், அவனின் செல்வத்தை லாசருடன் பங்கிட்டு கொள்ளாதது தான் (அவனுக்கு வாய்ப்பு இருந்தும்).

மரணம் வாழ்வின் முடிவு அல்ல; நமது ஆண்மாவை திறந்து, அதனால், நாம் முழுவதும் கடவுளின் அன்பில் வாழலாம். மரணத்தின் மூலம், கடவுளை யார் என்று முழுமையாக நம்மால் அறிய முடியும். அவர் கொடுத்த திறமைகளை, அன்பளிப்பை எந்த அளவிற்கு நாம் உபயோகபடுத்தியிருக்கிறோம் என்று நம்மால் அப்பொழுது அறிய முடியும்.

நமக்கு கிடைத்த செல்வத்தை, நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோமோ, நாம் கடவுளின் இறையரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதார கொள்கையில், நம் முதலீடுகள் பல மடங்கு திருப்பி தரப்படும். நாம் கொடுத்ததை விட பல மடங்கு திருப்பி பெறுவோம். அதன் மூலம் இன்னும் அதிகம் நம்மால், பகிர்ந்து கொள்ள முடியும்.

இதற்கு மாறாக, நாம் நமது செல்வத்தை நம்மிலே வைத்து கொண்டு பாது காத்தால், மலர்கள் கருப்பு பெட்டிக்குள் வைத்து இருப்பது போன்று, அது வாடிய நிலையில் இருப்பது போன்று நமது செல்வமும் ஆகிவிடும். இருட்டு அறையில் மலர்களால் வளரவோ , ப்ரகாசிக்கவோ முடியாது. எதையெல்லாம், நாம் பாதுகாக்க செய்கிறோமோ, அதுவெல்லாம் உபயோகமில்லாமல் ஆகிவிடும். சில நேரங்களில், கெட்டு போய் விஷமாகிவிட கூடும்; பரிசுத்த வாழ்விலும், நம் உணர்விலும், அப்படியே தேங்கி நின்றுவிடுவோம். எல்லா செல்வங்களும், வீணாகிபோய்விடும். நம் சுயனலத்தினால், கடவுளோடு உள்ள உறவு கெட்டுவிடும். அவர் தான், தாராள மனத்தின் அரசராவார்.


ஒவ்வொரு நாளும், நாம் பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் உள்ளன. – கடவுளிடமிருந்து வந்த ஆசிர்வாதம் – நாம் மற்றவர்களுக்கு தரவேண்டியவையாக கூட இருக்கலாம். இன்றைய நற்செய்தியில் வரும் கதையில் கூட, செல்வந்தார் இலாசரிடம் இருந்து ஒதுங்குவதற்கு, இலாசரின் நோயும் ஒரு காரணமாக இருந்தது. அவர் உடலெங்கும் புண்கள் ஆக இருந்ததால், அவர் தொழு நோயால் பாதிக்கபட்டிருக்கலாம் என்று அனுமானித்து விடுகிறோம்.

இதன் மூலம் ஒரு கேள்வி எழுகிறது: அவர்களை பார்த்து ஒரு வித அசிங்கமான உணர்வினால், நாம் அவர்களிடம் மிகவும் குறைவாக கொடுக்கிறோமோ? அல்லது அச்சம் தான் நம்மை ஒதுங்க வைக்கிறதோ? அல்லது ஒரு வித மன்னிக்க முடியாத கோபத்தினால் நாம் நம்மிடம் உள்ளதை கொடுப்பதில்லையா? கடவுளோடு இனைந்து, நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்க, இந்த மாதிரியான பகிர்தல் இல்லாத வாழ்வு இடம் கொடுக்காது. நம்மில் அன்பு தான் முதன்மை இடத்தை பிடித்து, அதன் மூலம் ஊக்குவிக்கபட்டு, அன்பினால் எல்லா காரியங்களையும் செய்தல் வேண்டும். அன்பிற்கு எல்லை இல்லை. அன்பு எப்பொழுதுமே தாராள குணத்தையே கொடுக்கும்.

இரண்டாவது வாசகத்தில், “விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு” என்று சொல்வதை நாம் கேட்கிறோம். யாரோடு போராடுவது? நம்மோடு! நேற்றைய விட, இன்று இன்னும் பரிசுத்தமாக இருக்கிறோமோ? தாராள குணம் இன்னும் வளர்ந்திருக்கிறதா? பரிசுத்த வாழ்வில் இன்னும் சக்தியோடு, ஆற்றலுடன் இருக்கிறீர்களா? உங்கள் கடின உழைப்பினால், இன்னும் அதிகம் அன்பு செலுத்துபவர்களாகவும், தாராளாமாக கொடுப்பதிலும் தயாராய் இருக்கிறீர்களா?
© 2013 by Terry A. Modica