மார்ச் 3, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 3ம் ஞாயிறு
Ex 3:1-8a, 13-15
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
Ps 103: 1-4, 6-8, 11
1 Cor 10:1-6, 10-12
Luke 13:1-9
லூக்கா நற்செய்தி,
13:1-9
மனம் மாறாவிடில் அழிவு
1 அவ்வேளையில்
சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான்
என்ற செய்தியை அறிவித்தனர்.2 அவர் அவர்களிடம் மறுமொழியாக, '
இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப்
பாவிகள் என நினைக்கிறீர்களா?3 அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம்
மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்.4 சீலோவாமிலே கோபுரம்
விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற
எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா?5 அப்படி அல்ல என
உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்
' என்றார்.
காய்க்காத அத்திமரம்
6 மேலும்,
இயேசு இந்த உவமையைக் கூறினார்: ' ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில்
அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது
எதையும் காணவில்லை.7 எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ' பாரும், மூன்று
ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே
இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்? ' என்றார்.8 தொழிலாளர்
மறுமொழியாக, ' ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி
எருபோடுவேன்.9 அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை
வெட்டிவிடலாம் ' என்று அவரிடம் கூறினார். '
(thanks to www.arulvakku.com )
சிலர் மிகவும்
புன்படுத்துபவர்களாயும், மோசமானவர்களாகவும், அநியாயமாகவும் இருப்பவர்களுக்கு, சில
நேரங்களில், மிக பெரிய அடி விழுந்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இயற்கையாக
நியாய தீர்ப்பு கிடைத்துவிட்டது என்றும், அவர்களை விட்டு விலகியே இருப்போம்.
இதனை இந்த வார நற்செய்தியில்,
குறிப்பிடுகிறார். யாரையும் மிக பெரிய பாவி என்று நாம் சொல்லிவிட முடியாது என்பதை
நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். நம்மைவிட மிக பெரிய பாவம் அவர்
செய்தாலும், கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்தாலும், சாத்தானின் வேலைகள்
செய்தாலும், அவர் ஒன்றும் நம்மை விட பெரிய பாவி இல்லை.
ஒவ்வொருவரும் கடவுளை போல
படைக்கபட்டிருக்கிறார்கள். மிகவும் மோசமானவர்கள் கூட கடவுளை போல உருவாக்கபட்டிருக்கிறார்கள்.
கடவுளுக்கு எதிர்மாறாக செயல்கள் செய்தாலும், அவர்களையும் இயேசு அன்பு செய்கிறார்.
அவர்களுக்காகவும் சேர்த்து தான் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் மரணமடைந்தார். கடவுள்
எப்படி படைத்தாரோ, எதற்காக படைத்தாரோ, அதற்கு மாறாக, நடந்து கொள்வது என்பது,
மிகபெரிய துயரமான விசயம். மேலும், யாரும் அவர்களை கிறிஸ்துவின் அன்பான வாழ்விற்கு
அழைப்பு விடுக்காவிடில், அது இன்னும் துயரமாகும். கிறிஸ்து அவர்களை அன்பு செய்தது
போல, நாமும் அவர்கள் மேல் அன்பு காட்டி, அரவனைக்க வேண்டும்.
யாருமே தீயவர்கள் கிடையாது.
தியவற்றை செய்பவர்கள், கடவுளின் குழந்தைகள், ஆனால், அவர்கள் யார் என்ற உண்மையை அறியாதவர்கள்.
சாத்தானின் சூழ்ச்சியில் விழுந்தவர்கள், மேலும் இப்படி தீயவற்றோடு வாழ்வது நல்ல
வாழ்வு என்று மயக்கப்பட்டிருக்கிறார்கள். பாவமில்லாத தூய இயேசு நம்மையெல்லாம்
மீட்டு, அதன் பொருட்டு நம் பாவங்கள் மன்னிக்கபடும் என்பதை இன்னும் அவர்கள்
அறியாமலிருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் வருத்தபட வேண்டும். அவர்கள் வாழ்வில்
நடக்கும் துயரங்களுக்காகவும், அவர்கள் ஆண்மாவிற்காகவும், இயேசுவை போல நாம்
துயரமடைய வேண்டும்.
ஒவ்வொரு மனிதனின் உள்ளம் உடையும்
பொழுது, அவர்களுக்காக நாம் துக்கபடாமல், கண்டு கொள்ளாமல், இருக்கும்பொழுது நாம்
பாவம் செய்கிறோம். சிலுவையில் இயேசு என்ன செய்தாரோ அதனை நாம் மதிக்காமல் நடந்து
கொள்கிறோம். நாம் நம் ஆண்மாவிற்கு சேதம் விளைவிக்கிறோம்.
உங்களுக்கு எதிராக பாவம்
செய்தவர்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியில் வரும் அத்திமரத்தை போல. உங்களால்
அவர்களை அனுக முடியும் என்றால், அவர்களது ஆண்மாவை தயார் செய்ய இயேசு அழைக்கிறார்.
அவர்கள் ஆண்மாவிற்கு உரமிடவும், உற்சாகபடுத்தவும் உங்களை இயேசு அழைக்கிறார். அவர்கள்
மேல் அன்பையும், நற்செய்தியையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால் அவர்கள் தயாராய் இருக்கும் பொழுது உங்கள் வார்த்தைகளால், அன்பினையும் நல்வழியையும்
காட்டுங்கள். சாந்தமாகவும், கட்டாயமாகவும், சரியான வழியில் செல்ல அவர்களுக்கு
அழைப்பு விடுங்கள்.
கவனமாக கேட்டு கொள்ளுங்கள்,
இயேசு உங்களை ஒன்றும், நோயாளியையோ, பாவம் செய்பவர்களையோ, நிரந்தரமாக உங்களோடு
வைத்து கொள்ள சொல்லவில்லை. நம்மால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்து முடித்த
பின்பும், தீயவர்கள் மாறவில்லை என்றால், நம் தோட்டத்திற்கு நாம் செய்யும் முதல்
வேலை, அந்த மரத்தை வெட்டுவது தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால்,
அவர்களிடமிருந்து விலகி செல்வது, சரியான அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அவர்களை
கொண்டு சென்று அவர்களின் தீய நடவடிக்கைகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது. இதனையும்
அன்புடன் செய்ய வேண்டும். கீழே விழுந்த மரம் கூட மக்கி போய் உரமாக மாறி புதிய செடிகளுக்கும்,
மரங்களுக்கும் புத்துயிர் கொடுக்கும்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment