Friday, March 29, 2013

மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 31 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் ஞாயிறு, ஆண்டவரின் உயிர்த்தெழுதல்
Acts 10:34a, 37-43
Ps 118:1-2, 16-17, 22-23
Colossians 3:1-4 or 1 Corinthians 5:6b-8
John 20:1-9 or Mark 16:1-7 or Luke 24:13-35

இயேசு உயிர்த் தெழுதல்
(மத் 28:1 - 10; மாற் 16:1 - 8; லூக் 24:1 - 12)
1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.2 எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, ' ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே கொண்டு வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை! ' என்றார்.3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.5 அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை.6 அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.8 பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.9 இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.10 பின்பு சீடர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றார்கள்.
(thanks to www.arulvakku.com)


அல்லேலூயா! இந்த புனித வாரத்தில் நாம் மேற்கொண்ட தியானத்தினாலும், தவக்காலத்தில் யேசுவோடு நெருங்கியிருப்பதாலும், நம்மில் ஏற்பட்டுள்ள அதிக விசுவாசத்திற்காகவும், குணமடைதலுக்காகவும் இன்று கொண்டாடுங்கள்.

மோட்சத்திற்கு செல்லும் வழி, கதவு எல்லாமே சிலுவைதான். ஈஸ்டரின் மகிமையை நாம் நமது உள்ளத்திலும், நமது தேவைகளிலும், ஆசைகளிலும் அனுபவிக்கும் முன்பு- நமது துயரங்களை, தியாகத்தை ஏற்றுகொண்டு, நம் வாழ்வோடு இயேசுவை இனைக்கும் கருவியாக்க வேண்டும்.

தற்போது, ஈஸ்டர் சந்தோசம் யேசு சிலுவையில் என்ன செய்தாரோ அதற்காக கொண்டாடுவது மட்டும் அல்லாமல், அவரோடு தொடர்ந்து, அவரது பயனத்தில், ஒவ்வொரு அடியாக அவரோடு எடுத்து வைத்து நடந்தோமானால், இந்த ஈஸ்டர் சந்தோசம் நம்மில்  தொடர்ந்து இருக்கும். உண்மையாகவே விசுவாசத்தில் வளர வேண்டுமானால், யேசு என்ன செய்தாரோ, அதனை நாமும் செய்ய வேண்டும். அவரது இறைசேவையில் இனைந்து, மற்றவர்களுக்கு உதவவும், அவர்கள் கடவுளோடு நட்பு கொள்ளவும், நாம் தொடர்ந்து இறைசேவையாற்ற வேண்டும். இச் சேவையில் நாம் சிலுவையை தொடர்ந்து எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தியாகமும், கஷ்டமும் இல்லாமல், நாம் மீட்பை அடைய முடியாது.


சிலுவையின் வெற்றி தான், ஈஸ்டர் அன்று நாம் கூறும் அல்லேலூயா ஆகும். இதன் மூலம், நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், வாழ்க்கை முழுதும் ப்ரச்சினையே இல்லாமல் இருந்தால் தான், நாம் சந்தோசமாக இருக்க முடியும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும், கடவுள் நம்மை சோதனைகளிலிருந்தும், ப்ரச்சினைகளிலிருந்தும், நம்மை காத்து, தீயவற்றிலிருந்து நம்மை காத்து நல்லவற்றை கொடுக்கிறார் என்ற விசுவாசத்தில் வளரவேண்டும்.


சிலர் நம்மிடம் கோபமான வார்த்தைகளால் பேசும்பொழுது, அமைதியான முறையில் நாம் பதில் கூறுவது நம்முடைய சிலுவையாகும். நாம் அந்த கோபத்திலுருந்து வெளியே செல்லலாம் என்று நினைத்தாலும், அவர்களிடம் நாம் அரவனைப்பது போன்று (நமக்கு அசௌகரியமாக இருந்தாலும்) நாம் நடந்து கொள்வது, நமது சிலுவையாகும். நமக்கு அநியாயம் செய்கிறவர்களிடம், நாம் பழிவாங்க நினைத்தாலும்,  நாம் அவர்களுக்கு நல்லது செய்கிற பொழுது அது நம் சிலுவையாக மாறுகிறது. கடவுளரசிற்காக நாம் சிலரது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக நாம் மீட்பின் சந்தோசத்தை அனுபவிக்கிறோம்.

கடினமான நேரத்தில் கொடுக்கபடும் அன்பு, ஆழ்ந்த அன்பாகும், தியாகத்தின் அன்பாகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மற்றவர்களின் நித்திய வாழ்விற்கு பயன்படுவதாகும். அதனால், நமது தியாகங்கள், அளவிடமுடியாத பலன்களை கொண்டதாக இருக்கும். சாத்தானை வெற்றி கொண்டு, இயேசுவோடு, நாமும் மேலெழுந்து அவரது மகிமையில் நிலைத்திருப்பது ஈஸ்டர் ஞாயிறின் கொண்டாட்டமாகும்.
© 2013 by Terry A. Modica

No comments: