ஏப்ரல் 14,
2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின்
3ம் ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
Ps 30:2, 4-6, 11-13
Rev 5:11-14
John 21:1-19
யோவான் நற்செய்தி
அதிகாரம்
21:1-19
8. பிற்சேர்க்கை
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1 பின்னர் இயேசு தம்
சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன்
பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல்,
செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,3 அப்போது
சீமோன் பேதுரு அவர்களிடம், ' நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், '
நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு
அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.4 ஏற்கெனவே விடியற்காலை
ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து
கொள்ளவில்லை.5 இயேசு அவர்களிடம், ' பிள்ளைகளே! மீன் ஒன்றும்
படவில்லையா? ' என்று
கேட்டார். அதற்கு அவர்கள், ' இல்லை ' என்றார்கள்.6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை
வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே
வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க
முடியவில்லை.7 இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், '
அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த
சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.8 மற்றச்
சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள்
கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான்
இருந்தார்கள்.9 படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ
மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு
அப்பமும் இருந்தது.10 இயேசு அவர்களிடம், ' நீங்கள் இப்போது பிடித்தவற்றில்
சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார்.11சீமோன் பேதுரு படகில் ஏறி,
வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை
நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.12 இயேசு
அவர்களிடம், '
உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், ' நீர் யார்? ' என்று இயேசுவிடம்
கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து
கொண்டார்கள்.13 இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து
அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.14 இவ்வாறு,
இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம்
முறையாகத் தோன்றினார்.
இயேசுவும் பேதுருவும்
15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன்
பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக
என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே,
எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு
அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார்.
16 இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ
என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே,
எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு
அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு
அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம்
அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், '
ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத
ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே
இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு
முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக்
கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக
உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து
கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்.
இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் 'என்றார்.
(thanks to www.arulvakku.com)
எப்பொழுதுமே இந்த வார
நற்செய்தியை வாசிக்கும்பொழுது, சீடர்கள் கரைக்கு வரும் முன்பே , இயேசுவிற்கு அவர்
சுட்டு கொண்டிருந்த மீண்கள் எங்கிருந்து வந்தது? அவர் தனியாக வலை வைத்திருந்தாரா?
ரொட்டியும் மீனையும், சந்தையிலிருந்து வாங்கி வந்திருந்தாரா? அப்படி சந்தைக்கு
சென்றிருந்தால், யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? அல்லது மீன்
தண்ணியிலிருந்து துள்ளி குதித்து அந்த
அடுப்பிற்கு வந்த்தா? சாத்தான் கல்லை உணவாக மாற்றி அவரை சோதனை செய்தது போல,
இயேசுவும் கல்லை ரொட்டி துண்டாக மாற்றினாரா?
ரொட்டி துண்டுகளையும், மீனையும்
பல மடங்காக இயேசு பெருக்கிய அற்புதத்தை நினைவில் கொள்வோம். இங்கேயும் அதே போல் ஒரு
அற்புதம். குறைந்த அளவாக இருந்தாலும், அற்புதம் அற்புதம் தான். இவ்வுலகை படைத்த
கடவுள், அளவிடமுடியாத செல்வங்களையும் பொருட்களையும் , அன்பையும் வைத்திருக்கிறார்.
எல்லாவற்றிலும் தேவைக்கு மேல் வைத்திருக்கிறார். நாம் எவ்வளவு வைத்திருக்கிறோம் என்பதை
பொறுத்து அல்ல. அவர் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதாகும்.
கடவுளுக்கு நம்மிடமிருந்து என்ன விரும்புகிறார் என்றால்,
கடவுள் நமக்கு கொடுத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நீங்கள் விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்
என்பது தான். ரொட்டியும், மீணும் பல மடங்காக பெருக்கிய அற்புத நிகழ்வில், இயேசு
சீடர்களிடம் அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுக்க சொல்கிறார். இன்றைய நிகழ்வில்,
சீடர்கள் பிடித்த மீன்களை கொஞ்சம் எடுத்து
வர சொல்லி, இயேசுவோடு அவருடைய உணவோடு சேர்த்து கொள்ள செய்கிறார்.
அதன் பிறகு, இராயப்பரிடம், இயேசு
மேல் அவர் எவ்வளவு அன்பு கொண்டிருந்தாரோ, அதே அன்பை , இயேசுவின் ஆட்டு
மந்தையிடமும், பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளபடுகிறார். அந்த அன்பு எங்கிருந்து
வந்தது? இராயப்பர் ஒன்றும் அவருடைய சொந்த முயற்சியால் மற்றவர்களை அன்பு
செய்யவில்லை. நாமும் அப்படி தான். இராய்ப்பார் கடவுளின் அன்புடன், அவருள் கடவுளின்
அன்பு இனைத்து படைக்கபட்டிருக்கிறார். நாமும் அப்படிதான் கடவுளீன் அன்போடு படைக்கப்பட்டிருக்கிறோம்.
கடவுளைபோலவே நாமும் படைக்கப்பட்டிருக்கிறோம், கடவுள் என்றால் அன்பு.
கடவுளின் அளவில்லாத அன்பை
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இராயப்பரிடம் கேட்டுகொள்ளப்பட்டது. அதன்
மூலம், இறையரசு, இவ்வுலகில் தொடர்ந்து இங்கே பரவ முடியும் என்பதற்காக தான். கடவுள்
உங்களிடம் என்ன கேட்கிறார்? நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பதை பொறுத்து
உங்கள் பதில் இருக்க வேண்டும் என்பதில்லை. கடவுளிடம் உள்ளதை எவ்வளவு
விருப்பத்துடன், நீங்கள் பகிர்ந்து கொள்ள
தயாராய் இருக்கிறீர்கள் என்பது தான்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment