ஏப்ரல் 7 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின் 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31
Ps 118:1-4, 13-15, 22-24
Rev 1:9-13, 17-19
John 20:19-31
யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19 அன்று
வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள்
இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து
அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று
வாழ்த்தினார்.20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம்
காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21இயேசு மீண்டும்
அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல
நானும் உங்களை அனுப்புகிறேன் 'என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல்
ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள்
மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை
மன்னிக்கப்படா ' என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்
24 பன்னிருவருள்
ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச்
சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய
கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர்
விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26எட்டு
நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று
தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து
அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று
வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன்
விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
' என்றார்.28தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! '
என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே
நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம்
30 வேறு
பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம்
இந்நூலில் எழுதப்படவில்லை.31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள்
நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை
எழுதப் பெற்றுள்ளன.
(thanks to
www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி,
பரிசுத்த ஆவியின் வரவிற்கு அடித்தளமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியை அன்பளிப்பாக
சீடர்களுக்கு கொடுக்கும் முன்பு, அமைதியையும், அவரது இதயத்தையும் சீடர்களுக்கு
வழங்குகிறார். இயற்கையை தாண்டிய இந்த அனபளிப்பு, நமது இதயத்தை ஊடுருவி செல்கிறது.
கிறிஸ்து,, நாம் ப்ரச்சினைகளிலும, கஷ்டங்களிலும் இருக்கும்போது, நம்மை அவரது
வருகையினால் அமைதிபடுத்தும் அன்பளிப்பு ஆகும்.
இந்த வரத்தை, அவரின் முதல் 12
சீடர்களுக்கும், இயேசு இரண்டு முறை அதே சந்திப்பில், அவர்களுக்கு வழங்குகிறார். பிறகு,
ஆண்டவரின் ஆவியை, (வாழ்வின் ஊற்றான), வழங்கி, குருவாக யாருக்கு மன்னிப்பு வழங்குகிறீர்களோ
அவர்கள் மன்னிக்கபடுவர் என்றும், அவர்களுக்கு அமைதியையும் அன்பளிப்பாக
வழங்குகிறார்.
இயேசுவால் வழங்கப்பட்ட, இந்த
அமைதியின் அன்பளிப்பு, குருக்களின் மூலமாக, புனிதமான பாவசங்கீர்த்தனத்தின் மூலமாக,
நாம் பெறுகிறோம். இதன் மூலம், நாம் பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்கு முடிகிறது.
இயேசு இன்றும் கடவுளின் ஆவியை நமக்கு கொடுத்து கொண்டிருக்கிறார். இதன் மூலம்
கடவுளின் ப்ரசன்னமும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கிறது. அந்த ஆவி தான் இவ்வுலகை
உருவாக்கியது, மேலும், நம்மை பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்க செய்கிறது. பரிசுத்த
ஆவியின் மூலம் தான், கடவுளின் பரிசுத்தம் நம்மை செயல்படவும், நம்மில் பிரகாசிக்கவும் செய்கிறது.
இரக்கத்தின் தெய்வமான இயேசு
நமக்காக சிலுவையில் மரணமடைந்து, அவரது ஆவியை நமக்கு கொடுத்துள்ளர். அதன் மூலம், நம்மில்
பரிசுத்தம் இல்லாததையும், ஆவியோடு இல்லாததையும், நமது பாவத்தையும் விட்டொழித்து,
கடவுளின் மன்னிப்பின் மூலமாக நாம் பரிசுத்த வாழ்வில் வாழ் முடியும்.
“பரலோகத்தில்
இருக்கிற எங்கள் பிதாவே” என்ற ஜெபத்தை சொல்லும் பொழுதெல்லாம், மிகவும் மெதுவாக,
அர்த்தத்தோடு ஜெபியுங்கள். ஒவ்வொரு வாத்தையின் அர்த்தத்தையும் தியானித்து
சொல்லுங்கள். “எங்களுக்கு எதிராக பாவம் செய்பவர்களை மன்னிப்பது போல, எங்கள்
பாவங்களையும் மன்னியும்” என்று சொல்கிறோம்
அல்லவா. உங்களை துன்புறுத்திய நபரை, இன்னும் அதே நோக்கத்தில் இருப்பவர்களை நினைத்து, மனப்பூர்வமாக அவர்களை இந்த ஜெப
நேரத்தில் மன்னியுங்கள்.
மாறாக, நீங்கள் அவர்களை மன்னிக்காவிட்டால், அவர்களின்
ஆண்மாவும் , உங்கள் ஆண்மாவும் பாதிக்கபடும். ஏனெனில், அவர்களுக்கு கடவுளின்
மன்னிப்பை பெறும் வாய்ப்பை தடுத்து விடுகிறீர்கள் நீங்கள் மற்றவர்களை
மன்னிக்காததால், கடவுள் உங்கள் பாவங்களை மன்னிக்கும் வாய்ப்பை தடுத்து
விடுகீறீர்கள். அதனால் உங்கள் பாவங்களும் மன்னிக்கபடவில்லை.
மன்னிப்பது
என்பது, அவர்களின் பாவங்களை ஏற்று கொள்வதில்லை. ஆனால், அவர்களின் பாவத்திற்கு
தண்டனை கொடுக்காமலிருப்பது தான் நம் முதல் வேலையாகும். அவர்களுக்கு தகுதியிருந்தாலும், இல்லையென்றாலும்,
அவர்களை கிறிஸ்துவின் அமைதியின் அன்பளிப்பாக அன்பு செய்தல் வேண்டும்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment