Saturday, April 20, 2013

ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஏப்ரல் 21, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
பாஸ்கா காலத்தின்  4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Rev 7:9, 14b-17
John 10:27-30

யோவான் நற்செய்தி
அதிகாரம் 10:27-30
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.28 நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.29 அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.http://www.arulvakku.com/images/footnote.jpg30 நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி மிகவும் சுருக்கமாகவும், இயேசுவின் நோக்கத்தையும் தெரிவிக்கிறது. நமது நல்லாயனை மட்டுமே நாம் பின்பற்றி செல்ல வேண்டும். அவர் ஒருவரை மட்டும் தான் நாம் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம்.

மற்றவர்கள் நம் மேல் அக்கறை கொண்டவர்கள், நாம் அவர்களுக்கு செவி சாய்க்கலாம். ஆனால் கண்ணை மூடி கொண்டு அவர்களை பின்பற்றுவதில்லை. அவர்களுள் உள்ள நல்ல உயர்ந்த குணத்தை கூட நாம் வளர்த்து கொள்வதில்லை. ஆயர்க்ளையும், பங்கு குருக்களையும், நம் கம்பெனி முதலாளீகளையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஆனால் அவர்கள் அனைவரும் பாவம் செய்கிறவர்கள். அவர்களது பொறுப்புகளை, முழுதாக புரிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பரிசுத்த ஆவியின் துனையை பெற்று, அவரிடம் வேண்டி, அவரின் அறிவுரையோடு நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொள்ளாமல், நாம் வேறாக நடக்கும் பொழுது, கடவுள் வருத்தம் அடைவார்.

இயேசுவை மட்டும் தான் கண்ணை மூடிகொண்டு நாம் நம்பலாம். அவர்தான் முழுமையான பரிசுத்தமானவர், எல்லாம் அறிந்தவர், மேலும் பாவம் செய்யாதவர். அவரால் தான் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுக்க தெரியும், மேலும், சாத்தானின் தூண்டுதலுக்கு நாம் இரையாகாமல் பார்த்து கொள்வார். நமக்கு எது உகந்ததோ, எது சரியோ உங்கள் வாழ்விற்கு எது தேவையோ, மற்றும், எல்லோருக்கும் சரியான வழியை, முடிவை கொடுப்பவராக இருக்கிறார். மேலும், இயேசு மட்டும் தான் நம்மை மோட்சத்திற்கு நம்மை செல்லும் பாதையில், ஏற்படும் ஆபத்துகளை தாண்டி அழைத்து செல்ல முடியும்.

இயேசுவின் திட்டத்தை தாண்டி, நாம் தவறாக செல்லும்பொழுது, நம்மை பார்த்து புன்னகைத்து, நமது அன்பினை ஏற்று, நாம் இன்னும் சரியான பாதைக்கு வருவோம் என்ற எண்ணத்தோடும் இருப்பவர் இயேசு ஒருவர் மட்டுமே. அதனால் தான் நம்மை பார்த்து அவர் புன்னகைக்கிறார். புதிய திட்டத்தை நம்மில் கொண்டு வர அவருக்கு தெரியும். இரக்கத்துடன், நம் கையை புடித்து கொள்வார், அதன் மூலம் தந்தை கடவுளை விட்டு நாம் விலகாமல் பார்த்து கொள்வார். நாம் யாரையாவது  நம்பாமல் இருக்கும்போது, நம்மையே நம்பாமல் இருக்கும்போது கூட, என்ன நடந்தாலும், நாம் அவரை கண்டிப்பாக நம்பலாம். எப்படி விலகி சென்றாலும், நம்மை மீண்டும் அவர் அழைத்து செல்வார். நமது தவறுகளிலிருந்து நம்மை மீட்டு, நல்லதாக மாற்றி, நம்மை மீட்பவர் அவரே. ஏனெனில், நாம் அவரை அன்பு செய்கிறோம், நல்லதே செய்ய ஆசைபடுகிறோம். நமது பாதுகாப்பை எப்பொழுதும் காப்பவர். நம்மை மீட்பவர். கெட்டதிலிருந்து  நல்லதை கொடுப்பவர். நமது பாவத்திலிருந்து நம்மை நல்வழிக்கு கொண்டு வருபவர். எப்பொழுதுமே நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர். நம்மை சரியான வழியில் கொண்டு செல்பவர்.

© 2013 by Terry A. Modica

No comments: