Friday, August 30, 2013

செப்டம்பர் 1, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப்டம்பர் 1, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Sirach 3:17-18, 20, 28-29
Psalm 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14

லூக்கா நற்செய்தி
அதிகாரம்: 14: 1, 7-14
1 ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.2 
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனை
7 விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள்.11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில்,  நான் நல்ல செயல்கள் செய்வதால் எனது எதிர்பார்ப்பு என்ன ? நல்ல செயல்களின் நோக்கம் என்ன? மற்றவர்கள்லின் நன்மைகளுக்காக அதனை செய்கிறோமோ? அல்லது சுய நலத்திற்காகவா? என்ற கேள்விகள் கேட்கபடுகின்றன?

மற்றவர்களுக்கு நன்மை செய்வதால்,  நமக்கு இன்னும் பலன் கிடைக்கும் என்று நினைத்து செய்தால், நாம் கிறிஸ்துவை போல செய்யவில்லை. இதனை இயேசு விருந்தோடு ஒப்பீட்டு சொல்கிறார். யார் உங்களுக்கு திருப்பி செலுத்த முடியாதவரோ, அவரை விருந்துக்கு அழையுங்கள் என்று சொல்கிறார். இதனை பரிசுத்தமாக செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதனை அப்படியே நாம் மாற்றி எடுத்து கொண்டால், முக்கியமான கருத்தை நாம் விட்டு விடுகிறோம்.

உண்மையான செய்தி என்ன என்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பிற்காக செய்தல் வேண்டும். எதனையும் நாம் எதிர்பார்த்து செய்தல் கூடாது. சொந்த நலனை விட்டு விட வேண்டும். மற்றவர்களின் நலனுக்காக நாம் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். இப்படி செய்வதால் ஒரு பயனும் இல்லை என்று தோன்றலாம் ஆனால், உங்களுக்கு அவர்கள் எப்படி நன்றி சொல்வார்கள் என்று பாருங்கள். எப்படியெல்லாம் பாராட்டுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதனை விட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?

மேலும், சிலர் நமக்கு எதிராக  பாவம் செய்யும்பொழுது, அவர்கள் மனம் திருந்த வேண்டும் என்று நாம் அவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் ஆன்மாவிற்காக நாம் ஜெபித்தல் வேண்டும். மேலும், அவர்கள் மாறினால், நமக்கு சுலபமாக இருக்கும். ஆனால் நமது சுலபமான வாழ்க்கைகாக நாம் ஜெபிக்க வேண்டியதில்லை.

கிறிஸ்துவை பின் செல்பவர்களாக, நாம் செய்யும் நன்மைக்கு பிரதிபலனாக நாம் ஆசிர்வாதம் பெறும்பொழுது, அது நமக்கு கூடுதல் பலனாகும். ஆனால் அதுவே நம் நோக்கமல்ல. உரிமையோடு நாம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம், ஆனால், அதுவே நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை.

நமது நோக்கமும், எதிர்பார்ப்பும்,  சரியாக தெரிந்த பின்பு, நாம் இயேசுவை போல வாழவும், நாமே தெரிந்து கொள்ள முடியும், இயேசுவே, “நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவர் கூறியது இப்பொழுதே நமக்கும் ஆரம்ப்பிக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுவை போல நாம் மாறும்போது நமக்கும் கைமாறு கிடைக்க ஆரம்பிக்கிறது.
.  
நமக்கு பலனாக கிடைக்கும் அருளானது, இறையரசிற்காக நம்மை செய்ய அழைக்கும் எல்லா செயல்களுக்கும், நமக்கு ஆற்றால் தந்து உதவுகிறது. சந்தோசமாக, வேறு பல ஆசிர்வாதத்தையும்  நாம் பெற முடியும், ஆனால் அதுவே  நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.
© 2013 by Terry A. Modica


Friday, August 23, 2013

ஆகஸ்டு 25 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 25 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Psalm 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30


இடுக்கமான வாயில்
22 இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 ' இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். '25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம் சொல்வார்.28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். ' 
(Thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, மோட்சத்திற்கு செல்லும், வழிகளுக்கான அடையாள சின்னங்கள், அதுவும் குறுகிய வழியான அந்த  நித்திய வாழ்விற்கு செல்லும் வழிக்கான வழிகாட்டியகளை  நமக்கு காட்டுகிறது. இசையாஸ், சொல்கிறார், ‘கடவுளுக்கு   நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் தெரியும், நம் மனதில் என்ன இருக்கிறது என்றும் கடவுளுக்கு தெரியும் என்று சொல்கிறார். நாம் இறந்து கடவுளிடம் செல்லும் பொழுது, கடவுளின் முழு அருளை நாம் பார்க்க, நம்மை நாமே சுத்த படுத்தவேண்டும். அவர் நம்மில் பல அடையாளங்களை விட்டு செல்கிறார். அது இயேசு தான், - அவரது வாழ்வு தான்- எப்படி வாழ்ந்தார், எப்படி இறந்தார் – அனைத்தும் மோட்சத்திற்கு செல்லும் அடையாளங்களும், வழிகாட்டுதலும் ஆகும்.


“ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்”, என்று இயேசு சொல்கிறார். நித்திய வாழ்விற்கு செல்ல  நாமும் முயல வேண்டும்.

நற்செய்தி முழுவதும்,இயேசு நமக்கு நித்திய வாழ்விற்கான பதிலை கொடுத்துள்ளார். நாம் நம் அன்பில் முழுமையாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். அதனால், நாம் செய்யும் சில தவறுகள், குற்றத்துடனும் இருப்பதால், மோட்சம் நமக்கு கிடைக்காது என்று அர்த்தமல்ல. மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அன்பை தூர எறிந்தால், நாம் அந்த சாவியை தூர எறிகிறோம்.

இருந்தாலும்,  நாம் பாவம் செய்தாலும், எப்பொழுதுமே, நாம் அன்பை தூர எறிவதில்லை. ஆனால் பரிசுத்தமான அன்புடன் நாம் இருக்க வேண்டும் என்று நமக்கு சொல்லபடுகிறது. இதன் அர்த்தம் என்ன என்றால், முழுமனதுடன், முழுமையாக அன்பு செய்ய வேண்டும். எவ்வித  நிபந்தனையுமின்றி, தியாகத்துடன், நாம் அன்பு செய்தல் வேண்டும்.

பரிசுத்தமான அன்பில் நிலைத்திருக்க, நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் இருந்து மற்றவர்களை சென்றடைய வேண்டும். நாமே, பல முறை, முழுமையான அன்பை வெளிபடுத்துவதில்லை. ஆனால், கடவுளிடம் நாம் தஞ்சமடைந்து, அவரின் அன்பை மற்றவர்களுக்காக நம்மிடம் கொடுக்க இறைஞ்சினால், நாம் முழுமையான அன்பை வெளிப்படுத்த முடியும். கடவுளின் அன்பில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்க, அதில் நம்பிக்கையுடன் இருக்க, அவரின் அன்பை தடுத்து நிறுத்தும் எதையும், நாம் தூக்கி எறிய வேண்டும். மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்க வேண்டும் என துடிப்பது, வெறுப்புடன் இருப்பது, தெரிந்தே மற்றவர்களின் தேவை அறிந்தும், அதனை செய்யாமல் இருப்பது. மகிழ்ச்சியை, சந்தோசத்தை வெறுக்கும் மனப்பான்மை, ஆகிய இவற்றை, நாம் தூர எறிதல் வேண்டும்.

இரண்டாவது வாசகத்தில், கடவுளின் ஒழுங்கை, கட்டுபாட்டை, அவமதித்து விடாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கு எவ்வளவு துயரம் வந்தாலும், நாம் கடவுளின் முழு அன்பை, அவரின் பரிசுத்தத்தை நாம் அவமதிக்க கூடாது. இதனையெல்லாம், கடவுள், நாம் பரிசுத்த அன்பு கொண்டிருக்க உபயோகிக்கிறார். இந்த சோதனைகளையெல்லாம், நாம் அன்பிள் வளர நல்ல வாய்ப்பாக ஏற்றுகொள்ள வேண்டும். அந்த சோதனையான நேரத்தில், நாம், கடவுளை நாடினால், அவர்  நம்மை அன்பில் நிலைத்திருக்க செய்வார். அப்பொழுது, நாம் இயேசுவை போல மாறுவோம். அப்பொழுது, மோட்சத்தின் பாதையை நேராக்குகிறோம். நமது பரிசுத்த வாழ்வில், ஒட்டாமலும், முடமாகவும் இருப்பதெல்லாம் குணமாக்கபட்டுவிடும்.

© 2013 by Terry A. Modica


Friday, August 16, 2013

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 18, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆண்டின் 20ம் ஞாயிறு
Jeremiah 38:4-6, 8-10
Psalm 40:2-4, 18 (with 14b)
Hebrews 12:1-4
Luke 12:49-53
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 12:49-53
பிளவு ஏற்படுதல்

49 மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.50 ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்.51 மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர்.53 தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.

(THANKS to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில்,  மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வரவில்லை என்கிறார். மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். என்கிறார். மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன் என்றும் சொல்லி, அவரை பின்செல்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியை பெறும் வரை அவர் மனம் நெருக்கடியோடு இருந்தார்.  பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் பின் சென்றவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று இவ்வுலகை மாற்றுகின்றனர். இது நித்திய அமைதியை கொடுக்கிறது. முதலில் நமக்கு அமைதி அடைகிறோம்., பிறகு நம் மூலம் மற்றாவர்களூக்கும் அந்த  அமைதி பரவுகிறது.

நம்முடைய குறைகளை, பரிசுத்த ஆவி தான் சுத்த படுத்துகிறார். – அன்பில்லாத நமது நடைத்தைகள் – அதனால் ஏற்படும் ப்ரச்சினைகள், ஒற்றுமையின்மை, குழப்பங்கள் , சண்டை சச்சரவுகள்.  அனைத்தையும் பரிசுத்த ஆவி கழுவி தூர எறிகிறார். அதனால் தான் நாம் அமைதி பெறுகிறோம். பல சோதனைகளுக்கும் நடுவிலும், பலர் நம்மை தாக்கினாலும் நாம அமைதியாக இருப்பது பரிசுத்த ஆவியினால் தான். கடவுளின் அமைதியை பரப்பும்  ஊடகமாக  நாம் இருக்க பரிசுத்த ஆவியின் துனையோடு,  நாம் இருக்க இவ்வுலகம் நம்மை அழைக்கிறது. பரிசுத்த ஆவியின் தீ உங்கள் உள்ளத்தில் உணரவில்லியெனில், இயேசு உங்கள் மேல் மண வேதனையோடு உள்ளார்.

உங்கள் சுற்றியிருக்கும், சாத்தானை நினைத்து கொள்ளூங்கள், விரைவில் ஒரு முடிவிற்கு வந்துவிடும் என்று நீங்கள் நம்பிய்ருக்கும்பொழுது, இயேசு பரிசுத்த ஆவியின் நெருப்பை எறிய செய்து , உங்கள் பாவங்களை, குறைகளை, சாத்தானை எறிந்து போகச் செய்ய ஆசைபடுகிறார். இயேசு என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்ன
ஞாணஸ்நாணத்தை பற்றி அவர் பேசுகிறார். தண்ணீரால் ஆன ஞாணஸ்நாணத்தை பற்றியல்ல, அதனை ஏற்கனவே அவர் பெற்றுவிட்டார். தியாகத்தால், அவர் தன்னையே இழந்த ,மிகுந்த வலியும், வேதனையையும், அடைந்த  ஞாணஸ்நாணம் . உள்ள உறுதியுடன் , தனது சிலுவை பயனத்தை ,அன்பின் மிகுதியால், சாத்தானிடமிருந்து, நம்மை காப்பாற்ற அவர் தன்னையே தியாகம் செய்தார்.

சாத்தானை வீழ்த்த, நாம் இயேசுவை போலவே மாற வேண்டும். நாம் அதற்காக நம்மையே தியாகம் செய்ய எவ்வளவு வளர்ந்திருக்கிறோம் கிறிஸ்தவ முதிர்ச்சியை கான்பிக்கிறது. நமது ஆண்மாவையும் இதயத்தையும், எவ்வளவு தூரம்,  நமது இதயத்தில், அன்புடன், மற்றவர்களுக்காக  நெருப்புடன், நாம் முழு மனதுடன், நாம் இறையரசிற்காக இறைசேவை செய்யும்பொழுது, மற்றவர்களின் வாழ்வை நாம் மாற்றும்பொழுது, நாமும், மற்றவர்களும், அமைதி பெறுகிறோம்.   இயேசு “தீ வீட்டை பிரித்து விடும் “ என்று சொல்கிறார்.   யாரும் சுய நலத்தோடு இருப்பவரிடமிருந்து நம்மை பிரித்து விடும். இருந்தாலும், நாம் அவரிடம் அன்பாக இருப்போம். இதன் மூலம், நம்மில் தீ வளர்கிறது. இது இன்னும் நம்மை சுத்தபடுத்துகிறது. மேலும், மெதுவாக, இவ்வுலகம் மாறும்.

© 2013 by Terry A. Modica

Friday, August 9, 2013

ஆகஸ்டு 11, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 11,  2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
Wisdom 18:6-9
Psalm 33:1, 12, 18-22
Hebrews 11:1-2, 8-19
Luke 12:32-48

லூக்கா நற்செய்தி (12:32-48)
' 32 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், “உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். “ என்று சொல்கிறது இந்த ஆட்சி, நித்திய வாழ்வையும் இனைத்தே கூறப்படுகிறது. மேலும் கடவுளின் முழு அன்பும், இவ்வுலகில் உள்ள அனைத்து நல்லவைகளையும் இனைத்தே கடவுள் எல்லாவற்றையும் அனைவருக்கும் கொடுக்க ஆசைபடுகிறார்.

அடுத்து, இயேசு: “கடவுளின் அன்பை, தாராள குணத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளூம் வாய்ப்பை விட்டு விட்டு, இவ்வுலக பொருட்கள், செல்வத்தின் மேல் நாம் மதிப்பு வைத்திருந்தால், உங்கள் கையில் ஒன்றுமில்லாமல் போகும், உங்கள் பணப்பையில் இவ்வுலக நோக்கம் நிறைந்த்திருந்தால், அது கடவுளை நம்மை விட்டு விலகச் செய்யும். நமது சுய நலத்தினால், மற்றவர்களை விலக்கி விடுகிறோம். அல்லது, கடவுளுக்கு எதிரான தொடர்பில் இருப்பதால், அது நம்மை பரிசுத்த வாழ்வில் இருந்து விலக்கி விடுகிறது. இதனால், கடவுளின் நித்திய வாழ்வின் அன்பளிப்புகளை, கொடைகளை, நாம் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
“ என்று கூறுகிறார்.

கடவுளுக்கு தேவையில்லாத எதுவும், இறுதியில், ஒன்றுமில்லாமல் போகும்.ஏனெனில், இவைகள் நம்மை கடவுளோடு இனைக்க போவதில்லை. மேலும், நாம் மோட்சத்திற்கு செல்ல முடியாது. கடவுளுக்காக நாம் அனைத்தையும் விட்டு கொடுத்தல் வேண்டும்.

எல்லா சொத்துக்களையும், விற்று விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. அந்த செல்வத்தின் நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். அவைகளெல்லாம் இறையாட்சிக்கு உதவி செய்கிறதா? அல்லது நம் இவ்வுலக ஆசைகளுக்காக இருக்கிறதா? என்பதே கேள்வி.

கடவுளோடு இனைய , அதனை இன்னும் ஆழப்படுத்த எதுவெல்லாம் உதவுகிறதோ, அதெல்லாம் மிகப் பெரிய பொருட்செல்வம் ஆகும். அதனால் நாம் நித்திய வாழ்வை இணைய முடியும். இவ்வுலக பொருட்களூக்காக உங்கள் நேரத்தை வீனாக்காதீர்கள் என்று இயேசு நம்மை எச்சரிக்கை செய்கிறார். எப்பொழுது தலைவர் வருவார் என நமக்கு தெரியாது. அவர் வந்து இவ்வுலகிலிரிந்து , மோட்சத்திற்கு எடுத்து சென்று, கடவுளின் மாளிகையில் நம்மை கொண்டு சேர்ப்பார் என்று தெரியாது. நாம் தயாராக இருக்கிறோமோ? அல்லது இவ்வுலக செல்வத்தில் திளைத்தி இருக்கிறோமோ?

அதனால் தான், கடவுள் மிகுந்த இரக்கத்துடன், நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை தந்துள்ளார். அங்கே இவ்வுலக பாவங்கள் சுத்தபடுத்தபடும், அது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனை தான் இயேசு பணியாளர்களை , அவர்களின் உழியததலைவன் அடித்ததை ஒப்பிடுகிறார். இது தான் சரியான தருணம், கடவுளீன் இறையாட்சியை நாம் தேர்ந்து கொண்டு, அவரின் அன்பளிப்பை நாம் அடைய வேண்டும்.
© 2013 by Terry A. Modica


Friday, August 2, 2013

ஆகஸ்டு 4, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 4, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Ecclesiastes 1:2; 2:21-23
Psalm 90:(1) 3-6, 12-14, 17
Colosians 3:1-5, 9-11
Luke 12:13-21

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 12: 13-21

அறிவற்ற செல்வன் உவமை

13 கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், ' போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும் ' என்றார்.14 அவர் அந்த ஆளை நோக்கி, ' என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? ' என்று கேட்டார்.15 பின்பு அவர் அவர்களை நோக்கி, ' எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது ' என்றார்.16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.17 அவன், ' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! ' என்று எண்ணினான்.18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ' .19 பின்பு, ' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு ' எனச் சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான்.20ஆனால் கடவுள் அவனிடம், ' அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்? ' என்று கேட்டார்.21 கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. ' 

(THANKS TO WWW.ARULVAKKU.COM)

கடவுளின் தாராள குணத்தை நாம் புரிந்து கொண்டால், நாம் உண்மையில் செல்வந்தர்கள் தான். நம்முடைய வங்கி கணக்கில் குறைந்த பணம் இருந்தால் கூட, நாம் பணக்காரர்கள் தான்.  நம் வாழ்வில் உள்ள அமைதியே அளவிட முடியாததாக உள்ளது. நமது
ஞானத்தாலும், விடா முயற்சியாலும், நம் வாழ்வில் வரும் சோதனைகளையும், போராட்டங்களையும் எதிர் கொள்ள இந்த அமைதி நமக்கு உதவுகிறது.

கடவுளின் தாராள மனது, நமக்கு உலக பொருட் செல்வத்தையும் கொடுக்கும். நம்மிடம் உள்ள ஒவ்வொரு பொருட் செல்வமும் கடவுளிடமிருந்து வந்தது தான். அவர் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல்கள், மற்றும் நம் குண நலங்கள் மூலம் நமக்கு இந்த செல்வத்தை கொடுத்துள்ளார். நம் முயற்சியால் பெறும் எல்லா வருமானங்களும் கடவுளின் முயற்சியால் வந்தது தான். நம்மிடம் உள்ள எல்லா நல்ல விசயங்களும், செல்வங்களும் கடவுள் தான் மூல காரணம்.

எனினும், நாம் நினைப்பதை விட ஒவ்வொரு செயலுக்கும் பொருளுக்கும் பெரிய நோக்கம்  இருக்கிறது. கடவுளிடமிருந்து வந்த ஒவ்வொன்றும், மற்றவர்களையும் சேர்த்ஹ்டு ஆசிர்வதிக்க தான். கடவுள் தாராள குணத்திற்கு நாம் ஒரு வழியாக செயல்படுதல் வேண்டும்.

நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ள நாம் மறுக்கும் பொழுது, நாம் பாவம் செய்கிறோம். சுய நலத்தால் வீழ்ந்துவிடுகிறோம். இது ஒரு வகையான   பேராசைக்கு கொண்டு சென்று விடும்.  இந்த கர்வத்தால், கடவுள் நம்மிடம்  கொடுத்த பொருட்களை பகிர்ந்து கொள்ளாததால், மற்றவர்களுக்கு நாம் தீங்கு செய்கிறோம்.

இந்த பாவம் செய்ய , தீங்கிழைக்க எது நம்மை தூண்டுகிறது. நாம் நம் மேல் உள்ள நம்பிக்கையினால், நாமே எல்லாம் செய்ய முடியும் என்று நம்புகிறோம். கடவுளின் தாராள குணத்தில் நாம் இனைந்து விடவில்லை. கடவுள் நமக்கு தாராளமாக கொடுத்துள்ளார் என்று நாம் தெரிந்திருந்தாலும், நம் சொந்த நம்பிக்கை அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை. அதனை கொடுத்துவிட்டால், நாம் கஷ்டப்படுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். நமது பொருட்களை சேகரித்து, நாம் பாதுகாக்கிறோம். ஆனால், மற்றவர்கள் அதனால் பாதிக்கபடுகிறார்கள். இன்றைய நற்செய்தியில், இயேசு அறிவற்ற செல்வந்தனையும், தன் மேல் சார்ந்து இருப்பவனையும் பற்றியும் குறிப்பிட்டு, அவர்கள் கடவுளின் குண நலங்களிலிருந்து முழுதுமாக மாறி இருக்க்றதை நமக்கு காட்டுகிறார்.

கடவுள் தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கிறார் என்று எண்ணத்தோடு நாம் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொண்டால் தான், தாராள குணம் வளரும். மேலும், தொடர்ந்து கடவுள் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும். நமக்கு கொடுத்ததை , நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால், இன்னும் கடவுளிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும். உங்களில் எது அதிகமாக இருக்கிறது என்பதை நினைவில் படுத்தி பாருங்கள். (பணம், சந்தோசம், மகிழ்ச்சி, அறிவு, அனுபவம், இன்னும் பல ). இப்போது, நம்மை சுற்றி பார்த்து, மற்றவர்களின் ஜெபத்திற்கு நாம் எப்படி பதிலாக முடியும் ? என்று பாருங்கள்.

கடவுளிடம் உள்ள அனைத்தும், நாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நமக்கும் அது சொந்தமாகும். இது தான் இரையரசின் பொருளாதார கொள்கையாகும். ஒவ்வொன்றும் பகிர்ந்து கொள்ளப்பட்டால் தான், கிறிஸ்துவின் உடல் சுபிட்சம் பெறும். இதனை தான், நாம் அனைத்து புனிதர்கள் என்று அழைக்கிறோம்.


© 2013 by Terry A. Modica