செப்டம்பர்
1, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்
22ம் ஞாயிறு
Sirach
3:17-18, 20, 28-29
Psalm 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14
Psalm 68:4-7, 10-11
Hebrews 12:18-19, 22-24a
Luke 14:1, 7-14
லூக்கா
நற்செய்தி
அதிகாரம்:
14: 1, 7-14
1 ஓய்வுநாள்
ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார்.
அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.2
விருந்தினருக்கும் விருந்தளிப்போருக்கும் ஒரு போதனை
7 விருந்தினர்கள்
பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக்
கூறிய அறிவுரை:8 ' ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால்,
பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய
ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம்.9 உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து
உங்களிடத்தில், ' இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள் ' என்பார். அப்பொழுது நீங்கள்
வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும்.10 நீங்கள்
அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை
அழைத்தவர் வந்து உங்களிடம், ' நண்பரே, முதல் இடத்திற்கு வாரும் ' எனச்
சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக
நீங்கள் பெருமை அடைவீர்கள்.11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். ' 12 பிறகு தம்மை
விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, ' நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது
உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை
வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப
அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13மாறாக, நீர்
விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும்
பார்வையற்றோரையும் அழையும்.14 அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால்
உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள்
உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும் ' என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின்
நற்செய்தியில், நான் நல்ல செயல்கள்
செய்வதால் எனது எதிர்பார்ப்பு என்ன ? நல்ல செயல்களின் நோக்கம் என்ன?
மற்றவர்கள்லின் நன்மைகளுக்காக அதனை செய்கிறோமோ? அல்லது சுய நலத்திற்காகவா? என்ற
கேள்விகள் கேட்கபடுகின்றன?
மற்றவர்களுக்கு நன்மை
செய்வதால், நமக்கு இன்னும் பலன்
கிடைக்கும் என்று நினைத்து செய்தால், நாம் கிறிஸ்துவை போல செய்யவில்லை. இதனை இயேசு
விருந்தோடு ஒப்பீட்டு சொல்கிறார். யார் உங்களுக்கு திருப்பி செலுத்த முடியாதவரோ,
அவரை விருந்துக்கு அழையுங்கள் என்று சொல்கிறார். இதனை பரிசுத்தமாக செய்ய வேண்டும்
என்று சொல்லவில்லை. அதனை அப்படியே நாம் மாற்றி எடுத்து கொண்டால், முக்கியமான
கருத்தை நாம் விட்டு விடுகிறோம்.
உண்மையான செய்தி என்ன
என்றால், நாம் என்ன செய்தாலும், அதனை அன்பிற்காக செய்தல் வேண்டும். எதனையும் நாம்
எதிர்பார்த்து செய்தல் கூடாது. சொந்த நலனை விட்டு விட வேண்டும். மற்றவர்களின்
நலனுக்காக நாம் அவர்களுக்கு உதவி செய்தல் வேண்டும். இப்படி செய்வதால் ஒரு பயனும்
இல்லை என்று தோன்றலாம் ஆனால், உங்களுக்கு அவர்கள் எப்படி நன்றி சொல்வார்கள் என்று
பாருங்கள். எப்படியெல்லாம் பாராட்டுவார்கள் என்பதை நினைத்து பாருங்கள். இதனை விட
வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?
மேலும், சிலர் நமக்கு
எதிராக பாவம் செய்யும்பொழுது, அவர்கள்
மனம் திருந்த வேண்டும் என்று நாம் அவர்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் ஆன்மாவிற்காக
நாம் ஜெபித்தல் வேண்டும். மேலும், அவர்கள் மாறினால், நமக்கு சுலபமாக இருக்கும்.
ஆனால் நமது சுலபமான வாழ்க்கைகாக நாம் ஜெபிக்க வேண்டியதில்லை.
கிறிஸ்துவை பின்
செல்பவர்களாக, நாம் செய்யும் நன்மைக்கு பிரதிபலனாக நாம் ஆசிர்வாதம் பெறும்பொழுது,
அது நமக்கு கூடுதல் பலனாகும். ஆனால் அதுவே நம் நோக்கமல்ல. உரிமையோடு நாம் கூடுதல்
பலனை எதிர்பார்க்கலாம், ஆனால், அதுவே நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை.
நமது நோக்கமும்,
எதிர்பார்ப்பும், சரியாக தெரிந்த பின்பு,
நாம் இயேசுவை போல வாழவும், நாமே தெரிந்து கொள்ள முடியும், இயேசுவே, “நேர்மையாளர்கள்
உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அவர்
கூறியது இப்பொழுதே நமக்கும் ஆரம்ப்பிக்கிறது. உயிர்த்தெழுந்த இயேசுவை போல நாம்
மாறும்போது நமக்கும் கைமாறு கிடைக்க ஆரம்பிக்கிறது.
.
நமக்கு பலனாக
கிடைக்கும் அருளானது, இறையரசிற்காக நம்மை செய்ய அழைக்கும் எல்லா செயல்களுக்கும், நமக்கு
ஆற்றால் தந்து உதவுகிறது. சந்தோசமாக, வேறு பல ஆசிர்வாதத்தையும் நாம் பெற முடியும், ஆனால் அதுவே நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டியதில்லை.
© 2013 by Terry A.
Modica
No comments:
Post a Comment