ஆகஸ்டு
25 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்
21ம் ஞாயிறு
Isaiah 66:18-21
Psalm 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30
Psalm 117:1, 2 (with Mark 16:15)
Hebrews 12:5-7, 11-13
Luke 13:22-30
இடுக்கமான வாயில்
22 இயேசு
நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம்
செய்தார்.23 அப்பொழுது ஒருவர் அவரிடம், ' ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர்
மட்டும்தானா? ' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது:24 '
இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல
முயன்றும் இயலாமற்போகும். '25 ' வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத்
திறந்துவிடும் ' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என
எனக்குத் தெரியாது ' எனப் பதில் கூறுவார்.26 அப்பொழுது நீங்கள், ' நாங்கள்
உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே ' என்று
சொல்வீர்கள்.27 ஆனாலும் அவர், ' நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது.
தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள் ' என உங்களிடம்
சொல்வார்.28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு
உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது
அங்கலாய்ப்பீர்கள்.29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும்
தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.30 ஆம், கடைசியானோர்
முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர். '
(Thanks
to www.arulvakku.com)
இன்றைய ஞாயிறின் நற்செய்தி,
மோட்சத்திற்கு செல்லும், வழிகளுக்கான அடையாள சின்னங்கள், அதுவும் குறுகிய வழியான
அந்த நித்திய வாழ்விற்கு செல்லும்
வழிக்கான வழிகாட்டியகளை நமக்கு காட்டுகிறது.
இசையாஸ், சொல்கிறார், ‘கடவுளுக்கு நாம்
செய்யும் செயல்கள் அனைத்தும் தெரியும், நம் மனதில் என்ன இருக்கிறது என்றும்
கடவுளுக்கு தெரியும் என்று சொல்கிறார். நாம் இறந்து கடவுளிடம் செல்லும் பொழுது,
கடவுளின் முழு அருளை நாம் பார்க்க, நம்மை நாமே சுத்த படுத்தவேண்டும். அவர் நம்மில்
பல அடையாளங்களை விட்டு செல்கிறார். அது இயேசு தான், - அவரது வாழ்வு தான்- எப்படி
வாழ்ந்தார், எப்படி இறந்தார் – அனைத்தும் மோட்சத்திற்கு செல்லும் அடையாளங்களும்,
வழிகாட்டுதலும் ஆகும்.
“ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்”, என்று இயேசு சொல்கிறார். நித்திய வாழ்விற்கு செல்ல நாமும் முயல வேண்டும்.
நற்செய்தி முழுவதும்,இயேசு
நமக்கு நித்திய வாழ்விற்கான பதிலை கொடுத்துள்ளார். நாம் நம் அன்பில் முழுமையாகவும்
பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும். அதனால், நாம் செய்யும் சில தவறுகள்,
குற்றத்துடனும் இருப்பதால், மோட்சம் நமக்கு கிடைக்காது என்று அர்த்தமல்ல.
மோட்சத்தை திறக்கும் சாவி அன்பு தான். நாம் அன்பை தூர எறிந்தால், நாம் அந்த சாவியை
தூர எறிகிறோம்.
இருந்தாலும், நாம் பாவம் செய்தாலும், எப்பொழுதுமே, நாம்
அன்பை தூர எறிவதில்லை. ஆனால் பரிசுத்தமான அன்புடன் நாம் இருக்க வேண்டும் என்று
நமக்கு சொல்லபடுகிறது. இதன் அர்த்தம் என்ன என்றால், முழுமனதுடன், முழுமையாக அன்பு
செய்ய வேண்டும். எவ்வித நிபந்தனையுமின்றி,
தியாகத்துடன், நாம் அன்பு செய்தல் வேண்டும்.
பரிசுத்தமான அன்பில்
நிலைத்திருக்க, நாம் கடவுளின் அன்பை கொண்டிருக்க வேண்டும். யேசு நம்மில் இருந்து
மற்றவர்களை சென்றடைய வேண்டும். நாமே, பல முறை, முழுமையான அன்பை
வெளிபடுத்துவதில்லை. ஆனால், கடவுளிடம் நாம் தஞ்சமடைந்து, அவரின் அன்பை
மற்றவர்களுக்காக நம்மிடம் கொடுக்க இறைஞ்சினால், நாம் முழுமையான அன்பை வெளிப்படுத்த
முடியும். கடவுளின் அன்பில் நாம் தொடர்ந்து நிலைத்திருக்க, அதில் நம்பிக்கையுடன்
இருக்க, அவரின் அன்பை தடுத்து நிறுத்தும் எதையும், நாம் தூக்கி எறிய வேண்டும்.
மன்னிக்காமல் இருப்பது, பழிவாங்க வேண்டும் என துடிப்பது, வெறுப்புடன் இருப்பது,
தெரிந்தே மற்றவர்களின் தேவை அறிந்தும், அதனை செய்யாமல் இருப்பது. மகிழ்ச்சியை,
சந்தோசத்தை வெறுக்கும் மனப்பான்மை, ஆகிய இவற்றை, நாம் தூர எறிதல் வேண்டும்.
இரண்டாவது வாசகத்தில், கடவுளின்
ஒழுங்கை, கட்டுபாட்டை, அவமதித்து விடாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நமக்கு
எவ்வளவு துயரம் வந்தாலும், நாம் கடவுளின் முழு அன்பை, அவரின் பரிசுத்தத்தை நாம்
அவமதிக்க கூடாது. இதனையெல்லாம், கடவுள், நாம் பரிசுத்த அன்பு கொண்டிருக்க
உபயோகிக்கிறார். இந்த சோதனைகளையெல்லாம், நாம் அன்பிள் வளர நல்ல வாய்ப்பாக
ஏற்றுகொள்ள வேண்டும். அந்த சோதனையான நேரத்தில், நாம், கடவுளை நாடினால், அவர் நம்மை அன்பில் நிலைத்திருக்க செய்வார்.
அப்பொழுது, நாம் இயேசுவை போல மாறுவோம். அப்பொழுது, மோட்சத்தின் பாதையை
நேராக்குகிறோம். நமது பரிசுத்த வாழ்வில், ஒட்டாமலும், முடமாகவும் இருப்பதெல்லாம்
குணமாக்கபட்டுவிடும்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment