ஆகஸ்டு 4,
2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Ecclesiastes 1:2; 2:21-23
Psalm 90:(1) 3-6, 12-14, 17
Colosians 3:1-5, 9-11
Luke 12:13-21
Psalm 90:(1) 3-6, 12-14, 17
Colosians 3:1-5, 9-11
Luke 12:13-21
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 12: 13-21
அறிவற்ற செல்வன் உவமை
13 கூட்டத்திலிருந்து
ஒருவர் இயேசுவிடம், ' போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என்
சகோதரருக்குச் சொல்லும் ' என்றார்.14 அவர் அந்த ஆளை நோக்கி, ' என்னை
உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்? ' என்று
கேட்டார்.15 பின்பு அவர் அவர்களை நோக்கி, ' எவ்வகைப் பேராசைக்கும்
இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால்
ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது ' என்றார்.16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச்
சொன்னார்: ' செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.17 அவன்,
' நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே! ' என்று
எண்ணினான்.18 ' ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக்
கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன் ' .19 பின்பு,
' என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள்
வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு ' எனச்
சொல்வேன் ' என்று தனக்குள் கூறிக்கொண்டான்.20ஆனால் கடவுள் அவனிடம், ' அறிவிலியே,
இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை
யாருடையவையாகும்? ' என்று கேட்டார்.21 கடவுள் முன்னிலையில் செல்வம்
இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. '
(THANKS TO WWW.ARULVAKKU.COM)
கடவுளின் தாராள குணத்தை நாம்
புரிந்து கொண்டால், நாம் உண்மையில் செல்வந்தர்கள் தான். நம்முடைய வங்கி கணக்கில்
குறைந்த பணம் இருந்தால் கூட, நாம் பணக்காரர்கள் தான். நம் வாழ்வில் உள்ள அமைதியே அளவிட முடியாததாக
உள்ளது. நமது
ஞானத்தாலும், விடா
முயற்சியாலும், நம் வாழ்வில் வரும் சோதனைகளையும், போராட்டங்களையும் எதிர் கொள்ள
இந்த அமைதி நமக்கு உதவுகிறது.
கடவுளின் தாராள மனது, நமக்கு உலக
பொருட் செல்வத்தையும் கொடுக்கும். நம்மிடம் உள்ள ஒவ்வொரு பொருட் செல்வமும் கடவுளிடமிருந்து
வந்தது தான். அவர் நமக்கு கொடுத்த திறமைகள், ஆற்றல்கள், மற்றும் நம் குண நலங்கள்
மூலம் நமக்கு இந்த செல்வத்தை கொடுத்துள்ளார். நம் முயற்சியால் பெறும் எல்லா
வருமானங்களும் கடவுளின் முயற்சியால் வந்தது தான். நம்மிடம் உள்ள எல்லா நல்ல
விசயங்களும், செல்வங்களும் கடவுள் தான் மூல காரணம்.
எனினும், நாம் நினைப்பதை விட
ஒவ்வொரு செயலுக்கும் பொருளுக்கும் பெரிய நோக்கம்
இருக்கிறது. கடவுளிடமிருந்து வந்த ஒவ்வொன்றும், மற்றவர்களையும் சேர்த்ஹ்டு
ஆசிர்வதிக்க தான். கடவுள் தாராள குணத்திற்கு நாம் ஒரு வழியாக செயல்படுதல்
வேண்டும்.
நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ள
நாம் மறுக்கும் பொழுது, நாம் பாவம் செய்கிறோம். சுய நலத்தால் வீழ்ந்துவிடுகிறோம்.
இது ஒரு வகையான பேராசைக்கு கொண்டு சென்று
விடும். இந்த கர்வத்தால், கடவுள்
நம்மிடம் கொடுத்த பொருட்களை பகிர்ந்து
கொள்ளாததால், மற்றவர்களுக்கு நாம் தீங்கு செய்கிறோம்.
இந்த பாவம் செய்ய , தீங்கிழைக்க
எது நம்மை தூண்டுகிறது. நாம் நம் மேல் உள்ள நம்பிக்கையினால், நாமே எல்லாம் செய்ய
முடியும் என்று நம்புகிறோம். கடவுளின் தாராள குணத்தில் நாம் இனைந்து விடவில்லை.
கடவுள் நமக்கு தாராளமாக கொடுத்துள்ளார் என்று நாம் தெரிந்திருந்தாலும், நம் சொந்த
நம்பிக்கை அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில்லை. அதனை கொடுத்துவிட்டால், நாம்
கஷ்டப்படுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். நமது பொருட்களை சேகரித்து, நாம்
பாதுகாக்கிறோம். ஆனால், மற்றவர்கள் அதனால் பாதிக்கபடுகிறார்கள். இன்றைய
நற்செய்தியில், இயேசு அறிவற்ற செல்வந்தனையும், தன் மேல் சார்ந்து இருப்பவனையும்
பற்றியும் குறிப்பிட்டு, அவர்கள் கடவுளின் குண நலங்களிலிருந்து முழுதுமாக மாறி
இருக்க்றதை நமக்கு காட்டுகிறார்.
கடவுள் தான் நமக்கு
எல்லாவற்றையும் கொடுக்கிறார் என்று எண்ணத்தோடு நாம் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து
கொண்டால் தான், தாராள குணம் வளரும். மேலும், தொடர்ந்து கடவுள் கொடுப்பார் என்ற
நம்பிக்கையும் இருக்கும். நமக்கு கொடுத்ததை , நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால்,
இன்னும் கடவுளிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும். உங்களில் எது
அதிகமாக இருக்கிறது என்பதை நினைவில் படுத்தி பாருங்கள். (பணம், சந்தோசம்,
மகிழ்ச்சி, அறிவு, அனுபவம், இன்னும் பல ). இப்போது, நம்மை சுற்றி பார்த்து,
மற்றவர்களின் ஜெபத்திற்கு நாம் எப்படி பதிலாக முடியும் ? என்று பாருங்கள்.
கடவுளிடம் உள்ள அனைத்தும், நாம்
மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நமக்கும் அது சொந்தமாகும். இது தான் இரையரசின்
பொருளாதார கொள்கையாகும். ஒவ்வொன்றும் பகிர்ந்து கொள்ளப்பட்டால் தான், கிறிஸ்துவின்
உடல் சுபிட்சம் பெறும். இதனை தான், நாம் அனைத்து புனிதர்கள் என்று அழைக்கிறோம்.
© 2013 by Terry A. Modica
No comments:
Post a Comment