Friday, December 26, 2014

டிசம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
இயேசு மரியாள் சூசை திருக்குடும்பம்
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8,11-12,17-19
Luke 2:22-40

லூக்கா நற்செய்தி
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(Thanks to www.arulvakku.com)


இயேசுவை நம்பு (நன்றாக புரிந்து கொள்ளாவிட்டால் கூட )

புனித ஜான் பால் (போப்பாண்டவர்) ஜெபமாலையை பற்றிய அவருடைய குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் சந்தோஷ தேவ ரகசியத்தில், நமக்கு மகிழ்ச்சியும் சந்தோசமும் . கிடைக்கிறது. 12 வயது இயேசுவை கோவிலில் கண்டு பிடித்த பொழுது நமக்கும் சந்தோசம் கிடைக்கிறது. அங்கே அவர் தெய்வீக ஞானத்துடன், கேள்விகள் கேட்டும், பதில் அளித்தும் , போதனை செய்பவர் போல இருந்தார் . அவர் மீட்பர் என்பதனை வெளிப்படுத்துவது தந்தையின் வேலை என்பதை விவிலியம் நமக்கு காட்டுகிறது. மனித உறவுகளுக்குள்ளே மிக நெருங்கிய உறவுகளும் இறையரசிற்காக வாழ்தல் வேண்டும் என்று காட்டபடுகிறது. சூசையப்பர் , மாதா , பயத்துடனும், கலக்கத்துடனும் 'அவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ளவில்லை'”

நாமும் பல நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில்லை. அவரின் போதனைகள நாம் கடினமான வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று சவால் விடுகிறது. எதிரிகளுக்கும் நன்மை செய்ய வேண்டும், மறு கன்னத்தையும் காட்டி, உண்மைக்கு நாம் எப்பொழுதும் துணிந்து நிற்க வேண்டும் , மற்றும் நியாயமான பழக்க வழக்கத்துடன், நல்ல கலாசராத்துடனும் இருக்க வேண்டும்.

இது மாதிரியான ஒரு வாழ்வு வாழும்போது, நமக்கு பிடிக்காமல் இருக்கும், ஒத்து வராது, நமது உலக வாழ்க்கைக்காக நாம் இந்த மாதிரியான வாழ்வை ஒதுக்கி தள்ளுவோம். ஆனால், இறையரசின் தேவைகளை நாம் புரிந்து கொள்ளும்பொழுது, கடினமான வாழ்க்கையின் நன்மைகளை புரிந்து கொள்வோம். மேலும், சந்தோசத்துடேன் கடவுளுக்கு கிழ்படிவோம்

இந்த ஒரு புரிதலோடு, நாம் இயேசுவின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்து,, அவை சரியான உணமையான வார்த்தைகள் என்று நம்புவோம். மாதாவும் சூசையப்பர் போல நாம் புரிந்து கொள்ளாததை நம் மனதில் இருத்தி வைத்து , இயேசு என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்து நாம் அவர் பின் தொடர்ந்து செல்வோம்.

இது ஒரு சவாலான வாழ்வு தான், ஆனா கடவுள் எவ்வளவு ஆச்சர்யமனவர், அற்புதமானவர் என்று நாம் அறிந்து கொள்ளும் நேரம் வரும் பொழுது தெரிந்து கொள்வோம்.

© 2014 by Terry A. Modica


Friday, December 19, 2014

டிசம்பர் 21 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 21 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு

2 Samuel 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Romans 16:25-27
Luke 1:26-38

லூக்கா நற்செய்தி


இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். 29இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, இயேசுவின் இறைபணி , இயேசு கன்னி மரியாள் வயிற்றில் உருவாதற்கு முன்னரே, எப்படி கன்னி மரியாளை அவரின் இறைபணி எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்தது எப்படி என்று காட்டுகிறது.

முப்பதாண்டுகளுக்கு பிறகு, இயேசு இந்த உலகின் மீட்பராக இருக்கிறார். எனினும், அவரின் மீட்பின் திட்டம் அப்போது ஆரம்பிக்கவில்லை. இயேசு கடவுள்; எப்பொழுது இருக்கிறார். அவர் கடவுளின் மகனாக பிறக்கவில்லை. திரித்துவ கடவுளின் ஒருவராக இருப்பவர். நிசேயா விசுவாச அறிக்கையில் நாம் சொல்வது போல, சர்வகாலங்களுக்கு முன்னே பிதாவினின்று பிறந்தவர், சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல, பிறந்தவரே கடவுளின்று கடவுள், “ . (thanks to http://waliban.blogspot.in/)

இயேசுவின் மீட்பின் திட்டம் , கண்டிப்பாக கன்னி மரியாளை இயேசு கருவில் இருக்கிறபொழுதிலிருந்து பாதித்தது .

கடவுள் இந்த உலகத்திற்கு மனிதனாக வர, பரிசுத்த ஆவியானவர் கன்னி மரியாளை முழுதுமாக ஆவியால் குளிப்பாட்டினார். மரியாளுக்கு எப்படி மெசியா கருவாக உருவானார் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர் தாம்பதய உறவில்லாமல், கடவுளின் அருளால் , கருவுற்றார். கடவுள் தான் இதனை செய்கிறார் . அவர் தான் நம்மிடம் கூறினார் என்று மரியாளுக்கு தெரியும். அவ்வளவு தான்.

அதே போல , நாமும் கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை எடுத்து இந்த உலகத்தில் காட்ட வேண்டும் என்று அழைக்கப்பட்டுள்ளோம், நீங்கள் அதற்காக என்ன செய்கிறீர்கள்? தெய்விக கடமையாக எந்த அளவிற்கு நீங்கள் நிறைவெற்றி இருக்கிறீர்கள் ? நாம் யாராக இருந்தாலும் நமக்கு என்ன தேவையோ, கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்யும் ஆற்றலை, செயல் திறனை கடவுள் கொடுக்கிறார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். மரியாள் ஆரம்பித்ததை, நாம் தொடர, கடவுள் எல்லா தேவையானதையும் செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பி நாம் செல்லலாம், என்றும் நம்பிக்கை ஆனவர். எதற்கும் நாம் பயப்பட தேவை இல்லை. நமது உண்மையான இறைபணியை நாம் எதற்காகவும் நிறுத்த வேண்டியதில்லை,

இதனையெல்லாம் மனதில் கொண்டு, இறையரசிற்காக கடவுள் நம்மை இறைபணி செய்ய அழைக்கும்பொழுது, நாம் 'ஆம்' என்று தான் பதில் சொல்வோம். சரிதானே? கண்டிப்பாக அவர் திட்டத்திற்கு நாம் துணையாக இருக்க விருப்ப படுகிறோம். நாம் அவரின் திட்டம் என்ன என்று தெரியமால் கூட, அவர் என்ன எல்லாம் நமக்கு செய்ய இருக்கிறார் என்பது தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் திட்டத்திற்கு நாம் ஆம் என்று தான் சொல்வோம்.

பல நேரங்களில் , நாம் தகுதி இல்லாதவர்களாக தான் நினைத்து கொள்கிறோம். எனில், நாம் வலிமையில்லாமல் இருக்கிறோம், பாவ வாழ்வில் இருக்கிறோம் . உங்கள் எண்ணங்கலை மட்டும் வைத்து கொண்டு இருக்காதீர்கள். கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் மேல் விசுவாசம் கொள்ளுங்கள்.

© 2014 by Terry A. Modica


Friday, December 12, 2014

டிசம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
யோவான் நற்செய்தி
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28



6கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.


2. முதல் பாஸ்கா விழா
திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்
(
மத் 3:1 - 12; மாற் 1:7 - 8; லூக் 3:15 - 17)
19எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிற
து ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்த

து என்னைப்பற்றியே ' என்றார்.24பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் யோவான் "ஒளியை குறித்து சான்று பகிர வந்தார்" என்று
கூருகிறது . அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

இயேசு தான் உண்மையான ஒளி , இருளை அகற்றும் மின்னும் ஒளி , அந்த ஒளியின் மூலம் நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லுகிறார் என்பது நமக்கு தெரியும் . அவரின் ஆவி உண்மையை நமக்கு புரிய வைத்து , அழிக்கும் சக்தியிலிருந்து நம்மை மீட்டு மீட்பர் இயேசுவின் பின் சென்று மோட்சம் அடைய வைக்கிறார் . இருந்தும் யோவான் என்ன சாட்சி சொல்கிறார் ? ஒளிக்கு என்ன சான்று பகிர்கிறார். எப்படி சான்று பகிர்ந்தார் ? அந்த ஒளியின் சாட்சி நமக்கு என்ன விளைவை உண்டாக்கியது ?

யோவானின் சாட்சி " நான் கிறிஸ்து அல்ல, ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது அவரின் சாட்சி , இயேசுவின் ஒளியை நமக்கு காட்டி : நமக்கு சவால் விடுகிறது . உங்கள் வாழ்கை ஏன் காய்ந்து வறட்சி ஆக இருக்கிறது ? நன்றாய் கேளுங்கள். கிறிஸ்து உங்களை சந்திக்க வருகிறார்! சும்மா சுற்றி கொண்டிராமல் , அவருக்கு சரியான பாதையை தயார் செய்யுங்கள். மனம் திரும்புங்கள், மாற்றத்திற்கு தயாராக இருங்கள், இயேசுவிற்காக , அவரை சந்திக்க என்ன தேவையோ அதனை செய்யுங்கள். உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்


நம்முடைய கஷ்ட காலங்களில் , இயேசு நம்மை விட்டு விலகி , வெகு தூரத்தில் இருப்பதாக் நாம் பல நேரங்களில் நினைத்து இருப்போம். அவர் உங்களிடம் இருக்கிறார் என்பதை எப்பொழுது உங்கள் கண்கள் காட்டியது ? யாருடைய குரலால் நீங்கள் கடவுள் பக்கம் திரும்பி சென்றிர்கள் ? இதனை போல நீங்கள் செய்ய வேண்டிய தருணம் இது. மற்றவர்களை கடவுள் பக்கம் திரும்ப வைத்து , ஏழைகள் சந்தோசம் பெற உதவ வேண்டும் . இருதயத்தால் நொருங்குண்டவர்கள், பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டியவர்கள், விடுதலை அடைய , கடவுளோடு நெருங்கிய நண்பர்களாக இருக்க நாம் அனைவருக்கும் உதவ வேண்டும்.

யோவானை போல நாம் அதே சாட்சியத்தை கொடுக்க வேண்டும்: நமது குரல் இந்த உலகில் ஒலிக்க வேண்டும். நிறைய ஆன்மாக்கள் குழப்பத்திலும், நம்பிக்கை இல்லாமலும் , மன வலியோடும், இருதய வேதனையோடும் இருக்கிறார்கள் . அவர்களை நாம் நிராகரித்து விடலாமா ? அவர்கள் உண்மையான கடவுளை காணாமல், அவர் குரலை கேட்காமல் இருப்பதை நாம் அனுமதிப்பது அன்பின் அடையாளமா? கண்டிப்பாக இல்லை. நமது ஞான ஸ் நான அழைப்பினை நாம் செய்ய வில்லை என்று இயேசுவிற்கு ஒரு நாள் நாம் பதில் சொல்லி ஆக வேண்டும் . ஏன் மற்றவர்கள் இயேசுவை அடைய அவர்கள் தேவையின் பொது நாம் அவர்களுக்கு உதவவில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

உங்களது என்ன மாதிரியான குரல் ? ஏனெனில் கிறிஸ்து நம்மில் உள்ளார். நமது வாழ்வே ஒரு குரல் தான். சோதனைகளை எப்படி கையாண்டு , இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டு வாழ்கிறோமோ அதுவே ஒரு குரல் தான். அந்த குரல் , இயேசுவை கண்டுனராத அனைவருக்கும் கேட்கும். எந்த அளவிற்கு அமைதியை காட்டி, அதிக அன்பை கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு உங்கள் குரல் ஒலிக்கும்.

நமது குரல் ஒலிக்கவில்லை என்றாலும் கூட நமது வாழ்வு குரலாக இருக்கும், ஒளியின் உண்மையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் காட்ட முடியும். உண்மையாக நாம் எப்படி வாழ்கிறோமோ அவ்வாறே நம் செய்தியும் இருக்கும்.

நம் செய்தியை நாம் வாழ்ந்து காட்டும் வழியை ,மற்றவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் நாம் செய்தியை சொல்லவேண்டியது நம் கடமை.

© 2014 by Terry A. Modica