Friday, December 12, 2014

டிசம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 14 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
யோவான் நற்செய்தி
Isaiah 61:1-2a, 10-11
Luke 1:46-50, 53-54 (with Isaiah 61:10b)
1 Thessalonians 5:16-24
John 1:6-8, 19-28



6கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான்.7அவர் சான்று பகருமாறு வந்தார். அனைவரும் தம் வழியாக நம்புமாறு அவர் ஒளியைக்குறித்துச் சான்று பகர்ந்தார்.8அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.


2. முதல் பாஸ்கா விழா
திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்
(
மத் 3:1 - 12; மாற் 1:7 - 8; லூக் 3:15 - 17)
19எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிற
து ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்த

து என்னைப்பற்றியே ' என்றார்.24பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் யோவான் "ஒளியை குறித்து சான்று பகிர வந்தார்" என்று
கூருகிறது . அப்படி என்றால் என்ன அர்த்தம் ?

இயேசு தான் உண்மையான ஒளி , இருளை அகற்றும் மின்னும் ஒளி , அந்த ஒளியின் மூலம் நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லுகிறார் என்பது நமக்கு தெரியும் . அவரின் ஆவி உண்மையை நமக்கு புரிய வைத்து , அழிக்கும் சக்தியிலிருந்து நம்மை மீட்டு மீட்பர் இயேசுவின் பின் சென்று மோட்சம் அடைய வைக்கிறார் . இருந்தும் யோவான் என்ன சாட்சி சொல்கிறார் ? ஒளிக்கு என்ன சான்று பகிர்கிறார். எப்படி சான்று பகிர்ந்தார் ? அந்த ஒளியின் சாட்சி நமக்கு என்ன விளைவை உண்டாக்கியது ?

யோவானின் சாட்சி " நான் கிறிஸ்து அல்ல, ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது அவரின் சாட்சி , இயேசுவின் ஒளியை நமக்கு காட்டி : நமக்கு சவால் விடுகிறது . உங்கள் வாழ்கை ஏன் காய்ந்து வறட்சி ஆக இருக்கிறது ? நன்றாய் கேளுங்கள். கிறிஸ்து உங்களை சந்திக்க வருகிறார்! சும்மா சுற்றி கொண்டிராமல் , அவருக்கு சரியான பாதையை தயார் செய்யுங்கள். மனம் திரும்புங்கள், மாற்றத்திற்கு தயாராக இருங்கள், இயேசுவிற்காக , அவரை சந்திக்க என்ன தேவையோ அதனை செய்யுங்கள். உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்


நம்முடைய கஷ்ட காலங்களில் , இயேசு நம்மை விட்டு விலகி , வெகு தூரத்தில் இருப்பதாக் நாம் பல நேரங்களில் நினைத்து இருப்போம். அவர் உங்களிடம் இருக்கிறார் என்பதை எப்பொழுது உங்கள் கண்கள் காட்டியது ? யாருடைய குரலால் நீங்கள் கடவுள் பக்கம் திரும்பி சென்றிர்கள் ? இதனை போல நீங்கள் செய்ய வேண்டிய தருணம் இது. மற்றவர்களை கடவுள் பக்கம் திரும்ப வைத்து , ஏழைகள் சந்தோசம் பெற உதவ வேண்டும் . இருதயத்தால் நொருங்குண்டவர்கள், பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டியவர்கள், விடுதலை அடைய , கடவுளோடு நெருங்கிய நண்பர்களாக இருக்க நாம் அனைவருக்கும் உதவ வேண்டும்.

யோவானை போல நாம் அதே சாட்சியத்தை கொடுக்க வேண்டும்: நமது குரல் இந்த உலகில் ஒலிக்க வேண்டும். நிறைய ஆன்மாக்கள் குழப்பத்திலும், நம்பிக்கை இல்லாமலும் , மன வலியோடும், இருதய வேதனையோடும் இருக்கிறார்கள் . அவர்களை நாம் நிராகரித்து விடலாமா ? அவர்கள் உண்மையான கடவுளை காணாமல், அவர் குரலை கேட்காமல் இருப்பதை நாம் அனுமதிப்பது அன்பின் அடையாளமா? கண்டிப்பாக இல்லை. நமது ஞான ஸ் நான அழைப்பினை நாம் செய்ய வில்லை என்று இயேசுவிற்கு ஒரு நாள் நாம் பதில் சொல்லி ஆக வேண்டும் . ஏன் மற்றவர்கள் இயேசுவை அடைய அவர்கள் தேவையின் பொது நாம் அவர்களுக்கு உதவவில்லை என்று பதில் சொல்ல வேண்டும்.

உங்களது என்ன மாதிரியான குரல் ? ஏனெனில் கிறிஸ்து நம்மில் உள்ளார். நமது வாழ்வே ஒரு குரல் தான். சோதனைகளை எப்படி கையாண்டு , இயேசுவின் மேல் விசுவாசம் கொண்டு வாழ்கிறோமோ அதுவே ஒரு குரல் தான். அந்த குரல் , இயேசுவை கண்டுனராத அனைவருக்கும் கேட்கும். எந்த அளவிற்கு அமைதியை காட்டி, அதிக அன்பை கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு உங்கள் குரல் ஒலிக்கும்.

நமது குரல் ஒலிக்கவில்லை என்றாலும் கூட நமது வாழ்வு குரலாக இருக்கும், ஒளியின் உண்மையை நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் காட்ட முடியும். உண்மையாக நாம் எப்படி வாழ்கிறோமோ அவ்வாறே நம் செய்தியும் இருக்கும்.

நம் செய்தியை நாம் வாழ்ந்து காட்டும் வழியை ,மற்றவர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் நாம் செய்தியை சொல்லவேண்டியது நம் கடமை.

© 2014 by Terry A. Modica


No comments: