டிசம்பர் 27 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருக்குடும்ப திருவிழா
Sirach
3:2-6, 12-14 or
1 Samuel
1:20-22, 24-28
Ps 128:1-5
or Ps 84:2-3,5-6,9-10
Colossians
3:12-21 or 1 John 3:1-2, 21-24
Luke 2:41-52
லூக்கா நற்செய்தி
ஆண்டுதோறும்
இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்
விழா
நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய
பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர்.
ஒருநாள்
பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத்
திரும்பிச் சென்றார்கள்.
மூன்று
நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில்
அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை
எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும்
திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும்
அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொழுது
அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு
தேடிக்கொண்டிருந்தோமே''என்றார்.
அவர்
அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்
என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார்.
அவர்
சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை
அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம்
தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
இயேசு
ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய்
வாழ்ந்து வந்தார்.
நமக்கு புரியாத உண்மையை
விசுவசிப்பது
போப் இரண்டாம் ஜான் பால்,
"சந்தோஷ தேவ இரகசியத்தில் ஐந்தாம் ரகசியம் மகிழ்ச்சியும், நாடகமுமாக
இருக்கிறது " என அவரது குறிப்பில் கூறி உள்ளார். இன்றைய நற்செய்தியில்
குறிப்பிட்டுள்ளது போல மரியாளும், சூசையப்பரும்
குழந்தை இயேசுவை காணாமால் போய்
கண்டுபிடிக்கப்பட்டதை போப் இரண்டாம் ஜான் பால் நினைவு கூர்ந்து இங்கே இப்படி
எழுதுகிறார். "அங்கே இயேசு தெய்வ ஞானத்தில், கேள்விகள் கேட்டும் , பதில் கூறியும் இருந்தார் அங்கிருந்தே "போதகர்" என்ற
பணியை தொடங்கிவிட்டார்.
இந்த செய்தி மூலம் போப் ஜான் பால்
, இயேசு தம் வாழ்வை தந்தையின் நோக்கத்திற்கு செலவிட ஆரம்பித்துவிட்டார் , என்று குறிப்பிடுகிறார்.
அது தான் முதல் முயற்சி: எவ்வளவு சீக்கிரம் தந்தையின் மகனாக தன இறைசேவையை
துவக்குவதை நாம் இங்கு காண்கிறோம்.
இரண்டாவது தேவ இரகசியத்தில்,
இரண்டாம் ஜான் பால் விளக்குகிறார், "நற்செய்தியின் அடிப்படையான, அழுத்தமான
விஷயமான மனித உறவுகளுக்கே சவால் விடும் இரயரசின் தேவைகளை பற்றியது ", எந்த
மாதிரியான உறவுகள் ? குடும்ப உறவுகள்! இன்றைய நற்செய்தியில், மரியாளும்,
சூசையப்பரும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படும் சோதனையை எதிர் கொண்டனர் , அவர்கள்
பயத்துடனும் கலக்கத்துடனும் இருந்தனர். அவர்களுடைய மகனுக்கு என்ன ஆனதோ என்று
புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்றோ நாம் மரியாளும் சூசையப்பரும்
போலும் இருக்கிறோம். இயேசுவின்
வார்த்தைகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். அவரின் போதனைகள் நாம் வாழ்வில்
கடினமானவற்றை ஏற்று கொள்ள வேண்டும் என சொல்கிறது. நம் பகைவருக்கும் நல்லது செய்ய
வேண்டும் என்றும் சொல்கிறார். அநிதிக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும்
சொல்கிறார். கிறிஸ்துவ வாழ்விற்காக வாழ வேண்டும் என்றும் , அதற்காக நாம் கேலிக்கு
உட்படுத்த பட்டாலும், இன்னொரு கன்னத்தை கட்டி இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்
என்றும், கடவுளின் வழிக்கு தேவையான அனைத்து செய்ய வேண்டும் என்று இயேசு நமக்கு
போதிக்கிறார்.
ஆனால், நாமோ நமக்கு சரிபடாத, இலகுவாக இல்லாத விஷயங்கள் செய்து
தான் நாம் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் என்றால், அதற்கு ஏதாவது ஒரு சப்பை கட்டு
காரணம் காட்டி நாம் விலகினால், திருச்சபபையின் போதனைகளை விட்டு விலகுகிறோம்.
எனினும், நாம் கிறிஸ்துவை உண்மையாகவே பின் செல்ல விரும்பினால், எவ்வளவு கடினமாக
இருந்தாலும், அவர் பின் செல்ல நாம் தயாராய் இருந்தால், நாம் கிறிஸ்துவை போல
மாறினால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்து
விடுவீர்கள் .
இந்த புரிதல் இல்லாவிட்டாலும்,
இயேசுவின் வார்த்தைகளை அவை உண்மை என நம்ப வேண்டும். மரியாளும் சூசையப்பரும் போல,
நமது மனதில் நமக்கு என்ன புரியவில்லை என்பதை கருத்தில் கொண்டு அதனை இன்னும் நமது
சிந்தனையில் இறுத்தி கொண்டும் , பரிசுத்த வாழ்வை நோக்கி நாம் இன்னும் முன்னேறி
செல்ல வேண்டும். அப்போது தான் நாம் முழுமையாக கிறிஸ்துவில் வாழ்ந்து மகிழ்ச்சியை
நாம் கண்டுணர முடியும்.
© 2015 by Terry
A. Modica