Friday, July 31, 2015

ஆகஸ்டு 2 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஆகஸ்டு 2 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Exodus 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Ephesians 4:17, 20-24
John 6:24-35


யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி,எப்போது இங்கு வந்தீர்?''என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,மாறாக,அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்''என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?''என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்''என்றார்.
அவர்கள், ``நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே!`அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்'என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!''என்றனர்.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல;வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது''என்றார்.
அவர்கள், ``ஐயா,இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்''என்று கேட்டுக் கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது''என்றார்



இன்றைய நற்செய்தியில் இயேசு, “அழிவு தரும் உணவை தேடாமல், நிலை வாழ்வு தரும் உணவை தேடுங்கள் " என்று கூறுகிறார் . இதனை வேறாக சொல்வதானால்,, உங்கள் ஆன்மாவை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுங்கள் , அது உங்களை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லும்

கடவுள் உங்களை செய்ய சொல்லும் 'செயல்' , உங்களை அனுப்பியவர் மேல் விசுவாசம் கொள்ளுங்கள் என்று இயேசு கூ றுகிறார் . ஏன் இதனை "செயல்" என்று கூ றுகிறார் ?

முழுமையாக கிறிஸ்துவை நம்புவதற்கு , அவநம்பிக்கை ஏற்படுத்தும் எந்த செயல்களையும் நாம் தடுத்து , ஒவ்வொரு சந்தேகத்தையும் தூக்கி எறிய வேண்டும். அவருடைய வார்த்தைகளை நற்செய்தியை நாம் நம்ப வேண்டும், அவரின் வழியான வாழ்வை நாம் தொடர்தல் வேண்டும்.

செயல் முறைபடுத்தி அதனை நம் வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும்.
1) நமக்கு சந்தேகம் ஏற்படும் , அவநம்பிக்கை கொடுக்கும் செயல்கள் யாவை என அறிந்து கொள்ள வேண்டும்.
2) நாம் அவரை விசுவசித்தால், என்ன வெல்லாம் ஏற்படும் என்ற பயத்தை போக்குதல் வேண்டும்.
3) நமது பயத்தை எதிர்கொண்டு , உண்மையான விசுவாசத்தை அறிந்து கொள்ள வேண்டும். நமது பயங்களால் நமக்கு பரிசுத்த வாழ்வில் ஏற்படும் இடையுறு அனைத்த்தும் உண்மையான பயத்தினால் அல்ல

இயேசு "வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது''
என்று கூறுகிறார் . அவர் திவ்ய நற்கருணையில் இருப்பதை இங்கே குறிப்பிடுகிறார். திருப்பலியில் நமக்கு வழங்கப்படும் உணவாகும். இந்த திவ்ய நர்கருனையினால், நீங்கள் முழு நலத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் ? உங்களை ஏதாவது தடுக்கிறதா ? இந்த நற்கருணை வாங்க ? எல்லா தடைகளையும் உடைத்தெறிய வேலை செய்யுங்கள், கடினமாக உழையுங்கள். உங்கள் ஆன்மாவிற்கு கண்டிப்பாக ஒரு நல்ல மாறுதலை தரும். கிறிஸ்துவோடு உங்களை இணைத்து கொள்ள நீங்கள் உண்மையாக விருப்பத்துடன் இருந்தால், அவர் அந்த இணைப்பிற்கான தடையை கண்டிப்பாக ஒதுக்கி உங்களுக்க் பாதை ஏற்படுத்தி கொடுப்பார்
© 2015 by Terry A. Modica


Friday, July 24, 2015

ஜூலை 26 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 26 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Ephesians 4:1-6
John 6:1-15

யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ``இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?''என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
பிலிப்பு மறு மொழியாக, ``இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே''என்றார்.
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, ``இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?''என்றார்.
இயேசு, ``மக்களை அமரச் செய்யுங்கள்''என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந் தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், ``ஒன்றும் வீணாகாதபடி,எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்''என்று தம் சீடரிடம் கூறினார்.
மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ``உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே''என்றார்கள்.
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.





பல மடங்காக பெருக செய்த அற்புத நிகழ்வின் உண்மை

இன்றைய நற்செய்தியை , நான் வேறு விதமாக கேட்டிருக்கிறேன் , “இயேசு அங்கு உள்ள எல்லா மக்களையும் , அவர்கள் கொண்டு வந்த உணவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள செய்தார், அது தான் அந்த அற்புதம் ஆனா நிகழ்வு என்றும், “ மேலும் "அங்கு எல்லோருக்கும் போதுமான அளவு உணவு இல்லை , ஆனால் இயேசுவின் போதனையால், ஒவ்வொருவரும் குறைந்த உணவு எடுத்து கொண்டு, மற்றவர்களுக்கு கொடுத்தார்கள் அதனால், அங்கே உணவு மீதம் இருந்தது , அங்கிருந்த மக்கள், தனக்கு தாகம் செய்து , மற்றவர்களுக்கு கொடுத்தார்கள். “ என்றும் நாம் கேட்டிருக்கிறோம்.

கண்டிப்பாக இது உண்மை போல தோன்றும், ஏனெனில், கடவுள் உணவை பல மடங்காக ஆக்க முடியாது என்று நாம் நினைக்கலாம்.

நாம் இப்போது கொண்டாடி கொண்டிருக்கும் திவ்ய நற்கருணையின் முன்னோடி யாக இந்த அற்புத நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அங்கு , ரொட்டி துண்டுகளும், மீன்களும், கடவுளின் அற்புதத்தால், பல மடங்காக பெருக்கப்பட்டு, எல்லோரும் போதுமான அளவு உண்டு, இன்னும் மீதம் இருந்தது. திருப்பலியில், நடக்கும் நிகழ்வை நாம் கூர்ந்து கவனித்தோமானால், அதனை நம் இதயத்திற்கு எடுத்து செல்லும் பொழுது, இயேசு நமது பசியை போக்கி, நமக்கு தேவையானதை விட அதிகம் கொடுக்கிறார். திருப்பலிக்கு செல்லும் முன்பு, இயேசுவிடம் இருந்து உங்களுக்கு என்ன வேண்டும் ? உங்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுக்க இயேசு முயல்வார். அல்லது அதனை அடையும் வழியை காண்பிப்பார், - நிறைவாக உங்களுக்கு தருகிறார்.

இயேசு நமக்கு அற்புத செயல்களால், நமக்கு கொடுக்கும் அனைத்திற்கும், , நமக்கு கிடைப்பது அனைத்தும் அவரால் தான் என்று. நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராத ஒன்றை நாம் எதிர்பார்க்க வேண்டும். கடவுளின் சரியான தருணத்திற்கு நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக, கடவுள் நமக்கு தேவையானதை விட அதிகமாகவே தருகிறார் என்பதை நாம் புரிந்து இருக்க வேண்டும்.

அந்த மலையில் உள்ளவர்கள் , மீனுக்கு பதில், வேறு ஒரு அசைவ உணவை எதிர் பார்த்து இருக்கலாம், ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ , இயேசுவும், அவரின் போதனைகள், அவர்களின் ஆன்மாவை விசுவாசத்தில் நிறைத்தது. சோதனைகளில் இருந்து வெளி வரும் அளவிற்கு அவர்களுக்கு ஆற்றல் கிடைத்தது. எல்லோருக்கும் கிறிஸ்துவின் அன்பை , கிறிஸ்துவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளளும் அளவிற்கு கிடைக்க பெற்றார்கள்.


திவ்ய நற்கருணை வழிபாட்டில், நமக்கு போதும் போதும் என்கிற அளவிற்கு தேவையான அனைத்தும் இருக்கிறது. அந்த ரொட்டி துண்டும் திராட்சை ரச , கிறிஸ்துவின் இரத்தமும் நமக்கு கொடுக்க தயாராக இருக்கின்றன. உங்களுக்கு இயேசுவிடமிருந்து என்ன வேண்டும். ? இன்னும் அதிக விசுவாசம்? அதீத நம்பிக்கை? அதிக அன்பு ? திருப்பலிக்கு செல்லும் வழியில் நமக்கு என்ன வேண்டும் என்று யோசித்து செல்வோம், அப்பொழுது, திருப்பலியில் நாம் அதனை அதிகம் எதிர்பார்த்து கொண்டு இருக்கலாம். கண்டிப்பாக இயேசு கொடுப்பார்.
© 2015 by Terry A. Modica