Saturday, July 11, 2015

ஜூலை 12 2015 ஞாயிறு நற்செய்தி

ஜூலை 12 2015 ஞாயிறு நற்செய்தி
ஆண்டின் 15ம் ஞாயிறு
Amos 7:12-15
Ps 85:9-14
Ephesians 1:3-14
Mark 6:7-13


மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து,அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித்தார். மேலும், ``பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு,பை,இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்;அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்''என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
மேலும் அவர், ``நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால்,அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்பொழுது,உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்''என்று அவர்களுக்குக் கூறினார்.
அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;பல பேய்களை ஓட்டினார்கள்;உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் , இயேசு நம்பிக்கையை பற்றி நமக்கு போதனை செய்கிறார். கடவுளின் அழைப்பை ஏற்று இந்த உலகில் கடவுளின் அன்பை பரப்பவும், அவரின் நற்செய்தியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் நாம் அவரை முழுமையாக நம்ப வேண்டும். நமக்கு தேவையான அனைத்தையும் அவர் கொடுப்பார் என விசுவசிக்க வேண்டும்.
மேலும், நமக்கு தேவையான நேரத்தில் , என்ன தேவையோ அதனை நமக்கு கொடுப்பார் என நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்., நமக்கு அது போதுமானதகா இல்லாமல் கூட இருக்கலாம் . அவர் இன்னும் கொடுக்க வில்லை என அவர் மேல் அவ நம்பிக்க கொள்ள கூடாது .

ஒவ்வொரு திருப்பலி முடியும் தறுவாயில் , நமது அழைத்தலை நாம் ஒப்பு கொள்ளும் நிகழ்வு நடக்கிறது. கடைசி ஆசிர்வாதம் நம்மை அனுப்பி, இயேசுவோடு நமது தொடர்பு புதுபிக்க படுகிறது. நற்செய்தியிலும், திவ்ய நற்கருணை யிலும் , ஆலய குழுக்களிலும், இயேசுவின் பிரசன்னம் இருந்து கொண்டு, (நாம் அதனை விசுவசித்தால் ) , நம்மை தைரியமாக இந்த உலகிற்கு அனுப்பி, என்ன செய்ய சொன்னாரோ அதனை செய்வோம்.
குருவானவரின் மூலமாக , இயேசு நம்மை இந்த உலகிற்கு அனுப்பி, இயேசு உண்மையான கடவுள், நம்மை காப்பவர் , நம்மில் இருப்பவர் என்பதை நம் சாட்சியத்தின் மூலம் , நாமே சாட்சியாக இருக்க வேண்டும் என இயேசு அனுப்புகிறார். இயேசுவோடு, இயேசுவின் மூலம் , நாமெல்லாம், மனம் மாற்றுபவராக, இந்த உலகில் ஒரு மாறுதல் கொண்டு வருபவராக நாம் இருப்போம்.

எல்லோரு ம் திவ்ய நற்கருணை யில் கலந்து கொண்ட அனைவரும், அதன் உண்மையான அர்த்தத்தோடு , நாம், ஜெபம் சொல்வதிலும், நற்கருணை பெற்று கொள்வதிலும், திருப்பலியில் நாம் கவனம் செலுத்தும் போது , நம்பிக்கையுடன் நாம் செல்லலாம் , இயேசு உங்களை அவரின் ஆவியோடும், போதுமான தேவைகள் அனைத்தும் கொடுத்து திருப்பலியிலிருந்து அனுப்புகிறார்.

எனினும், இந்த இறைபணிக்காக நாம் ஆயத்தம் ஆகும் பொழுது , நமக்கு தேவையானதை விட அதிகமாக எடுத்து செல்கிறோம். இதன் மூலம் கடவுள் மேல் நாம் கொண்ட நம்பிக்கையை , அவ நம்பிக்கையாக நாம் காட்டுகிறோம் .

ஒரு நல்ல மனமாறுதல் இறைபணி ஆற்றிட, நாம் முழுமையாக கடவுளிடம் சரணடந்த்திட வேண்டும். மேலும், இன்னும் கடவுளிடமிருந்து வேண்டும் என்ற ஆசையோடு இருந்தால், , நம்மை நமது வாழ்வின் அர்த்தம் உள்ள வாழ்வாக இருக்காது.

© 2015 by Terry A. Modica

No comments: