Saturday, July 4, 2015

ஜூலை 5 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 5 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு

Ezekiel 2:2-5
Ps 123:1-4
2 Corinthians 12:7-10
Mark 6:1-6



மாற்கு நற்செய்தி

சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
(
மத் 13:53 - 58; லூக் 4:16 - 30)
1அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4இயேசு அவர்களிடம்,' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் 'என்றார்.5அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)



நிராகரிப்பும், புரிந்து கொள்ளாமையும் , அவநம்பிக்கையும்

நாம் விசுவாசத்திற்கு வரும் முன்பு நம்மை பார்த்தவர்களிடம் , நாம் விசுவாசத்தை பகிர்ந்து கொள்ளும்பொழுது , அவர்கள் நம்மை பார்க்கும் விதத்தை , நாம் கண்டறியும் பொழுது நம்மில் ஒரு வலி ஏற்படுவதை நமக்கு , இன்றைய நற்செய்தி காட்டுகிறது.

இயேசுவிற்கு நடந்தது போல , நம்மையும் சிலர் நிராகரிப்பார்கள், சிலர் நம் மேல் அவநம்பிக்கையோடு இருப்பார்கள், மேலும் , நாம் ஏன் மாறினோம்? என்று அவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். நம்மை பார்த்து அவர்கள் பயப்படலாம், அவர்கள் பார்வையில், ஒரு பொறாமை இருக்கும். நாமெல்லாம் ஏதோ ஒரு விசயத்தில், நாம் ஆர்வத்துடன் இருக்கிறோம் என்றும், அதனால், நம் சாட்சியத்தை ஒதுக்கி விட்டு விலகியே நிற்கின்றனர்.


சாதாரண டவுனிலிரிந்து வாழ்ந்து வந்த இயேசு, அதை முடித்து இறைபணி வாழ்வ்விற்கு வந்த பின்பு, முற்றிலுமாக இயேசு மாறினார். ஏனெனில், அனைவரையும் , அவர் சொல்கிறபடி வாழச் சொன்னார், அதனால், அவரை எல்லோரும் எதிர்ப்பார்கள், மற்றும் கிண்டலுக்கு கேலிக்கும் ஆளானார். இது பைத்திய கார தனமா தெரிய வில்லையா ?


இன்னும் இந்த நிலை மோசமாக இருக்க , இயேசு அவரின் எல்லா நேரத்தையும், அவர் பின் வரூபவர்களுக்கும் , அவரை இட்டு ஒதுங்கி இருப்பவர்களுக்கும் , விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று கூறி , எல்லா காலத்திலும், அவரின் ஓய்வு நேரத்திலும் எல்லோரையும் மாற்ற முயற்சி செய்தார்.


நமக்கு யாராவது சவால் விட்டால், அதனை யாரும் விரும்புவதில்லை. என்ன மாதிரியான சவால் என்றால், நமக்கு எது மிகவும் இலகுவ்வாகவும் , பிடித்தமாகவும் இருப்பதை நாம் விட்டு விட வேண்டும் என்ற சவால் என்றால் நமக்கு பிடிப்பதில்லை. , எனினும் , நாம் அமைதியாக இருப்பதற்கு இது மட்டும் காரணமில்லை, கிறிஸ்து நம்மை நற்செய்தியை உலகிற்கு சொல்ல அழைப்பு விடுக்கிறார். மனம்மாற்றம் முக்கியமானது என, எல்லோருக்கும் தெரிவித்தல் வேண்டும். , அப்படி தெரிவிக்கவில்லை என்றால், நாம் இயேசுவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், இயேசுவை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு எதிராகவும் நாம் பாவம் செய்கிறோம்.

நம் சொந்த மனம் மாற்ற நிகழ்வை பகிர்ந்து கொண்டு, பரிசுத்த வாழ்வின் உள்கருத்தை மற்றவர்களுக்கு விளக்கி சொல்லி, மற்றவர்களையும் மனம் மாற அழைப்பு விட வேண்டும், ஆனால், கண்டிப்பாக மாற வேண்டும் என்று அவர்களை கேட்க கூடாது .

இதனால் நீங்கள் நிராகரிக்கபட்டால், , இயேசுவிற்கு உங்கள் மனம் புரியும். உங்கள் வலி அவருக்கு தெரியும். அவர்களின் புறக்கணிப்பு இயேசு உங்கள் மேல் அபரிதமான பெருமிதத்துடன் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டு அதனை கருத்தில் கொண்டால், அந்த புறக்கணிப்பு மறைந்து விடும்.

© 2015 by Terry A. Modica

No comments: