Friday, July 17, 2015

ஜூலை 19 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 19 2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 16 ம் ஞாயிறு
Jeremiah 23:1-6
Ps 23:1-6
Ephesians 2:13-18
Mark 6:30-34


மாற்கு நற்செய்தி

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை,கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், ``நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்''என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால்,உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு,எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி,அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு,அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.



ஆற்றலை தேடி, நமது அழைப்பிற்கான இறைபணி செய்ய

இந்த தேவ அழைப்பில் , ஒவ்வொருவரும் உற்சாகமாகவும் , சில நேரங்களில் அதித உற்சாகத்துடனும், இருக்கிறோம். சிறுவர்களை பக்தியுடன் வளர்ப்பதோ? அல்லது வயதானவர்களுக்கான இறைபணி செய்வதோ, அல்லது இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதோ அல்லது, கோவிலில் இறைபணி செய்வதோ அல்லது குருவானவருக்கு உதவி செய்வதோ எதுவாக இருந்தாலும் - நமக்காக ஒரு ஓய்வை நாம் எடுத்து கொள்ள வேண்டும். நமது ஆற்றலை, சக்தியை நாம் புதுபித்து கொள்ள வேண்டும். அதனை தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

இந்த கட்டளையை நாம் கடை பிடிக்காவிட்டால், நாம் சோர்ந்து போய்விடுவோம். நாம் சுய நலத்துடன் அல்லது தவறான முடிவு எடுத்து விடுகிறோம். முதல் வாசகத்தில் கூறி உள்ளது போல, தவறான மேய்ப்பாளனாக ஆகி விடுவோம். தவறான பாதையில் அழைத்து செல்பவர் போல ஆகி விடும். ஏன் ? இப்படி போனால், சோதனைகளால் நாம் தாக்கப்பட்டு அதற்கு அடிமை ஆகி விடுவோம். நம்மிடம் இல்லாததை நாம் கொடுக்க முயற்சி செய்யும் போது இன்னும் பலமிழந்து விடுவோம்.

கடவுளின் அன்பை வெளிப்படுத்த, நமக்கு ஆற்றலும், சக்தியும் தேவைபடுகிறது. மற்றவர்களுக்கு இறைபணி செய்ய, நாம் ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் இருக்க வேண்டும். நாம் ஒய்வு எடுக்காமல் இருந்தால், எப்படி நாம் எப்பொழுதும் ஆற்றலுடன் இருக்க முடியும், எப்படி ஜெபம் செய்ய முடியும். நம்மை காத்து கொள்ளா விட்டால், நாம் எப்படி மற்றவர்களுக்கு பணி செய்ய முடியும்? இயேசு நம்மில் வாழ்கிறார். நாம் அவரை மற்றவர்களுக்கு கொடுக்கும் முன்பு, நம்மிடம் அவர் முழுமையாக நம்மில் வர அனுமதிக்க வேண்டும்.


தினமும், நாம் மேய்ப்பன் இல்லாத ஆடுகளை போல உள்ள மக்களை நாம் சந்திக்கிறோம். அறிந்தோ அறியாமலோ , அவர்களுக்கு இயேசு தேவை ஆக இருக்கிறது. இயேசுவிடம் இருக்கும் எல்லையில்லா அன்பு அவர்களுக்கு தேவை ஆகா இருக்கிறது , நிபந்தனையில்லா அன்பு அவரிடமிருந்து இவர்களுக்கு தேவை ஆக . இருக்கிறது . இயேசு கொடுக்கும் அமைதியையும் , குனமக்குதலும், அவர்களுக்கு தேவையாக இருக்கிறது. இயேசு அவர்களுக்கு உதவ விரும்பிகிறார். இயேசுவின் கைகளாகவும், கால்களாகவும், குரலாகவும் இருக்கும் நாம், பலமின்றி இருந்தால், எப்படி நாம் சேவை செய்ய முடியும். ?

தனிமையான இடத்திற்கு சென்று இயேசுவோடு அவரின் ஊட்டமான அன்பினை பெற்று ஒய்வு எடுத்தல் வேண்டும். நாம் தியானத்திற்கோ அல்லது சிறு கால விடுப்பிற்கோ நாம் சென்று வந்து நாம் இன்னும் சோர்வாக காணப்பட்டால், நமக்கு இன்னும் ஒய்வு தேவை என்று அர்த்தம். புதுபித்தல் முறையை நாம் குறைத்து விட்டோம் என்று அர்த்தம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாமல், இயேசு நம்மை அழைக்கிறார் " என்னோடு ஒய்வு எடுங்கள், என்னை போல மாறும் வரை என்னோடு இருந்து விட்டு செல்லுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.

© 2015 by Terry A. Modica


No comments: