Saturday, January 30, 2016

ஜனவரி 31 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 31 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பொது காலத்தின் 4ம் ஞாயிறு
Jeremiah 1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Corinthians 12:31 -- 13:13
Luke 4:21-30
லூக்கா நற்செய்தி
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கிநீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்றார்.22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர் 23அவர் அவர்களிடம்நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு  நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to www.arulvakku.com)

நம்மை மற்றவர்கள் தவறாக கணிக்கும்பொழுது:

இன்றைய நற்செய்தியை உன்னிப்பாக கவனித்து பாருங்கள், போன வாரம் இயேசு வாசித்து முடிந்த நற்செய்தியை  தொடர்ந்து இன்றைய நற்செய்தி ஆரம்பிக்கிறது. (ஆண்டவருடைய ஆவி என்மேல் உளதுஏனெனில்அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) நீங்கள் கேட்ட இந்த மறை நூல் வாக்கு இன்று நிறைவேறியது என்று தொழுகை கூடத்தில் இருந்தவர்களிடம் கூறினார். அவர்கள் அவரை பற்றி உயர்வாக பேசினர். ஆனால் இறுதியில் அவர் மேல் சீற்றம் கொண்டனர்.

அவர்கள் என்னத்தை எது மாற்றியது ?
ஆச்சர்யமாய் அவரை பார்த்தவர்கள் திடிரென குழப்ப மடைந்தார்கள் , "சூசை யின் மகன்தானே ? " என்று அவர்கள் நினைத்த பொழுது அவர்கள் குழப்பம் கொண்டார்கள். அதில் ஒரு சிலர் இப்போது தான் முதன் முதலாக இயேசுவை பார்க்கிறார்கள். இவர்களை பற்றி பிறகு பார்ப்போம்.  இந்த மக்கள் அனைவரும், எப்படி ஒரு குழந்தை நடக்க கற்று கொள்ளும்பொழுது விழுமோ அதே போல ஒரு அனுபவத்தை இயேசுவிடமிருந்து பெற்றனர். தச்சு தொழிலாளியாக இயேசு இளம் வயதில் செய்த தவறுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர் , சூசையப்பார் இறந்த பொழுது இயேசு கண்ணீர் விட்டதையும் எண்ணி பார்த்தனர்.

அவர்கள் எண்ணங்கள் எப்பொழுது மாறியது ? அவர்கள் பழைய நினைவுகளுடன் , அதே எதிர் பார்ப்பில் அவரது பேச்சை கேட்டனர், மாறாக அவர்கள் ஆவியினால் உந்தப்பட்டு இயேசுவின் பேச்சை கேட்டு இருந்தால் , தெய்விக தொடர்பு இருந்திருக்கும். மாறாக அவர்கள் எண்ணங்கள் மாறி விட்டது.

உங்கள் குணாதிசயங்களுக்கு மாறாக யாரிடமாவது பேசி  அவர்களை குழப்பி பாருங்கள், நீங்கள் இளம் வயதினராகவோ அல்லது மிகவும் வயதானவர் போல மாறி பேசினால், அல்லது உங்களால் முடியாத செயலை , கண்டிப்பாக செய்ய முடியும் என்று சொன்னால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியமாக இருக்கும். அந்த ஆச்சரியம் குழப்பத்தை உண்டு பண்ணும். மேலும், உங்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான உண்டாக்கும்.

நாம் அவர்களிடம், நம்மை அவர்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடக்காத பொழுது , நாம் குழப்பம் அடைந்து , அவர்களுக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து விடுகிறோம். ஆனால், இயேச இதனை எப்படி கையாண்டார். பரிசுத்த ஆவியினால் தூண்டபட்டு அமைதியாக உண்மையை பேசினார். உணர்ச்சி வசப்பட்டு எதுவும் பேசினாரா ? இருந்தது. ஏனெனில் அவரும் மனிதனாக தானே இருந்தார். நாம் அனைவருமே உணர்ச்சி அடையும் தன்மையுடன் தான் தந்தை கடவுளால் படைக்கபட்டிருக்கிறோம். ஆனால் பிரச்சினை எங்கே என்றால், நாம் கேட்கும் பொழுது, ஆவியினால் தொடர்பு கொண்டு கேட்காமல், உணர்ச்சி மிகுதியால் கேட்கிறோம். , பரிசுத்த ஆவியின் துணை கொண்டு கேட்போம்.
© 2016 by Terry A. Modica


Saturday, January 23, 2016

ஜனவரி 24 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 24 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பொதுகாலத்தின் 3ம் ஞாயிறு
Nehemiah 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Corinthians 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி
மாண்புமிகு தியோபில் அவர்களேநம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டுஅவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அலகையினால் சோதிக்கப்பட்ட பின்புஇயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது
அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளதுஏனெனில்அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.''
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

இன்றைய கிறிஸ்துவின் இறைபணி
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் இறைபணி பற்றிய அறிவிப்பை பார்க்கிறோம்.  ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளதுஏனெனில்அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' இன்று ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

இந்த இறைபணி அனைத்தும் , இயேசு விண்ணகத்திற்கு சென்றவுடன் , இந்த பூமியை விட்டு அவர் சென்றவுடன் முடிந்து விட்டதா  ?

கொரிந்தியர் திருமுகத்தில் கூறியுள்ளது போல, நாமும் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறோம்.
நாம் அனைவரும் - ஒவ்வொருவரும் - அவர் உடலின் முக்கிய உறுப்பாக இருக்கிறோம்! நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள் . கடவுள் உங்களை படைத்து, கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து உள்ளார், ஏனெனில், உங்களால் முக்கியமான வித்தியாசத்தை இந்த உலகில் கொண்டு வர முடியும். உங்களால் செய்ய முடிந்ததை மற்றவர்காளால் செய்ய முடியாது. இந்த உலகை இன்னும் கடவுளுக்கு ஏற்ற இடமாக மாற்ற உங்களால் முடிந்த வழி மற்றவர் செய்ய முடியாது.
கிறிஸ்தவர்களாகிய நாம், விசுவசிக்கும் சமூகத்தோடு, நாம் கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். திவ்ய நற்கருணையில் நாம் கிறிஸ்துவை பெரும்பொழுது , நாம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறோம், அதன் முலம் இந்த உலகில் அவரின் இறைபணி புதுபிக்கபட்டு நாம் தொடர்கிறோம். அவர் இறை சேவை நம் இறை சேவை ஆகும்.
திவ்ய நற்கருணையில் நாம் இயேசுவை பெறுகிற பொழுது , அவரின் மனித தன்மையை மட்டுமல்ல , தெய்வீக தன்மையையும் முழுமையாக பெறுகிறோம். அதே நேரத்தில், அவரின் இறை பணியையும் நாம் முழுமையாக உட்கொள்கிறோம். ஆண்டவரின் ஆவி நம் மேல் இறங்குகிறது. ஒவ்வொரு திருப்பலியும் நம் அழைத்தலை புதுபிக்கும் தருணம் ஆகும். அதன் முலம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் செய்கிறோம்.
மாறாக இதனை சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் நாம் இயேசுவை திவ்ய நற்கருணையில் பெறும்  பொழுது , லூக்கா நற்செய்தியில் 4:18-21 கூறப்பட்டுள்ளது முழுமையடைகிறது.
இது நடைபெறாமல் தடுக்கும் அத்தனை செயல்களும் பாவமாகும்.
நமது ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, சாத்தான் நம்மை ஜெயிக்கும்பொழுதும் , மீட்பின் செய்தியை நாம் கேட்காமல் நமது ஆன்மா துன்ப படும் பொழுதும் கிறிஸ்துவின் உடலின் ஒரு பகுதி சரியாக அதன் பணியை செய்ய வில்லை என்று அர்த்தம் . இந்த உலகின் தேவையான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். இயேசு அவரின் இறைபணியை நம் மூலம் தொடர்கிறார்.


© 2016 by Terry A. Modica

Friday, January 15, 2016

ஜனவரி 17 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி  17 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு
Isaiah 62:1-5
Ps 96:1-3, 7-10
1 Corinthians 12:4-11
John 2:1-11

யோவான்  நற்செய்தி
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ``திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார்.
இயேசு அவரிடம், ``அம்மாஅதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார்.
இயேசுவின் தாய் பணியாளரிடம், ``அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்.
இயேசு அவர்களிடம், ``இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள்.
பின்பு அவர், ``இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லைதண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ``எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.


பிரச்சினைகளை எவ்வித தவறும் இல்லாமல் கையாள்வது எப்படி ?
எப்படி ஒரு பிரச்சினை ஏற்படுகிற பொழுது, யாருக்கும் பாவம் இழைக்காமல் அதனை கையாள்வது என்று  இன்றைய   நற்செய்தி  நமக்கு ஒரு எடுத்து காட்டாக இருக்கிறது.
அங்கே ஒரு தேவை இருப்பதை மரியாள் அறிந்து, இயேசு அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறாள். ஒரு அற்புதம் அங்கே நிகழ்ந்தால் தான், இந்த பிரச்சினை ஒரு முடிவிற்கு வரும் என்று மரியாளுக்கு தெரியும். இயேசுவில் உள்ள தெய்வீகம் மரியாளின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மரியாள் விரும்பினாள். ஆனால் இயேசு மனிதனாக அங்கே பதில் கூறினார். இந்த மாதிரி ஒரு அற்புதம் நிகழ்த்தி அவரின் தெய்வீக தன்மையை வெளிபடுத்த விரும்பவில்லை. இயேசு ஆன்மாவை காப்பாற்றவே விரும்பினார். காலியான திராட்சை ரச ஜாடிகளை அல்ல.

இயேசு அவரிடம், ``அம்மாஅதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார். இதனையே "உங்கள் வேண்டுதலுக்கு மதிப்பு அளிக்கிறேன், ஆனால், இங்கே இந்த அற்புதத்தை நிகழ்த்தி தான் என்னுடைய மீட்பின் பணியை ஆரம்பிக்க வேண்டுமா ?  மக்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கும், விருந்திற்கும் வந்து இந்த உலக இன்பங்களை தான் என்னிடம் கேட்பார்கள், ஆனால், நாம் நித்திய வாழ்வை அவர்களுக்கு தர விரும்புகிறேன்.

கத்தோலிக்கர்களாக நாம் , இந்த நற்செய்தியில் அம்மா மரியாள் செய்யும் உதவியை காட்டி, அன்னை மேரி மேல் விசுவாசம் கொள்கிறோம். எப்படி  அம்மா நமக்கு தேவையானதை இயேசுவிடமிருந்து பெற்று கொடுப்பார், என்று அன்னை மரியாளை பார்க்கிறோம். ஏனெனில் இயேசுவின் மனதை மாற்ற அன்னை மரியாளால் முடியும். இயேசு முடியாது என்று சொன்னார், ஆனால், இந்த பிரச்ச்சினையை  அவர் வழியில் முடித்து வைத்தார். அன்னை மரியாள் வெற்றி கண்டால், இயேசு வெற்றி பெறவில்லை.

இப்படிதான் ஒரு பிரச்சினையை நாம் பார்க்கிறோம் ?  ஒருவர் ஜெயிப்பவரும், ஒருவர் தோல்வியை தழுவினால் தான் அந்த பிரச்சினை முடிவிற்கு வந்தது என்று அர்த்தம் ?  அதனால், நாம் கேட்பதை  கடவுள் கொடுக்கவில்லை என்றால் , நாம் தோற்றவர் என்று நினைக்கிறோம். அதனால், இன்னும் அதிகமாக ஜெபிக்கிறோம், அதன் மூலம் கடவுள் தோற்றவர் ஆகிறார். அதுவும் சரியான் பதில் கிடைக்க வில்லையென்றால், நாம் அன்னை மரியிடம் சென்று , அவர் மகனிடம் வேண்டி நமக்கு தேவையானதை கேட்கிறோம்.
ஆனால், கடவுள் நாம் ஆரம்பம் முதல் ஜெயிப்பவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். நமக்கு  எது நல்லது என எப்பொழுதுமே நினைப்பவர். இதனை அன்னை மரியாளும் அந்த சிப்பந்திகளிடம் சொல்லும்பொழுதே அறிவாள். ``அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.

பிரச்சினைகளோ அல்லது கருத்து வேற்றுமையோ ஒன்னும் தப்பான விசயம் இல்லை.அதற்கெல்லாம் ஒரு நல்ல விடை, நாம் கடவுளிடம் நம்பிக்கையோடு இருந்தால் கிடைக்கும். இயேசு அந்த மண்டபத்தில் உள்ளவர்கள்  மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று மரியாளுக்கு தெரியும், இயேசுவின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தாள். இயேசு தந்தை மேல் முழு நம்பிக்கை வைந்திருந்தார். தந்தை கடவுள் மக்கள் மேலும், இயேசுவின் மீட்பின் இறைசேவை யிலும் அக்கறை வைத்து இருந்தார். அங்கே அனைவருமே  வெற்றி பெற்றனர்.


© 2016 by Terry A. Modica


Friday, January 8, 2016

ஜனவரி 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு ஞாயிறு
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22
லூக்கா நற்செய்தி
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து,
 நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெsருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்றுஇறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது.
தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, என் அன்பார்ந்த மகன் நீயேஉன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

நீங்கள் எதற்காக காத்து இருக்கிறீர்கள்?
இன்றைய நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பை பற்றியே பேசுகின்றன. நீங்கள் எதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறிர்கள்?  அநீதயிலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும், அல்லது உங்களுக்கு பிடித்தமானவர்கள் கடவுளிடம் வர வேண்டி நிற்கும்போழுதும்,  கடவுள் உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ? குழப்பத்திலும் , நிச்சயமில்லா நிலையிலும் கடவுள் உங்களுக்கு என்ன மாதிரியான அறிவுரைகள் தர வேண்டும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். ?
கிறிஸ்து கொடுத்த அமைதி அன்பளிப்பை , நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும்பொழுது உணர்கிறீர்களா ? அல்லது கலக்கமும், கவலையும், பொறுமை அற்றும் இருக்கின்றீர்களா?
இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானும் , அவரை சுற்றி இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஏனெனில். அவர்கள் யோவான் தான் அவர்கள் எதிர்பார்த்த மெசியா என நினைத்து கொண்டிருந்தனர். அநிதிக்கு எதிராகவும், வேற்று நாட்டினரின் ஆதிக்கத்தையும் , பல பாவிகளிடமிருந்தும் மெசியா வந்து தம்மை காப்பாற்றுவார் என்று காத்திருந்தனர். ஆனால்,திருமுழுக்கு யோவானிடமிருந்து மிகுந்த உற்சாகத்தையும் , மனம் திரும்ப வேண்டி அவர் கூரியதையும் கேட்டனர்.
எனினும், கடவுள், இதனை எல்லாம் விட மிக பெரிய முழுமையான திட்டம் வைத்து இருந்தார். உண்மையான மெசிய பரிசுத்த ஆவியின் சுத்தபடுத்தும் நெருப்பின் மூலம் திருமுழுக்கு பெறுவார் என திட்டம் வைத்து இருந்தார். யோவான்  மக்களை மனம் திரும்புங்கள் என்று எடுத்து சொல்ல முடியும், உண்மையான மெசியாவோ, மக்கள் அனைவரும் பரிசுத்த வாழ்வில் வாழ தேவையான ஆவியையும் ஆற்றலையும் வழங்க முடியும்.
இயேசு தன்னையே யோவானின் திருமுழுக்குக்கு தன்னை (பாவமே இல்லாதவர்) அர்ப்பனித்தது ஏனெனில் , நம்மோடு இணைந்து, நம் மனம் திரும்பலுக்கு தன்னையும் இணைத்து கொண்டார். அதிலிருந்தே நம்மை  சாத்தானிடமிருந்து மீட்கும் பணியை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு நம் பாவங்களை சிலுவையில் சுமந்து நம்மை மீட்டார்.

கிறிஸ்தவ திருமுழுக்கில், இயேசுவின் புனிதத்திலும் , அவரின் இறைசேவையிலும் நாம் முழ்கி எடுக்கபடுகிறோம். அவரின் குருத்துவத்திலும், நற்செய்தி அறிவிப்பதிலும், பணியாளனாக தலைமை ஏற்பதிலும் , மற்றவர்களின் மீட்புக்காக அவர் பட்ட பாடுகளும் அனைத்திலும் நம்மையும் இணைக்கும் நிகழ்வாக திருமுழுக்கு இருக்கிறது. இயேசு செய்ததை போல நம்மையும் செய்ய பரிசுத்த ஆவியானவர் ஆற்றலை நமக்கு தருகிறார். தந்தை கடவுளும், " என் அன்பார்ந்த மகன் நீயேஉன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து சொல்கிறார்.

நீங்கள் என்ன எதிர்பார்த்து கொண்டு காத்து இருக்கின்றீர்கள் ? உங்கள் திருமுழுக்கினால் உங்கள் அனுதின வாழ்வில் என்ன நடக்க வேண்டும்? என நினைக்கிறீர்கள் ? எதிர்பார்ப்பு என்பது ஒரு நல்ல விசயம். -- ஆனால் இந்த எதிர்பார்ப்பு  பொறுமையின்மயாலோ  இருக்ககூடாது, ஏனெனில், இது ஏமாற்றத்தை தான் தரும்.  கடவுளின்  கருணையினால், நமக்கு எதிர்பார்ப்பு இருக்கவேண்டும், கடவுள் நமக்கு என்ன செய்ய சொல்கிறார் என்று நாம் கண்டு கொண்டு ,  அதிலிருந்து வரும் எதிர்பார்ப்புகள் நமக்கு மகிழ்வும், அதித விசுவாசத்தையும் , இன்னும் பல அற்புதங்களையும் கொடுக்கும்.



© 2016 by Terry A. Modica