ஜனவரி 17
2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 2ம் ஞாயிறு
Isaiah
62:1-5
Ps 96:1-3, 7-10
1 Corinthians 12:4-11
John 2:1-11
Ps 96:1-3, 7-10
1 Corinthians 12:4-11
John 2:1-11
யோவான் நற்செய்தி
கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு
அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே
இயேசுவின் தாய் அவரை நோக்கி, ``திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார்.
இயேசு அவரிடம், ``அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார்.
இயேசுவின் தாய் பணியாளரிடம், ``அவர் உங்களுக்குச்
சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.
யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள்
அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்.
இயேசு அவர்களிடம், ``இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள்.
பின்பு அவர், ``இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம்
கொண்டுபோங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த
தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத்
தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ``எல்லாரும் நல்ல திராட்சை
இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த
இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார்.
இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில்
உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். இதன் பிறகு அவரும் அவர் தாயும்
சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள்
தங்கியிருந்தனர்.
பிரச்சினைகளை எவ்வித தவறும் இல்லாமல் கையாள்வது எப்படி ?
எப்படி ஒரு பிரச்சினை ஏற்படுகிற பொழுது, யாருக்கும் பாவம் இழைக்காமல் அதனை
கையாள்வது என்று இன்றைய நற்செய்தி
நமக்கு ஒரு எடுத்து காட்டாக இருக்கிறது.
அங்கே ஒரு தேவை இருப்பதை மரியாள் அறிந்து, இயேசு அதற்கு ஏதாவது செய்ய வேண்டும்
என விரும்புகிறாள். ஒரு அற்புதம் அங்கே நிகழ்ந்தால் தான், இந்த பிரச்சினை ஒரு
முடிவிற்கு வரும் என்று மரியாளுக்கு தெரியும். இயேசுவில் உள்ள தெய்வீகம் மரியாளின்
வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மரியாள் விரும்பினாள். ஆனால் இயேசு
மனிதனாக அங்கே பதில் கூறினார். இந்த மாதிரி ஒரு அற்புதம் நிகழ்த்தி அவரின் தெய்வீக
தன்மையை வெளிபடுத்த விரும்பவில்லை. இயேசு ஆன்மாவை காப்பாற்றவே விரும்பினார்.
காலியான திராட்சை ரச ஜாடிகளை அல்ல.
இயேசு அவரிடம், ``அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார்.
இதனையே "உங்கள் வேண்டுதலுக்கு மதிப்பு அளிக்கிறேன், ஆனால், இங்கே இந்த அற்புதத்தை
நிகழ்த்தி தான் என்னுடைய மீட்பின் பணியை ஆரம்பிக்க வேண்டுமா ? மக்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கும்,
விருந்திற்கும் வந்து இந்த உலக இன்பங்களை தான் என்னிடம் கேட்பார்கள், ஆனால், நாம்
நித்திய வாழ்வை அவர்களுக்கு தர விரும்புகிறேன்.
கத்தோலிக்கர்களாக நாம் , இந்த நற்செய்தியில் அம்மா மரியாள் செய்யும் உதவியை
காட்டி, அன்னை மேரி மேல் விசுவாசம் கொள்கிறோம். எப்படி அம்மா நமக்கு தேவையானதை இயேசுவிடமிருந்து பெற்று
கொடுப்பார், என்று அன்னை மரியாளை பார்க்கிறோம். ஏனெனில் இயேசுவின் மனதை மாற்ற
அன்னை மரியாளால் முடியும். இயேசு முடியாது என்று சொன்னார், ஆனால், இந்த
பிரச்ச்சினையை அவர் வழியில் முடித்து
வைத்தார். அன்னை மரியாள் வெற்றி கண்டால், இயேசு வெற்றி பெறவில்லை.
இப்படிதான் ஒரு பிரச்சினையை நாம் பார்க்கிறோம் ? ஒருவர் ஜெயிப்பவரும், ஒருவர் தோல்வியை
தழுவினால் தான் அந்த பிரச்சினை முடிவிற்கு வந்தது என்று அர்த்தம் ? அதனால், நாம் கேட்பதை கடவுள் கொடுக்கவில்லை என்றால் , நாம் தோற்றவர்
என்று நினைக்கிறோம். அதனால், இன்னும் அதிகமாக ஜெபிக்கிறோம், அதன் மூலம் கடவுள்
தோற்றவர் ஆகிறார். அதுவும் சரியான் பதில் கிடைக்க வில்லையென்றால், நாம் அன்னை
மரியிடம் சென்று , அவர் மகனிடம் வேண்டி நமக்கு தேவையானதை கேட்கிறோம்.
ஆனால், கடவுள் நாம் ஆரம்பம் முதல் ஜெயிப்பவர்களாக இருக்க வேண்டும் என
விரும்புகிறார். நமக்கு எது நல்லது என
எப்பொழுதுமே நினைப்பவர். இதனை அன்னை மரியாளும் அந்த சிப்பந்திகளிடம்
சொல்லும்பொழுதே அறிவாள். ``அவர்
உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார்.
பிரச்சினைகளோ அல்லது கருத்து வேற்றுமையோ ஒன்னும் தப்பான
விசயம் இல்லை.அதற்கெல்லாம் ஒரு நல்ல விடை, நாம் கடவுளிடம் நம்பிக்கையோடு இருந்தால்
கிடைக்கும். இயேசு அந்த மண்டபத்தில் உள்ளவர்கள்
மேல் அக்கறை கொண்டுள்ளார் என்று மரியாளுக்கு தெரியும், இயேசுவின் மேல் முழு
நம்பிக்கை வைத்திருந்தாள். இயேசு தந்தை மேல் முழு நம்பிக்கை வைந்திருந்தார். தந்தை
கடவுள் மக்கள் மேலும், இயேசுவின் மீட்பின் இறைசேவை யிலும் அக்கறை வைத்து
இருந்தார். அங்கே அனைவருமே வெற்றி
பெற்றனர்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment