Saturday, January 23, 2016

ஜனவரி 24 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 24 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பொதுகாலத்தின் 3ம் ஞாயிறு
Nehemiah 8:2-6, 8-10
Ps 19:8-10, 15
1 Corinthians 12:4-11
Luke 1:1-4; 4:14-21

லூக்கா நற்செய்தி
மாண்புமிகு தியோபில் அவர்களேநம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்துகொள்ளும் பொருட்டுஅவற்றை ஒழுங்குபடுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
அலகையினால் சோதிக்கப்பட்ட பின்புஇயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. அவர் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது
அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளதுஏனெனில்அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.''
பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

இன்றைய கிறிஸ்துவின் இறைபணி
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின் இறைபணி பற்றிய அறிவிப்பை பார்க்கிறோம்.  ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளதுஏனெனில்அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' இன்று ``நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார்.

இந்த இறைபணி அனைத்தும் , இயேசு விண்ணகத்திற்கு சென்றவுடன் , இந்த பூமியை விட்டு அவர் சென்றவுடன் முடிந்து விட்டதா  ?

கொரிந்தியர் திருமுகத்தில் கூறியுள்ளது போல, நாமும் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறோம்.
நாம் அனைவரும் - ஒவ்வொருவரும் - அவர் உடலின் முக்கிய உறுப்பாக இருக்கிறோம்! நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள் . கடவுள் உங்களை படைத்து, கிறிஸ்துவோடு ஒன்றிணைத்து உள்ளார், ஏனெனில், உங்களால் முக்கியமான வித்தியாசத்தை இந்த உலகில் கொண்டு வர முடியும். உங்களால் செய்ய முடிந்ததை மற்றவர்காளால் செய்ய முடியாது. இந்த உலகை இன்னும் கடவுளுக்கு ஏற்ற இடமாக மாற்ற உங்களால் முடிந்த வழி மற்றவர் செய்ய முடியாது.
கிறிஸ்தவர்களாகிய நாம், விசுவசிக்கும் சமூகத்தோடு, நாம் கிறிஸ்துவின் உடலாக இந்த உலகில் இருக்கிறோம். திவ்ய நற்கருணையில் நாம் கிறிஸ்துவை பெரும்பொழுது , நாம் கிறிஸ்துவின் உடலாக மாறுகிறோம், அதன் முலம் இந்த உலகில் அவரின் இறைபணி புதுபிக்கபட்டு நாம் தொடர்கிறோம். அவர் இறை சேவை நம் இறை சேவை ஆகும்.
திவ்ய நற்கருணையில் நாம் இயேசுவை பெறுகிற பொழுது , அவரின் மனித தன்மையை மட்டுமல்ல , தெய்வீக தன்மையையும் முழுமையாக பெறுகிறோம். அதே நேரத்தில், அவரின் இறை பணியையும் நாம் முழுமையாக உட்கொள்கிறோம். ஆண்டவரின் ஆவி நம் மேல் இறங்குகிறது. ஒவ்வொரு திருப்பலியும் நம் அழைத்தலை புதுபிக்கும் தருணம் ஆகும். அதன் முலம் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் செய்கிறோம்.
மாறாக இதனை சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு முறையும் நாம் இயேசுவை திவ்ய நற்கருணையில் பெறும்  பொழுது , லூக்கா நற்செய்தியில் 4:18-21 கூறப்பட்டுள்ளது முழுமையடைகிறது.
இது நடைபெறாமல் தடுக்கும் அத்தனை செயல்களும் பாவமாகும்.
நமது ஜெபங்களுக்கு பதில் கிடைக்காத பொழுது, சாத்தான் நம்மை ஜெயிக்கும்பொழுதும் , மீட்பின் செய்தியை நாம் கேட்காமல் நமது ஆன்மா துன்ப படும் பொழுதும் கிறிஸ்துவின் உடலின் ஒரு பகுதி சரியாக அதன் பணியை செய்ய வில்லை என்று அர்த்தம் . இந்த உலகின் தேவையான அனைத்தையும் நம் மூலம் கடவுள் கொடுக்கிறார். இயேசு அவரின் இறைபணியை நம் மூலம் தொடர்கிறார்.


© 2016 by Terry A. Modica

No comments: