ஜனவரி 31 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
பொது காலத்தின் 4ம் ஞாயிறு
Jeremiah
1:4-5, 17-19
Ps 71:1-6, 15, 17
1 Corinthians 12:31 -- 13:13
Luke 4:21-30
Ps 71:1-6, 15, 17
1 Corinthians 12:31 -- 13:13
Luke 4:21-30
லூக்கா நற்செய்தி
21அப்பொழுது
அவர் அவர்களை நோக்கி,
“நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு
இன்று நிறைவேறிற்று” என்றார்.22அவர்
வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர்
யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப்
பாராட்டினர் 23அவர் அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே
உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்’ என்னும் பழமொழியைச்
சொல்லி, ‘கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள்
கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்’ எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள்.24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த
ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.25உண்மையாக நான் உங்களுக்குச்
சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது;
நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே
கைம்பெண்கள் பலர் இருந்தனர்.26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச்
சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார்.27 மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த
நாமானுக்கே நோய் நீங்கியது” என்றார்.28தொழுகைக்கூடத்தில் இருந்த
யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29அவர்கள்
எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில்
அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள்
நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
(thanks to
www.arulvakku.com)
நம்மை மற்றவர்கள் தவறாக கணிக்கும்பொழுது:
இன்றைய நற்செய்தியை உன்னிப்பாக கவனித்து பாருங்கள், போன வாரம் இயேசு வாசித்து
முடிந்த நற்செய்தியை தொடர்ந்து இன்றைய
நற்செய்தி ஆரம்பிக்கிறது. (ஆண்டவருடைய
ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்) நீங்கள் கேட்ட இந்த மறை நூல்
வாக்கு இன்று நிறைவேறியது என்று தொழுகை கூடத்தில் இருந்தவர்களிடம் கூறினார். அவர்கள்
அவரை பற்றி உயர்வாக பேசினர். ஆனால் இறுதியில் அவர் மேல் சீற்றம் கொண்டனர்.
அவர்கள் என்னத்தை எது மாற்றியது ?
ஆச்சர்யமாய் அவரை பார்த்தவர்கள் திடிரென குழப்ப மடைந்தார்கள் , "சூசை
யின் மகன்தானே ? " என்று அவர்கள் நினைத்த பொழுது அவர்கள் குழப்பம்
கொண்டார்கள். அதில் ஒரு சிலர் இப்போது தான் முதன் முதலாக இயேசுவை பார்க்கிறார்கள்.
இவர்களை பற்றி பிறகு பார்ப்போம். இந்த
மக்கள் அனைவரும், எப்படி ஒரு குழந்தை நடக்க கற்று கொள்ளும்பொழுது விழுமோ அதே போல
ஒரு அனுபவத்தை இயேசுவிடமிருந்து பெற்றனர். தச்சு தொழிலாளியாக இயேசு இளம் வயதில் செய்த
தவறுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர் , சூசையப்பார் இறந்த பொழுது இயேசு கண்ணீர்
விட்டதையும் எண்ணி பார்த்தனர்.
அவர்கள் எண்ணங்கள் எப்பொழுது மாறியது ? அவர்கள் பழைய நினைவுகளுடன் , அதே எதிர்
பார்ப்பில் அவரது பேச்சை கேட்டனர், மாறாக அவர்கள் ஆவியினால் உந்தப்பட்டு இயேசுவின்
பேச்சை கேட்டு இருந்தால் , தெய்விக தொடர்பு இருந்திருக்கும். மாறாக அவர்கள்
எண்ணங்கள் மாறி விட்டது.
உங்கள் குணாதிசயங்களுக்கு மாறாக யாரிடமாவது பேசி அவர்களை குழப்பி பாருங்கள், நீங்கள் இளம்
வயதினராகவோ அல்லது மிகவும் வயதானவர் போல மாறி பேசினால், அல்லது உங்களால் முடியாத
செயலை , கண்டிப்பாக செய்ய முடியும் என்று சொன்னால், அவர்களுக்கு கண்டிப்பாக
ஆச்சரியமாக இருக்கும். அந்த ஆச்சரியம் குழப்பத்தை உண்டு பண்ணும். மேலும்,
உங்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான உண்டாக்கும்.
நாம் அவர்களிடம், நம்மை அவர்கள் நம்ப வேண்டும்
என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடக்காத பொழுது , நாம் குழப்பம் அடைந்து ,
அவர்களுக்கு எதிரான ஒரு நிலையை எடுத்து விடுகிறோம். ஆனால், இயேச இதனை எப்படி கையாண்டார்.
பரிசுத்த ஆவியினால் தூண்டபட்டு அமைதியாக உண்மையை பேசினார். உணர்ச்சி வசப்பட்டு
எதுவும் பேசினாரா ? இருந்தது. ஏனெனில் அவரும் மனிதனாக தானே இருந்தார். நாம்
அனைவருமே உணர்ச்சி அடையும் தன்மையுடன் தான் தந்தை கடவுளால் படைக்கபட்டிருக்கிறோம்.
ஆனால் பிரச்சினை எங்கே என்றால், நாம் கேட்கும் பொழுது, ஆவியினால் தொடர்பு கொண்டு
கேட்காமல், உணர்ச்சி மிகுதியால் கேட்கிறோம். , பரிசுத்த ஆவியின் துணை கொண்டு
கேட்போம்.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment