Friday, January 8, 2016

ஜனவரி 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜனவரி 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டவரின் திருமுழுக்கு ஞாயிறு
Isaiah 42:1-4, 6-7 (or Isaiah 40:1-5, 9-11)
Ps 29:1-4, 9-11 (or Ps 104:1-4, 24-25, 27-30)
Acts 10:34-38 (or Titus 2:11-14; 3:4-7)
Luke 3:15-16, 21-22
லூக்கா நற்செய்தி
அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து,
 நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெsருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்றுஇறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது வானம் திறந்தது.
தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, என் அன்பார்ந்த மகன் நீயேஉன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

நீங்கள் எதற்காக காத்து இருக்கிறீர்கள்?
இன்றைய நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் எதிர்பார்ப்பை பற்றியே பேசுகின்றன. நீங்கள் எதனை எதிர்பார்த்து காத்து இருக்கிறிர்கள்?  அநீதயிலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும், அல்லது உங்களுக்கு பிடித்தமானவர்கள் கடவுளிடம் வர வேண்டி நிற்கும்போழுதும்,  கடவுள் உங்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் ? குழப்பத்திலும் , நிச்சயமில்லா நிலையிலும் கடவுள் உங்களுக்கு என்ன மாதிரியான அறிவுரைகள் தர வேண்டும் என எதிர் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். ?
கிறிஸ்து கொடுத்த அமைதி அன்பளிப்பை , நீங்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும்பொழுது உணர்கிறீர்களா ? அல்லது கலக்கமும், கவலையும், பொறுமை அற்றும் இருக்கின்றீர்களா?
இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவானும் , அவரை சுற்றி இருந்தவர்களும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஏனெனில். அவர்கள் யோவான் தான் அவர்கள் எதிர்பார்த்த மெசியா என நினைத்து கொண்டிருந்தனர். அநிதிக்கு எதிராகவும், வேற்று நாட்டினரின் ஆதிக்கத்தையும் , பல பாவிகளிடமிருந்தும் மெசியா வந்து தம்மை காப்பாற்றுவார் என்று காத்திருந்தனர். ஆனால்,திருமுழுக்கு யோவானிடமிருந்து மிகுந்த உற்சாகத்தையும் , மனம் திரும்ப வேண்டி அவர் கூரியதையும் கேட்டனர்.
எனினும், கடவுள், இதனை எல்லாம் விட மிக பெரிய முழுமையான திட்டம் வைத்து இருந்தார். உண்மையான மெசிய பரிசுத்த ஆவியின் சுத்தபடுத்தும் நெருப்பின் மூலம் திருமுழுக்கு பெறுவார் என திட்டம் வைத்து இருந்தார். யோவான்  மக்களை மனம் திரும்புங்கள் என்று எடுத்து சொல்ல முடியும், உண்மையான மெசியாவோ, மக்கள் அனைவரும் பரிசுத்த வாழ்வில் வாழ தேவையான ஆவியையும் ஆற்றலையும் வழங்க முடியும்.
இயேசு தன்னையே யோவானின் திருமுழுக்குக்கு தன்னை (பாவமே இல்லாதவர்) அர்ப்பனித்தது ஏனெனில் , நம்மோடு இணைந்து, நம் மனம் திரும்பலுக்கு தன்னையும் இணைத்து கொண்டார். அதிலிருந்தே நம்மை  சாத்தானிடமிருந்து மீட்கும் பணியை ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு நம் பாவங்களை சிலுவையில் சுமந்து நம்மை மீட்டார்.

கிறிஸ்தவ திருமுழுக்கில், இயேசுவின் புனிதத்திலும் , அவரின் இறைசேவையிலும் நாம் முழ்கி எடுக்கபடுகிறோம். அவரின் குருத்துவத்திலும், நற்செய்தி அறிவிப்பதிலும், பணியாளனாக தலைமை ஏற்பதிலும் , மற்றவர்களின் மீட்புக்காக அவர் பட்ட பாடுகளும் அனைத்திலும் நம்மையும் இணைக்கும் நிகழ்வாக திருமுழுக்கு இருக்கிறது. இயேசு செய்ததை போல நம்மையும் செய்ய பரிசுத்த ஆவியானவர் ஆற்றலை நமக்கு தருகிறார். தந்தை கடவுளும், " என் அன்பார்ந்த மகன் நீயேஉன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து சொல்கிறார்.

நீங்கள் என்ன எதிர்பார்த்து கொண்டு காத்து இருக்கின்றீர்கள் ? உங்கள் திருமுழுக்கினால் உங்கள் அனுதின வாழ்வில் என்ன நடக்க வேண்டும்? என நினைக்கிறீர்கள் ? எதிர்பார்ப்பு என்பது ஒரு நல்ல விசயம். -- ஆனால் இந்த எதிர்பார்ப்பு  பொறுமையின்மயாலோ  இருக்ககூடாது, ஏனெனில், இது ஏமாற்றத்தை தான் தரும்.  கடவுளின்  கருணையினால், நமக்கு எதிர்பார்ப்பு இருக்கவேண்டும், கடவுள் நமக்கு என்ன செய்ய சொல்கிறார் என்று நாம் கண்டு கொண்டு ,  அதிலிருந்து வரும் எதிர்பார்ப்புகள் நமக்கு மகிழ்வும், அதித விசுவாசத்தையும் , இன்னும் பல அற்புதங்களையும் கொடுக்கும்.



© 2016 by Terry A. Modica

No comments: