மே 1 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 6ம் ஞாயிறு
Acts 15:1-2,
22-29
Ps 67:2-3,
5-6, 8
Revelation
21:10-14, 22-23
John
14:23-29
யோவான் நற்செய்தி
23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்:
“என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.
25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன்.
26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.
27அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்.
28‘நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்’ என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர்.
29இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.
(thanks to www.arulvakku.com)
இயேசுவை போல அன்பு செய்ய, நமக்கு தேவையான வழி
இன்றைய நற்செய்தி கூறுவது போல, இயேசுவை அன்பு செய்வது என்பது, அவர் கொடுத்த
கட்டளைகளை , போதனைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். நம் இதயத்தில் நாம் இதனை
விரும்புவதில்லை. நாம் கிறிஸ்துவை போற்ற விரும்புகிறோம், அவரை போல நாம் நடித்து
அவரை மரியாதையை செய்ய விரும்புகிறோம். இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய
விரும்புகிறோம். இதனை செய்யும் பொழுது, கடவுள் நம்மில் ஒளிர்கிறார் என்று நமக்கு
தெரியும்.
எனினும், இது அவ்வளவு சுலபமில்லை. ஒவ்வொரு நாளும், இயேசுவை போல நாம் நடந்து
கொள்வதிலும் , இயேசுவை வார்த்தையை கடைபிடிப்பதிலும் நமக்கு மிக பெரிய சவாலாக
இருக்கிறது. இயேசு அது மாதிரியான நேரங்களில் எப்படி நடந்து கொண்டிருப்பார் என்று
நாம் மறந்து விடுகிறோம் அல்லது , எப்படி நாம் நடந்து கொள்வது என்று நமக்கு
தெரியவில்லை. சிலர் நம்மை காயபடுத்தும் பொழுதும் , அன்பு இல்லாத செயல்களில் நமக்கு
காட்டும்பொழுதும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து , பாவ செயல்களாய் நாம்
அவர்களிடத்தில் திருப்பி செய்கிறோம்.
நற்செய்தி வாசகங்கிளிலோ , நாம் எப்படி கிறிஸ்துவை பின் செல்வது என்று ஒவ்வொரு
விசயத்திற்கும் கொடுக்கவில்லை. "எப்படி ஒரு நிகழ்வு நடந்தால், கடவுள் கட்டளை
என் 12ஐ பின்பற்றவும் " என எங்கும் கொடுக்கப்படவில்லை.
அதனால் தான் , இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுப்பேன் என்று உறுதி அளித்தார்.
பரிசுத்த ஆவி தான் நம்மோடு இருந்து , இயேசுவும், அவரின் வழியும் நமக்கு
நினைவுபடுத்துகிறார். ஒவ்வொரு சவாலையும் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று நமக்கு
பரிசுத்த ஆவியானவர் அறிவுறுத்துகிறார். காலையில் எழுந்தது முதல் மாலை தூங்க போகும்
வரை அவர் நமக்கு பரிசுத்த வழியை நமக்கு சொல்லி கொண்டிருக்கிறார்.
நமது பிரச்சினை எப்படி கிறிஸ்துவின் கட்டளையை பின்பற்றுவது என்பதல்ல, பரிசுத்த
ஆவியின் உதவியை பெற்று கொள்ள , அவரோடு இணைந்த வாழ்வை பெற நாம் மறந்து விடுகிறோம். அல்லது
பரிசுத்த ஆவியின் வழிமுறைகளை முழுமையாக அறிந்து கொள்ள நமக்கு தெரியவில்லை. கடவுள்
முழு உதவி நமக்கு எப்பொழுதும் உள்ளது,
ஆனால், நம் வாழ்வின் ஒவ்வொரு சவாலையும் நாமே கையாளவேண்டும் என முடிவெடுத்து
அதன்படி நடக்கிறோம்.
பரிசுத்த ஆவியின் குரலை எப்பொழுதும் கேட்டு நடந்து
கொள்ள இங்கே ஒரு பயிற்சி முறை கொடுக்க பட்டுள்ளது: ஒவ்வொரு மணி நேரத்தையும்
புனிதமாக்குங்கள். உங்கள் கடிகாரத்திலோ அல்லது மொபைலிலோ ஒவ்வொரு 6௦௦0
நிமிடங்களுக்கும், அலாரம் வைத்து கொண்டு, பரிசுத்த ஆவியை நினைவுபடுத்தி , அவரின்
வழிகாட்டுதலோடு நடந்து கொள்ள , அவர் காட்டும் பரிசுத்த வழியில் செல்ல பயிற்சி மேற்
கொள்ளுங்கள். சில வாரங்களுக்கு பிறகு , உங்களுக்கு இது பழக்கமாகி விடும், கடவுளின்
பிரசன்னம் நம் அருகில் எப்பொழும் இருப்பதையும் , அவரிடமிருந்து நமக்கு எப்பொழுதும்
கிடைக்கும் உதவி நமக்கு அருகே இருப்பதையும் நாம் விழிப்புணர்வுடன் புரிந்து
கொள்வோம்.
© 2016 by
Terry A. Modica