ஏப்ரல் 24, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 5ம் ஞாயிறு
Acts
14:21-27
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
Ps 145:8-13
Revelation 21:1-5a
John 13:31-35
யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31அவன் வெளியே போனபின் இயேசு,
“இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.
32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.
33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.
34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
35
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்”
என்றார்.
(thanks to
www.arulvakku.com)
மாட்சிமைபடுத்தும் இறைபணி
நீங்கள் இறக்க போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்தால், உங்கள்
அன்பிற்குரியவர்களுக்கு என்ன ஞானம் /
அறிவை கொடுக்க விருபுவீர்கள்? உங்களிடமிருந்து மிக முக்கியமான எதனை அவர்கள் கற்று
கொள்ள வேண்டும்?
இன்றைய நற்செய்தியில் , இயேசுவிற்கு
அவரது நேரம் குறைவு என்று தெரியும். முதல் வார்த்தைகளாக அவர் சிடர்களுக்கு
கூறியது, தந்தை கடவுளை புகழ்ந்து , இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று என்றும்
அறிவுறுத்துகிறார். பிள்ளைகளே என்றும் அவர் கூறுகிறார், இயேசுவும் தந்தை கடவுள்
போல சீடர்களை கூப்பிடுகிறார். இப்படி சொல்வதால் - இயேசுவும் தந்தை கடவுளும் ஒன்று
தான் - அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள கோடு மறைந்துள்ளது போல தெரிகிறது.இதனை
தாழ்மையுடன் இயேசு செய்கிறார். அவர் கூட மாற்றாக , "எல்லோரும் கேட்டு
கொள்ளுங்கள், நான் தான் கடவுள் , என்னை வணங்குங்கள்" என்று கூறலாம், அதற்கு
மாறாக, கடவுளை மகிமை படுத்தினார்.
கடவுளின் மாட்சி ஒளி கீற்றுகளாக வெளிபடுகிறது: அவரின் அன்பு, மகிழ்ச்சி,
அவரின் பரிசுத்தம், அவரின் அமைதி, அவரின் ஞானம், அவரின் படைப்புகள், மேலும் பல
நம்மில் வருகிறது, எப்பொழது ? அவரின் மாட்சிமையில் நாம் பங்கு கொள்ள வேண்டும்
என்று விரும்புகிற பொழுது நமக்கு கிடைக்கும். கடவுளை புகழ்ந்து, மாட்சிமைபடுத்தும்
பொழுது , அவர் நமக்கு கொடுக்கும் மாட்சியை நாம் திருப்பி கொடுக்கிறோம். உங்களில்
எவ்வளவு மாட்சிமை ஒளிர்கிறது ?
தந்தை கடவுளும் , இயேசுவும் ஒருவருக்கொருவர் மாட்சிமை படுத்துவதை கூறி விட்டு,
இயேசு அவரின் சீடர்களுக்கு இந்த உலகின் அதி முக்கியமான ஞானத்தை, அறிவுரையை
வழங்கினார். : கடவுளின் மாட்சியில், இயேசுவோடு இணைவதற்கு முக்கியமான வழி, இயேசுவை
போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.
சுய நலமில்லாமல் கொடுக்கும் அன்பு தான் உண்மையான அன்பாகும். இயேசு நமக்காக அவரையே
கொடுத்தார், மரணத்தில் கூட சுய நலமின்றி தன்னை ஆட்படுத்தி கொண்டார். இயேசுவின்
பின்செல்பவர்களும், சீடர்களும், குருவானவர்களும் , திருச்சபை உறுப்பினர்களும் , அன்பினாலும்,
அன்பாலும், அன்பு மூலமாகவே இறைசேவை செய்தால் ஒழிய அவர்கள் குருவானவர்களாகவே ,
சீடர்களாகவோ , திருச்சபை உருப்பினராக இருக்க முடியாது.
கடவுளின் அன்பு முழுமையானது, தியாகத்தினால் ஆனது , அதிலிருந்து கடவுளின்
மாட்சிமை பெருகுகிறது. அவரது மாட்சிமை அன்பினால் ஆனது. ஈஸ்டர் காலத்தை நாம்
கொண்டாடுகின்ற பொழுது , நற்செய்தி
வாசகங்களில், இயேசுவின் பாடுகளை பற்றி ஏன் குறிப்பிடுகிறார்கள் ? மற்ற வாசகங்களோ ஈஸ்டரை பற்றியே பேசுகின்றன : " ``இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்'' என்று திருவெளிபாடு கூறுகிறது. மேலும்,
இயேசு, நம்பிக்கை துரோகத்திற்கும், சிலுவை வேதனைகளுக்கும், மரணத்திற்கும்
தயாராகிறார் என நற்செய்தி குறிப்பிடுகிறது . ஏன் ?
நற்செய்தி மூலமாக இயேசு நமக்கு ஒன்றை
அறிவுறுத்துகிறார். நாம் அனைவரும் இயேசுவின் இறைசேவையை தொடர்ந்து நடத்துதல்
வேண்டும், இயேசு ஆரம்பித்த இவ்வுலக இறைபணியை நாம் தொடர்ந்து
நடத்திட நம் அனைவரையும் அழைக்கிறார். தியாகம் செய்து நாம் ஒருவரை அன்பு செய்யும்பொழுது
நம் மூலம் இயேசு உண்மையான கடவுள் என்று இந்த உலகம் அறியும். அவர் நமக்காக மரணமடைந்து
, உயிர்த்தெழுந்து ,நம்மோடு வாழ்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் .
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment