Saturday, December 31, 2016

ஜனவரி 1, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜனவரி  1, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கன்னி மரியாள் இறைவனின் தாய் பெருவிழா
Numbers 6:22-27
Ps 67:2-3, 5-6, 8
Galatians 4:4-7
Luke 2:16-21

லூக்கா  நற்செய்தி
16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.

18அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்.

19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

20இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

(thanks to www.arulvakku.com)
இந்த புது வருடத்தை அன்னை மரியாளிடம் பிரதிஸ்டை பண்ணுவோம்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இன்று  கத்தோலிக்க விடுமுறைகளில் எனக்கு பிடித்தமான நாள். இந்த வருடம் முழுதும் இயேசு உங்கள் வாழ்க்கையின் மையமாக இருந்து உங்களுக்கு சந்தோசமும், மகிழ்ச்சியும், அமைதியும், அன்பின் மூலம் ஊக்கம்  அடைந்து ஒவ்வொரு கஷ்டத்திலும் , சோதனையிலும் வென்று வர கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.
இன்று, இந்த புது வருடத்தை, கிறிஸ்துவின் அன்னை மரியாளிடம் ஒப்படைப்போம், அதன் மூலம் இந்த வருடத்தை ஆசிர்வாதம் பெறுவோம், இதன் மூலம் கிறிஸ்துவின் பாதுகாப்பு, உதவி பெற்று, இந்த வருடத்தை பல ஆசிர்வாதங்கள் பெரும் வரதும் ஆக்குவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆசிர்வாதத்தை எப்படி மற்றவர்களுக்கு கொடுப்பது என்று கடவுள் மோசசுக்கு சொல்லி கொடுக்கிறார். இன்றைய பதிலுரை பாடல், கடவுளிடம் நம்மை ஆசிர்வதிக்க வேண்டுகிறோம். இரண்டாவது வாசகம் நாம் பெற்ற மிக பெரிய ஆசிர்வாதத்தை பற்றி கூறுகிறது: நம்மை பிள்ளைகளாக கடவுள் ஏற்றுகொண்டார். அவரின் பிள்ளைகளாக, கடவுளிடம் உள்ள அனைத்தும், நமக்கும் வருகிறது. நித்திய வாழ்வை நமக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். மோட்சத்தில் உள்ள அனைத்து ஆசிர்வாதங்களும், நமக்கு கொடுக்கபட்டிருகிறது.
ஆசிர்வாதம் எல்லா நேரமும் நமக்கு வந்து கொண்டே இருக்கின்றன, ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு இதய துடிப்பும் , நம் வாழ்வின் ஆசிர்வாதம் ஆகும். இன்றைய நற்செய்தியில் வரும் இடையர்கள் வியப்படைந்து அவர்கள் கண்டதை கூறியதை கேட்டு நீங்கள் வியபபடைகிறிர்களா?

இயேசுவின் பிரசன்னம் நம்மிடம் வருகிறது, நம்மிடயே இருக்கிறது என்ற வியப்பில் , நமக்கு மிக பெரிய சந்தோசமாக இருக்கிறது. இதனை நாம் முழு விழிப்புணர்வுடன்  இயேசுவின் வருகையை ,இயேசுவை முழுதும் உணரும்போது நாம் மிகவும் சந்தோசமடைகிறோம் , அதுவே மிக பெரிய ஆசிர்வாதம் ஆகும். எப்பொழுதெல்லாம் நாம் இயேசுவை அடைகிறோமோ , இயேசுவை பார்க்கிறோமோ, அதெல்லாம் ஆசிர்வாதமாகும். நம் கஷ்ட நேரங்களிலும் கூட , இயேசுவின் வழி காட்டுதலிலும் , அவர் நம்மோடு இருப்பதும் ஆசிர்வாதம் ஆகும்.
விசுவாசத்தில் இன்னும் உறுதியாக வளர, நம் ஆசிர்வாதங்களை நாம் இன்னும் முழுதுமாக உணர வேண்டும். இதற்கு நம் கண்கள் எப்பொழுதுமே இயேசுவை நோக்கி இருக்க வேண்டும். இதனை உறுதியாக தொடர , நமக்கு கடினமாக இருக்கும், ஆனால், பரிசுத்த ஆவியுடன் துணையுடன் முயற்சி செய்தால், நம்மால் முடியும். பழைய பிரசினைகளை யோசித்து பாருங்கள்: வெற்றியின் இயேசு அங்கே இருக்கிறார்! கஷ்டமான நேரங்களில், நீங்கள் எவ்வாறு நடந்து கொண்டிர்கள் என்று நினைத்து பாருங்கள். அங்கே ச்ரிச்துவின் அமைதி இருக்கிறது!, உங்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள் பாருங்கள், இயேசு உங்களை ஆறுதல் சொல்கிறார்.
இயேசு எப்பொழுதும் நம்மிடையே இருக்கிறார், நமக்கு நடக்கும் அனைத்தும் இயேசுவினால், அவரால் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம் ஆகும். இதனை நினைத்து நமக்கு பிரமிப்பு ஆகிறது.  இயேசுவோடு இணைந்து, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் பொழுது, நாம் சாத்தானை வெற்றி கொள்கிறோம். இந்த செயலும் இயேசுவின் ஆசிர்வாதம் தான். இதன் மூலம் , கடவுளின் அன்பும், இரக்கமும், வெற்றியும் நமக்கு ஆசிர்வாதம் ஆகும். மேலும், இன்னும் அதிக ஆசிர்வாதம் பெறுவோம்.
வரும் காலத்தில், உங்களில் சிலர் உங்களிடம் தவறாக நடக்கும் பொழுது, அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்காதீர்கள்.   இயேசுவே உங்களுக்கு , தேவையானதை கொடுப்பார் என எதிர்பாருங்கள், இயேசுவின் அருகாமையை தொடர்ந்து நீங்கள் உணர ஆரம்பிக்கும்பொழுது , அவரின் அதிக ஆசிர்வாதங்களை நீங்கள் பெறுவிர்கள். உங்கள் சோதனை காலங்களில், நீங்கள் அதனை பெறும்பொழுது , உங்கள் விசுவாசம் இன்னும் உறுதியாக வளரும்.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயேசுவின் மேல் உங்கள் கண்கள் இருக்கட்டும். இயேசுவின் கைகள் உங்களை அரவணைப்பதை, அவரின் ஆசிர்வாதத்தை பார்ப்பிர்கள்.
கன்னி மரியாளிடமிருந்து நாம் கற்று கொள்வோம். அவரிடம் நடந்த ஒவ்வொரு நிகழ்விற்கும், கடவுளாக இருந்தால், எப்படி நடந்து கொள்வார் என்று பார்த்து அதே போல நடந்து கொண்டார். இடையர்களை மரியாள் பார்த்த பொழுது, ஒழுங்கற்ற , சுத்தமில்லாத இடையர்களை பார்த்தாரா? கண்டிப்பாக இல்லை, உங்கள் அருகில் இருக்கும் நேர்மையற்ற மனிதர்களை பாருங்கள். எவ்வளவு ஆசிர்வாதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்.
இந்த புது வருடம், முழுமையான ஆசிர்வாதங்களுடன் இருக்கட்டும்.!

© 2016 by Terry A. Modica

No comments: