டிசம்பர் 25, 2016 நற்செய்தி
மறையுரை
கிறிஸ்து பிறப்பு விழா
Isaiah
62:1-5
Ps 89:4-5, 16-17, 27, 29
Acts 13:16-17, 22-25
Matthew 1:1-25
மத்தேயு
நற்செய்தி
இயேசுவின் பிறப்பும் குழந்தைப்
பருவமும்
இயேசுவின் மூதாதையர்
பட்டியல்
(லூக் 3:23 - 38)
(லூக் 3:23 - 38)
1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:✠
2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள்
யூதாவும் அவர் சகோதரர்களும்.
3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த
புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம்.⁕✠
4இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.
5சல்மோனுக்கும் இராகாபுக்கும்
பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த
மகன் ஓபேது;
ஓபேதின் மகன் ஈசாய்.
6ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
7சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா.⁕
8ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.
9உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.
10எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமோன்;
ஆமோனின் மகன் யோசியா.
11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்⁕ அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13செருபாபேலின் மகன் அபியூது;
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.
14அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.
15எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.
16யாக்கோபின் மகன்
மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து⁕ என்னும் இயேசு.
17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.✠
19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.✠
22-23“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.✠
(thanks to www.arulvakku.com)
விசுவாசத்தின் பாடல்
இந்த உலகத்தில் சந்தோசம் உண்டாகட்டும்! இது தான் நமது
பாடல். விசுவாசத்தின் மக்களாக நாம் இதனை தான் எப்பொழுதும் இந்த உலகத்தில் சொல்லி
கொண்டிருக்க வேண்டும்.
உங்கள் மகிழ்ச்சியை எது குழைக்கிறது என்று அதன் மேலே உங்கள்
நேரத்தை செலவழிக்காதீர்கள். கடவுள் வருவதை எதுவும் நிறுத்திவிட முடியாது. கடவுள்
உங்களுக்கு எதுவும் செய்ய வில்லை என்று நீங்கள் நினைக்கும் பொழுது மகிழ்ச்சி
உங்களை விட்டு போய் விடுகிறது.
இயேசு உங்கள் மேல் வைத்துள்ள அன்பை பாருங்கள்! உங்கள்
பாவங்களிலிருந்து உங்களை மீட்க மட்டும் இயேசு இங்கே பிறக்கவில்லை, உங்களை இயேசு
முழுதும் அன்பு செய்கிறார் - அதற்காக தான் அவர் இங்கே பிறந்தார் . நீங்கள் எந்த
பாவம் செய்ய விட்டாலும், கண்டிப்பாக இயேசு இங்கே வந்திருப்பார், மனிதராக நம்மை
அன்பு செய்ய வந்திருப்பார்.
சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காமலே நமக்கு கிடைக்கும்
வியப்பான பரிசுகள் , நமக்கு பெரிசாக தெரியாது. திவ்ய நற்கருணை - வெள்ளை கலரில்
சின்ன ரொட்டி துண்டு -- இயேசு அதிலே மனிதனாகவும் தெய்வமாகவும் அங்கே இருப்பது இயேசுவின்
பிரசன்னம் என்று நமக்கு அவ்வளவு சரியாக தெரிவதில்லை. குழந்தை இயேசுவும் -- சிறிய அழகான குழந்தை -- சாத்தானை எதிர்த்து
வெற்றி கொள்ள போகிறார் என்றும் நமக்கு தெரிவதில்லை. அனால் அவர் தன சாத்தானை வெற்றி
கொண்டார். ! அதே போல திவ்ய நற்கருணை இயேசுவும் வெற்றி கொண்டார். இங்கே நமக்காக
காத்திருக்கிறார்.
மேலும் நீங்கள்! பெரிய மனிதராக நீங்கள் நினைத்து
கொள்வதில்லை, அனால் உங்களில் இயேசு இருக்கிறார். உங்கள் கற்பனையை தாண்டி நீங்கள்
பெரியவர்கள்!, உங்கள் மதிப்பு மிக அதிகம்!. அது உங்களில் தெரிவதில்லை; நீங்கள்
செய்யும் ஒவ்வௌர் நல்ல செயல்களிலும், உங்களின் மேன்மை வெளிபடுகிறது இது தான்
விசுவாசத்தின் வாழ்வு!
கிறிஸ்துவை பின் செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும்
என்றால், நாம் கிறிஸ்துவை போல இருக்க வேண்டும். நல்லது செய்யும் பொழுது, சாத்தானை
நாம் தோற்கடிக்கிறோம். நல்லது செய்யும் பொழுது இயேசுவின் பேரொளி நம்மிலிருந்து
வெளி வருகிறது. இந்த நன்மைகளுக்காக, எல்லோரும் சந்தோசமாக இருக்க காரணம்
இருக்கிறது.
© 2016 by Terry A. Modica
No comments:
Post a Comment