டிசம்பர் 4 2016
ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால இரண்டாம் ஞாயிறு
Isaiah 11:1-10
Ps 72:1-2, 7-8, 12-13, 17
Romans 15:4-9
Matthew 3:1-12
Ps 72:1-2, 7-8, 12-13, 17
Romans 15:4-9
Matthew 3:1-12
மத்தேயு நற்செய்தி
விண்ணரசு பறைசாற்றப்படல்
திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்
(மாற் 1:1 - 8; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
(மாற் 1:1 - 8; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1-2அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை
நிலத்துக்கு வந்து, “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்று பறைசாற்றி வந்தார்.
3இவரைக் குறித்தே,
“பாலைநிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது: ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச்
செம்மையாக்குங்கள்”
என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார்.✠
4இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி
இருந்தார்; வெட்டுக்கிளியும்
காட்டுத்தேனும் உண்டு வந்தார்.✠
5எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை
அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள்.
6அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான்
ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
7பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற
வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, “விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து
தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்?✠
8நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற
செயல்களால் காட்டுங்கள்.
9‘ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை’ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம்.
இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர்
என உங்களுக்குச் சொல்கிறேன்.✠
10ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று.
நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.✠
11நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால்
திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட
வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை.
அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
12அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும்
பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச்
சுட்டெரிப்பார்” என்றார்.
(thanks to www.arulvakku.com)
பரிசுத்த ஆவியிடமிருந்து
வரும் அமைதி
திருவருகை கால இரண்டாம்
ஞாயிறின் முக்கிய நோக்கம் அமைதி. முதல் வாசகம் கிறிஸ்து மெசியா, ஜெஸ்சி மற்றும்
தாவீது அரசரின் வழி வந்தவர் என்று சொல்கிறது. மேலும் எப்படி அமைதி பெறுவது என்று
விளக்கி சொல்கிறது -- நமது சோதனைகளுக்கு
இடையில் நாம் அமைதியுடன் எதிர் நோக்கி , ஏற்று கொள்ள நம்மால் முடியும். " ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்" உங்களில் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருப்பதை நீங்கள்
உணர்கிறீர்களா?
கடவுளோடு நாம்
நல்ல உறவோடு இருந்தால், உண்மையான அமைதியை நாம் உணர்வோம். அதன் அர்த்தம் என்ன என்றால்,
கடவுளுக்கு எதிராக போராடாமலும், அவர் வழியில் செல்ல கஷ்டபடாமலும், அவர்
திட்டத்தில் நாம் செல்ல எந்த அசௌகரிய நினைப்பில் இல்லாமல் இருக்க வேண்டும். நம் போராட்டங்கள் ஒரு முடிவுக்கு வருவதும், பண
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதும், உடல் நோயிலிருந்து சுகம் அடைவதும் அமைதி
அல்ல, இந்த பிரச்சினைகளை எல்லாம் நாம் போராடி தீர்க்க முடியும், ஆனால், இருந்தும்
நம்மால் அமைதி பெற முடியாது.
பரிசுத்த ஆவியிடமிருந்து
நாம் பெரும் ஞாணம் , மெய்யறிவு மூலம் நாம் அமைதியை பெறுகிறோம். பரிசுத்த ஆவியின்
மூலம் வரும் விளக்கம், ஆண்டவரின் ஆற்றலில் நம்பிக்கை கொள்ளும் பொழுது நாம் அமைதியை
பெறுகிறோம். கடவுள் நமக்கு என்ன தெரிய வேண்டுமோ, அந்த உண்மையை அவர் நமக்கு
கொடுக்கும் பொழுது, நம்மில் அமைதி ஏற்படுகிறது. கடவுளிடம் நாம் முழுதும் அர்ப்பணித்து
உண்மைக்கு கிழ் படியும் பொழுது நாம் அமைதி அடைகிறோம்.
நற்செய்தி வாசகத்தில் யோவான், "ஆண்டவருக்காக வழியை
ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்
" என்று
சொல்கிறார், கடவுளின்
ஆவியை , அமைதியை நாம் பெற, நாம் இயேசுவை சந்திக்க நம்மை தயார் படுத்த வேண்டும். கிறிஸ்து திவ்ய
நற்கருணை மூலமாகவும், அல்லது வேறு
வழியாகவும் வரும் பொழுது நாம் அவரை சந்திக்க தயார் படுத்த வேண்டும். எந்த
மாதிரியான தயாரிப்புகள் உங்களுக்கு அமைதி தரும்? நம் பாவங்களை முழு மன சாட்சியுடன்
ஆய்ந்து , கடவுள் இரக்கம் கொண்டவர் என்ற நினைப்போடு, நமது கோணலான பாதையை
நேராக்கி கடவுளின் வழியை
எதிர் நோக்கி நாம் தயார் படுத்த வேண்டும்.
கடவுளின் அமைதியிலிருந்து நம்மை எது தள்ளி வைக்கிறதோ ? அதனை நாம் புரம் தள்ள
வேண்டும், இதனை செய்வதற்கு, பாவ சங்கிர்த்தனம், திருப்பலியில் ஆரம்பத்தில் பாவ
மன்னிப்பு பெறுவது என்று பல வழிகள் உள்ளன. கிறிஸ்து நமக்கு அமைதியில் செல்வதற்கு
பல வழிகளை உருவாக்கி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment