டிசம்பர் 11, 2016 ஞாயிறு நற்செய்தி,
மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு
Isaiah 35:1-6a, 10
Ps 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11
Ps 146:6-10
James 5:7-10
Matthew 11:2-11
மத்தேயு நற்செய்தி
விண்ணரசின் பின்னணியில்
திருமுழுக்கு யோவான்
(லூக் 7:18 - 35)
(லூக் 7:18 - 35)
2யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.
3அவர்கள் மூலமாக, “வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்டார்.
4அதற்கு இயேசு மறுமொழியாக,
“நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
5பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6
என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்”
என்றார்.
7அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்:
“நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
8இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.
9பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
10‘இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்’
என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.
11மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
(Thanks to www.arulvakku.com)
கிறிஸ்துவால் மீட்கப்பட்ட பின்பு வரும் சந்தோசம்
மூன்றாவது திருவருகை கால ஞாயிறின் கருத்தாக்கம் - சந்தோசம் - மகிழ்ச்சி -
ஆகும். முதல் வாசகத்தில் “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்;இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.'' , இது தான் நம்
மகிழ்ச்சிக்கு உரிய காரணம் ஆகும். பாவத்திலிருந்தும், அழிவிலிருந்தும்
விடுவிக்கப்பட்டோம். இயேசு சிலுவை முலம் அவரது தியாகத்தால் நம்மை விடுவித்தார்.
இதற்காக தான் இயேசு இந்த பூமியில் நம்மை போல மனிதனாக பிறந்தார், அதன் முலம்
கடவுளிடமிருந்தும் , அவரின் அளவு கடந்த அன்பிலுமிருந்தும் நம்மை பிரித்த
வேதனையிலிருந்து நம்மை மீட்டார்.
நித்திய வாழ்வை நாம் ஒப்பிடும் பொழுது, இவ்வுலக வாழ்வு, மற்றும் இங்கே உள்ள
பிரச்சினைகள் எல்லாம் மிகவும் சிறியது ஆகும்.
நம் பாவங்கள், அழிக்கும் சக்திகள் நமக்கு நிரந்தர பாதிப்பை
கொடுக்க முடியாது, ஏனெனில், இயேசு அதற்கான தண்டனை அவரே ஏற்று கொண்டதால், நம்மால்,
மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. மேலும் கடவுள் ஒவ்வொரு செயலையும் நமக்கு நல்லதாக
மாற்றி கொடுக்கிறார். சாத்தானை விழ்த்தி அதன் முலம் நாம் ஆசிர்வாதமடைய செய்கிறார்.
மிகவும் மோசமான காலங்கள் கூட நமக்கு ஆசிர்வாதமாக முடியும்,
நம் பிரச்சினைகளை இயேசுவிடம் இணைத்து கொண்டால் அது மிக பெரிய ஆசிர்வாதமாக முடியும்.
கிறிஸ்துவோடு , அவரை போலவே, நாமும் மற்றவர்களுக்காக துன்பத்தை ஏற்று கொள்ளும்
பொழுதும் நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும். நாம் மேற்கொள்ளும் கடின உழைப்புகள்
இறைசேவை ஆகும். நமது வருத்தங்கள் மதிப்பு வாய்ந்ததாகும், அது நமக்கு பல மடங்காக
மகிழ்ச்சி யாக மாறும்.
கிறிஸ்துவுக்குள், நமக்கு என்றும் நிலைத்த சந்தோசம்
கொடுக்கபட்டிருக்கிறது. கிறிஸ்துவின் சந்தோசத்தை நாம் உணர்கிறோம் , ஏனெனில் ஏராளமான
நன்மைகள் அதன் மூலம் நமக்கு வர இருக்கிறது. நமது வருத்தங்கள், துக்கங்கள் கண்டிப்பாக
எல்லாம் பறந்து போகும், நமக்கு கிறிஸ்துவின் நிலையான சந்தோசம் அவரது இறைபணியில்
இணைந்திருக்கும் போது நமக்கு வந்து கொண்டே இருக்கும். மேலும் கடவுளின்
பேரிரக்கமும், நம்பிக்கையும் நம்மை மேலே கொண்டு செல்லும்.
இரன்டாவாது வாசகத்தில் குறிப்பிட்டுள்ளது போல, கடவுள் நமது சோதனைகளை வெற்றியாக
மாற்றும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். சந்தோசத்தில் என்றும் நிலைத்திருக்க
, நமது விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும், கடவுள் நம் மேல் அக்கறை கொண்டுள்ளார்
என்ற எண்ணத்தில் இருக்க வேண்டும். கடவுள் இன்னும் நம்மை காக்கவில்லை , உதவி செய்யவில்லை
என குற்றம் சாட்ட வேண்டாம், கடவுளுக்கு எது சரியான நேரம் என்று தெரியும், அப்பொழுது
நம் பிரச்சினைகளை அகற்றுவார்.
கடவுள் கண்டிப்பாக என் மேல் அக்கறை கொண்டுள்ளளார், அவர்
எனக்காக , என் பிரச்சினைகளுக்காக , என் நிலையான வாழ்விற்காக, எப்பொழுதும் பணி
செய்து கொண்டிருக்கிறார் என்ற நினைப்பே நம்மை மகிழ்ச்சியில் வைத்திருக்கும். நமது
சோதனைகள் , துன்பங்கள் அனைத்தும் ஆசிர்வாதம் ஆகா மாறும். இயேசு நற்செய்தியில்
சொல்வது போல "என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்"
© 2016 by
Terry A. Modica
No comments:
Post a Comment