Saturday, June 24, 2017

ஜூன் 25 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 25 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  12ம் ஞாயிறு
Jeremiah 20:10-13
Ps 69:(14c)8-10,14,17,33-35
Romans 5:12-15
Matthew 10:26-33

மத்தேயு நற்செய்தி

அஞ்சாதீர்கள்
(லூக் 12:2 - 7)
26எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.

27நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.

28ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

29காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது.

30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது.

31சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8 - 9)
32மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்.

33மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

(THANKS TO WWW.ARULVAKKU.COM)

நற்செய்தியோடு தைரியமாக இருங்கள்!
நீங்கள் இருளில் இருந்த நேரம் பற்றி நினைத்து பாருங்கள்: எடுத்து காட்டாக ஒரு பாவத்தில் இருந்தீர்கள், அல்லது கடவுள் உங்கள் ஜெபம் கேட்காமல் உங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இருக்கிறார் என நினைத்த நேரம், உங்களுக்கு கடவுள் கொடுத்த அன்பளிப்புகள், திறமைகள் மறைந்து போய்விட்டது என்று நினைத்த நேரம் பற்றி எடுத்து கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இயேசு உங்களிடம் என்ன சொன்னார் (நற்செய்தி வாசகங்கள் மூலம் , அல்லது நண்பன் மூலம் பேசியிருக்கலாம், அல்லது திருப்பலி பிரசங்கம் மூலம் உங்களிடம் பேசியிருக்கலாம் )?  உங்கள் காதில் என்ன ரகசியமாக சொனார்?  அவரின் வார்த்தைகளும் , வழி காட்டுதலும் உங்களுக்கு நற்செய்தி!
இன்றைய நற்செய்தியில் இயேசு " உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள்" என்று சொல்கிறார்  .
 இயேசு உங்களை அழைக்கிறார், இறைபணி செய்ய அர்சித்து, உங்களுக்கு தேவையான ஆற்றலையும் அதிகாரத்தையும்  பரிசுத்த ஆவியின் மூலம் கொடுக்கிறார் நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறார். உறுதியாகவும், எல்லோருக்கும் தெரியும்படி நற்செய்தியை அறிவியுங்கள், அதன் மூலம் இதனை கேட்க நினைப்பவர் அனைவரும் கேட்கட்டும். இயேசு உங்கள் வாழ்க்கையில் என்ன வெல்லாம் செய்கிறார் மேலும், உங்கள் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவினார், பாவங்களிலிருந்து மீள எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை பகிர்ந்து கொள்ள பயப்பட வேண்டாம் .

முதல் வாசகத்தில் சொல்லியுள்ளது போல ஜெரமையாவிற்கு நேர்ந்த கொடுமை போல நமக்கும் நடக்கலாம், சிலர் உங்களை கேலி செய்யலாம், ஒதுக்கி தள்ளலாம், ஆனால் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். ஏனெனில் தந்தை கடவுள் நம்மோடு இருக்கிறார். உங்களுக்கு சாம்பியன் போல ஆக்கி , நம்மை தடுத்து நிறுத்தியவர்களை தலை குனிய வைப்பார். இயேசு "யாருக்கும் பயப்பட வேண்டாம் " என சொல்கிறார். கடவுள் கண்டிப்பாக எப்பொழுதும் நம் மேல் அக்கறை கொள்கிறார்.

இயேசுவை ஏற்று கொள்கிறவர்களை , அவர் ஏற்றுகொள்கிறார். இதனையே மாறாக சொல்வதானால், விசுவாசத்தினால், நமக்கு ஏற்படும் அவமானங்களையும், கிண்டல்களும் நடைபெறும்பொழுது இயேசு நமக்கு ஆறுதல் சொல்லி நம்மை காக்கின்றார். அவர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார் என்பது மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் என்ன பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். அவரிடம் கூர்ந்து கேளுங்கள். உங்கள் இருதயத்தின் தூய்மை பற்றி உங்கள் காதில் கிசு கிசுப்பாய் சொல்வதை கேளுங்கள்.  உங்களில் உள்ள எல்லா நல்லதையும் இயேசு கூறுவார். மேலும் நீங்கள் செய்த நல்ல செயல்களை உங்களிடம் கூறி , உங்களை போராட்டுவார். உங்களுக்கு நற்செய்தியை கூறுகிறார். அது கண்டிப்பாக எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள கூடியதே.
© 2017 by Terry A. Modica

Saturday, June 17, 2017

ஜூன் 18, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 18, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்த பெருவிழா
Deuteronomy 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Corinthians 10:16-17
John 6:51-58
யோவான்  நற்செய்தி

மானிட மகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
52நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
53இயேசு அவர்களிடம், 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

54எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

55எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

56எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

57வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

58விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.
  (Thanks to www.arulvakku.com)
இயேசு திவ்ய நற்கருணையின் மூலம் எவ்வாறு நமது கஷ்டத்தில் உதவி செய்கிறார்
இன்றைய ஞாயிறு நாம் இயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டாடுகிறோம். இது உண்மையாக இயேசுவின் இரத்தமும் உடலும்  என்று நாம் ஏன் நம்புகிறோம்.
முதல் வாசகத்தில் தந்தை கடவுள் எப்பொழுதும் நமக்கு தேவையான உணவையும், நீரையும் , நம் கடினமான காலத்தில் கொடுப்பார் என்று  பார்க்கிறோம். இஸ்ரேயலர்களுக்கு அன்று என்ன செய்தாரோ அதனையே நமக்கு ஏதோ ஒரு வழியில் தந்தை கடவுள் செய்து கொண்டிருக்கிறார். நம் விசுவாசம் எதுவாக இருந்தாலும், நம் சோதனையில் தந்தை கடவுள் நமக்கு எப்பொழுதும் தேவையானதை தந்து கொண்டிருக்கிறார். நமக்கு தேவையானதை - உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னத்தை திவ்ய நற்கருணை மூலம் கொடுக்கிறார். பரிசுத்த ஆவி நம்முள் இருந்து (ஞானஸ்நானம் , உறுதி பூசுதல் ) நமக்கு தேவையானதை கொடுக்கிறார். மேலும், குருக்கள் (இயேசுவின் பிரசன்னமாக) பாவ சங்கீர்த்தனதில் நம்முள் இயேசுவை கொண்டு வருகிறார்கள்.
நற்செய்தி வாசகமோ திவ்ய நற்கருணை தான் இயேசு பிரசன்னமாக இருந்து நமக்கு உணவாக இருக்கிறது என்று சொல்கிறது. தந்தை கடவுளின் அன்பின் பிரதிபலிப்பாக நற்கருணை இருக்கிறது. ஓ இந்த  தண்ணியில்லாத பாலைவனத்தில் , காட்டு விலங்குகளும் , விஷ பூச்சிகளிடம் இருந்தும் நம்மை காத்து கொள்ள இந்த உணவு நமக்கு எப்படி தேவைபடுகிறது.  இயேசு திவ்ய நற்கருணை முலம் நம் தாகத்தையும் பசியையும் கண்டிப்பாக போக்குகிறார். அவரை நாம் முழுமையாக வாங்கும் பொழுது, அவர் நம்மை முழுமையாக அவருக்குள் கொண்டு வருகிறார், அவர் அருகில் நாம் செல்ல , அவர் நம்மை இழுத்து கொள்கிறார். இந்த ஒற்றுமையில், இணைப்பில், நாம் நம் சோதனைகளை கடந்து வெற்றியை பெறுகிறோம்.
இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நம்மை இந்த உலகின் கிறிஸ்துவின் உடலோடு இணைக்கிறது , அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி , கிறிஸ்துவின் உடன் இணைப்பை அதிகரிக்கிறது என்று கூறுகிறது. இந்த உலகில் நமக்கு தேவையானவற்றை, திருச்சபையின் சமுகம் மூலமும்  ,இன்னும் பலவற்றின் மூலம்  நமக்கு கிறிஸ்து கொடுக்கிறார். இந்த இணைப்பில் -- எல்லோருக்கும் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கபெறும் - மேலும் அது எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். மேலும், இயேசு நற்செய்தியில் உறுதி அளிப்பது போல நமக்கு எல்லோருக்கும் நித்திய வாழ்வு கண்டிப்பாக உண்டு. அங்கே எல்லா தேவைகளும் முழுதுமாக கிடைக்கபெறும்.
© 2017 by Terry A. Modica

  

Friday, June 9, 2017

ஜூன் 11 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 11 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு இறைவன் பெருவிழா
Exodus 34:4b-6, 8-9
Daniel 3:52-56
2 Corinthians 13:11-13
John 3:16-18
யோவான் நற்செய்தி

16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

(THANKS TO WWW.ARULVAKKU.COM) 
மூவொரு கடவுள் பெருவிழா
பரிசுத்த ஆவியின் திருவிழாவிற்கு அடுத்த முதல் ஞாயிறு நாம் புனிதமான மூவொரு இறைவன் திருவிழாவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில் தந்தை கடவுள் இஸ்ரேயல் நாட்டை தயாரிப்பதை பார்க்கிறோம். அதில் "அவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் ; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்''  -- முழுமையான , சரியான தந்தை.
இது மாதிரியாக நாம் தந்தை கடவுளை பார்க்க முடியவில்லை என்றால், நாம் இதுவரை எந்த தந்தையையும் முழுமையான இந்த குணங்களுடன் பார்த்ததில்லை. நமது இருதயம் சீரமைக்கப்பட வேண்டும். தந்தை கடவுளை, நம் அருகில் உள்ள மனித தந்தையாக நாம் பார்க்கிறோம். நல்லாசிரியர்கள், மிகவும் உயரிய தந்தைகள் கூட ஏதோ சில குறைகளோடு இருப்போம். தந்தை கடவுளை போல அற்புதமான கடவுளை போல  இருப்பதில்லை. உள்ளுணர்வோடு கவனத்துடன் நாம் தந்தை கடவுளை வேறு படுத்தி பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாசகமோ மூன்று கடவுள்களையும் காட்டுகிறது : இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்களோடு இருப்பதாக என்று சொல்கிறது.  இதனால் மட்டுமே, நாம் அனைவரும் சந்தோசப்பட வேண்டும். நமது வழியை சீரமைத்து கொண்டு , ஒருவரோடு ஒருவர் அமைதியில் வாழ்வோம்.
இயேசு நமது பாவங்களுக்காக மரணம் எய்து அதன் பின்பு அந்த மரணத்தை வென்றார். நாம் பாவங்களை எதிர்த்து வென்றிட கிறிஸ்து அருள் கொடுக்கிறார். மேலும் தந்தையின் அன்பையும் நமக்கு கொடுக்கிறார். அதன் முலம் நாம் ஒருவரையொருவர் அன்பு செய்து (எந்த தடையாக இருந்தாலும்), மேலும் இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் , நம்மோடு இருந்து , நம்மை தொடர்ந்து இந்த பரிசுத்த வாழ வழி செய்கிறார்.
நற்செய்தி வாசகமோ கடவுளின் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. நம் பாவங்களுக்கு  தண்டனை கொடுக்க அல்ல, நம் பாவத்தின் அழிவிலிருந்து நம்மை மீட்க , அவரது மகனையே அனுப்பி வைத்தார். நமது பாவங்கள் தான் நம்மை கண்டிக்கிறது, நித்திய வாழ்வின் மரணத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது. ஆனால் இயேசு இதிலிருந்து நம்மை மீட்டு நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். -- ஆனால் அதற்கும் நாம் விரும்பினால் மட்டுமே!
© 2017 by Terry A. Modica


Friday, June 2, 2017

ஜூன் 4 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 4 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
தூய ஆவியின் பெருவிழா

Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Corinthians 12:3b-7, 12-13
John 20:19-23
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
(THANKS to www.arulvakku.com)
நமது வாழ்வையும், திருச்சபையும், மற்றும் இந்த உலகத்தையும் புதுபிப்போம்
" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்." என்று இன்றைய பதிலுரை பாடலாக நாம் பாடுகிறோம். இந்த காரணத்தினால் தான், நமது திருச்சபை இன்னும் இவ்வுலகில் இருந்து கொண்டு வளர்ந்து கொண்டு இருக்கின்றது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இவ்வளவு பிரச்சினைகளிலும், ஊழல்களிலும் கிறிஸ்தவம் இன்னும் இந்த உலகத்தில் வளர்ந்து இருக்கிறதென்றால், அது கிறிஸ்துவின் ஆவியினால் தான். ஆவியின் ஆற்றலும், அதன் சக்தியினால் தான், கிறிஸ்தவம் இங்கே இருக்கின்றது.
கிறிஸ்துவின் ஆவியில்லாமல், நாம் இந்த உலகில் கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மிடம் செய்ய சொன்ன இறைபணியை செய்ய முடியாது.
தூய ஆவியானவர் பெருவிழா திருச்சபையின் பிறப்பை நமக்கு நினைவுறுத்தி மீண்டும் கொண்டு  வருகிறது, (நாம் அனைவரும் திருச்சபையின் உறுப்பினர்கள் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறது), இது  நமது சமூகம் அனைத்திற்குமான கொண்டாட்டம், ஞானஸ்நானம் மூலம் நாம் பெற்ற அனைத்திற்குமான கொண்டாட்டம் ஆகும். மேலும் உறுதி பூசுதலில் மீண்டும் நாம் பரிசுத்த ஆவியை பெறுகிறோம். ஞானஸ்நானத்தில் நாம் பெற்ற பரிசுத்த ஆவியை, உறுதி பூசுத்தலில் உறுதி படுத்த படுகிறது.
தூய ஆவி பெருவிழா, அருட்சாதனங்கள் மூலம் நாம் பெற்ற கடவுளின் ஆற்றலையும் , அவரின் இருப்பையும் மீண்டும் நினைவிற்கு  கொண்டு வருகிறது. அதன் மூலம் நாம் பாவங்களை வென்று , பரிசுத்த வாழ்வில் நாம் தொடர்ந்து வாழ முடியும் மேலும், நம்மை சுற்றியுள்ள உலகை நாம் மாற்ற முடியும் .
கடவுள் எவ்வாறு "இந்த மண்ணின் முகத்தை புதுபிப்பார் ?" நம் மூலமாக!,  முதலில் பரிசுத்த ஆவியை தந்தை கடவுள் இயேசுவிற்கு கொடுத்தார், அதன் மூலம் இயேசு இந்த உலகில் அவரின் பணியை செய்தார், பிறகு, இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார். அதன் மூலம் நாம் பரிசுத்தமாக வளர்ந்து, இயேசு செய்த புதுபித்தல் பணியை தொடர்ந்து செய்வோம்.
ஏதாவது இறைபணி செய்ய உங்களுக்கு போதுமான தகுதி இல்லை என்று நினைத்தால், அது சரி தான்: ஆனால், உங்களுக்கு தான் தகுதி இல்லை, ஆனால் கடவுளின் பரிசுத்த ஆவியானவர் உங்களுள் இருந்து கொண்டு தேவையான அனைத்தும் கொடுப்பார். பரிசுத்த ஆவியின் துணை மேல் நம்பிக்கை கொண்டு முன்னேறி செல்லுங்கள்.

© 2017 by Terry A. Modica