Friday, June 2, 2017

ஜூன் 4 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 4 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
தூய ஆவியின் பெருவிழா

Acts 2:1-11
Psalm 104:1, 24, 29-31, 34
1 Corinthians 12:3b-7, 12-13
John 20:19-23
யோவான் நற்செய்தி

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று
உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
 என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்
 என்றார்.

22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

23
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா
 என்றார்.
(THANKS to www.arulvakku.com)
நமது வாழ்வையும், திருச்சபையும், மற்றும் இந்த உலகத்தையும் புதுபிப்போம்
" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்." என்று இன்றைய பதிலுரை பாடலாக நாம் பாடுகிறோம். இந்த காரணத்தினால் தான், நமது திருச்சபை இன்னும் இவ்வுலகில் இருந்து கொண்டு வளர்ந்து கொண்டு இருக்கின்றது. நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இவ்வளவு பிரச்சினைகளிலும், ஊழல்களிலும் கிறிஸ்தவம் இன்னும் இந்த உலகத்தில் வளர்ந்து இருக்கிறதென்றால், அது கிறிஸ்துவின் ஆவியினால் தான். ஆவியின் ஆற்றலும், அதன் சக்தியினால் தான், கிறிஸ்தவம் இங்கே இருக்கின்றது.
கிறிஸ்துவின் ஆவியில்லாமல், நாம் இந்த உலகில் கிறிஸ்துவாக இருக்க முடியாது. தந்தை கடவுள் நம்மிடம் செய்ய சொன்ன இறைபணியை செய்ய முடியாது.
தூய ஆவியானவர் பெருவிழா திருச்சபையின் பிறப்பை நமக்கு நினைவுறுத்தி மீண்டும் கொண்டு  வருகிறது, (நாம் அனைவரும் திருச்சபையின் உறுப்பினர்கள் என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறது), இது  நமது சமூகம் அனைத்திற்குமான கொண்டாட்டம், ஞானஸ்நானம் மூலம் நாம் பெற்ற அனைத்திற்குமான கொண்டாட்டம் ஆகும். மேலும் உறுதி பூசுதலில் மீண்டும் நாம் பரிசுத்த ஆவியை பெறுகிறோம். ஞானஸ்நானத்தில் நாம் பெற்ற பரிசுத்த ஆவியை, உறுதி பூசுத்தலில் உறுதி படுத்த படுகிறது.
தூய ஆவி பெருவிழா, அருட்சாதனங்கள் மூலம் நாம் பெற்ற கடவுளின் ஆற்றலையும் , அவரின் இருப்பையும் மீண்டும் நினைவிற்கு  கொண்டு வருகிறது. அதன் மூலம் நாம் பாவங்களை வென்று , பரிசுத்த வாழ்வில் நாம் தொடர்ந்து வாழ முடியும் மேலும், நம்மை சுற்றியுள்ள உலகை நாம் மாற்ற முடியும் .
கடவுள் எவ்வாறு "இந்த மண்ணின் முகத்தை புதுபிப்பார் ?" நம் மூலமாக!,  முதலில் பரிசுத்த ஆவியை தந்தை கடவுள் இயேசுவிற்கு கொடுத்தார், அதன் மூலம் இயேசு இந்த உலகில் அவரின் பணியை செய்தார், பிறகு, இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தார். அதன் மூலம் நாம் பரிசுத்தமாக வளர்ந்து, இயேசு செய்த புதுபித்தல் பணியை தொடர்ந்து செய்வோம்.
ஏதாவது இறைபணி செய்ய உங்களுக்கு போதுமான தகுதி இல்லை என்று நினைத்தால், அது சரி தான்: ஆனால், உங்களுக்கு தான் தகுதி இல்லை, ஆனால் கடவுளின் பரிசுத்த ஆவியானவர் உங்களுள் இருந்து கொண்டு தேவையான அனைத்தும் கொடுப்பார். பரிசுத்த ஆவியின் துணை மேல் நம்பிக்கை கொண்டு முன்னேறி செல்லுங்கள்.

© 2017 by Terry A. Modica

No comments: