Saturday, June 9, 2007

மறையுரை: ஜூன் 10

June 10, 2007
Solemnity of the Most Holy Body and Blood of Christ

Sunday's Readings:
Gen 14:18-20
Ps 110:1-4
1 Cor 11:23-26
Luke 9:11b-17


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 9

11 அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12 பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர். 13 இயேசு அவர்களிடம், ' நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார். அவர்கள், ' எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும் ' என்றார்கள். 14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, ' இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள் ' என்றார். 15 அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

(http://www.arulvaakku.com)

மறையுரை: ஜூன் 10

அன்பு என்பது ஐந்து அப்பங்களும், இரண்டு மீண்களை போன்றது, ஏனெனில் அதனை கொடுக்கும்போதுதான், பல மடங்காக பெருகும். இந்த செய்தியை தான், கலிலேய கடற்கரையின் வட மூலையில் உள்ள புனித கோவிலில் எழுதி வைத்துள்ளனர். அந்த இடத்தில் தான் யேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் பல மடங்காக்கி, அங்கு வந்த கூட்டத்திற்கு எல்லாம் உணவளித்தார். இந்த புனித கோவிலில் கி.மு. 480 ஆம் ஆண்டிலிருந்து, பீடத்தில் மொசைக் கல்லால் ஆன அப்பதுண்டுகளும், மீன்களும் வைக்கப்பட்டுள்ளது. இது எங்கே யேசு அந்த அப்பங்களை ஆசிர்வத்த்து பல மடங்காக பெருகச் செய்தாரோ அந்த இடத்திற்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மொசைக்கில் ஐந்திற்கு பதிலாக, 4 அப்பத்துண்டுகள் மட்டும் தான் பொறிக்கப்பட்டுள்ளது. ஏன்?

அந்த ஐந்தாவது அப்பம்தான் புனித நற்கருனை, அதிலிருந்து தான் யேசு ஒவ்வொரு திருப்பலியிலும் நம்மிடத்தில் வருகிறார்.

புனித நற்கருணை யேசுவின் உண்மையான ப்ரசன்னத்தைவிட பெரிதானதாகும். இது கிறிஸ்துவின் உடலாகும். இது அனைத்து திருச்சபையின் சமூகமாகும். நற்கருணை, பல மடங்காக பெருகிகாட்டும் அற்புதமாகும். கடவுளிடமிருந்து, நமக்கு இல்லாதவற்றை , யேசுவின் உடலாக பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு வருகிறது. நாம் திருப்பலியில் பங்கு கொள்ளும்போது, நாம் யேசுவிடம் நம்மிடம் பற்றாகுறையாக உள்ளவற்றை கேட்டு அதனை பல மடங்காக பெருக்கி நம்மிடம் நிரப்பவேண்டும் என்று வேண்டிகொள்ளுங்கள். யேசு, நமக்கு தேவையானதை அதற்குண்டான நேரத்தில் நமக்கு தருவார் என்று நம்பவேண்டும். அது சிறிது சிறிதாக கொடுத்தாலும் அதனை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று விசுவாசம் கொள்வோமாக.

உங்களுடைய வாழ்வில் திருப்தியான் அன்பை பெற்று இருக்கிறீர்களா? என்றால், இல்லையென்று தான் பதில் வரும். கடவுளை தவிர வேறு ஒருவரால் உங்களுக்கு தேவையான் அன்பை கொடுக்கமுடியாது. நம் உறவினர், நண்பர்கள் நம்மிடம் எவ்வளவு நெருங்கி வாழ்ந்தாலும், நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும், அவர்களால், கடவுள் நமக்கு தரும் அன்பை கொடுக்க முடியாது. நற்கருணைதான், நமக்கு இந்த பூமியில் கடவுளின் முழு அன்போடு நேரடியாக இனைப்பது. அந்த முழுமையான அன்பை நாம் உணராததற்கு , நாம் அந்த நற்கருணையின் முழு அர்த்தத்தையும் புரிந்து கொள்ளவில்லை. நற்கருணை என்பது மற்றவர்களுக்காக செய்த தியாகத்தின் அன்பு ஆகும். நீ தேவையான அன்பை பெறவில்லையெனில், அதனை கொடு, அது பல மடங்காக பெருகி மற்றவர்களுக்கு நற்கருணையாக இருங்கள்.


சுய பரிசோதனைக்கான கேள்வி:

கடவுளின் அன்பு உங்களுடைய வெற்றிடத்தில் உள்ள இடைவெளியில் நிரப்புகிறதா? உன்னுடைய தேவைகளை நற்கருணையிடம் எடுத்து செல். நமக்கு தேவையானதை விட, அடுத்தவர்களுக்கு கொடுக்க உதவிட பரிசுத்த ஆவியிடம் கேளுங்கள். கிறிஸ்துவிடம் அதனை பல மடங்காக பெருக்க செய்ய வேண்டுங்கள். அதன் மூலம் உங்களுக்கு தேவையானதை பெறுவீர்கள்.

(http://www.gnm.org)

No comments: