Friday, June 15, 2007

June 17th

June 17th (www.arulvaakku.com)
லூக்கா நற்செய்தி
அதிகாரம் 7

36 பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 37 அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். 38 இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 39 அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, ' இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 40 இயேசு அவரைப் பார்த்து, ' சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் ' என்றார். அதற்கு அவர், ' போதகரே, சொல்லும் ' என்றார். 41 அப்பொழுது அவர், ' கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42 கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்? ' என்று கேட்டார். 43 சீமோன் மறுமொழியாக, ' அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் சொன்னது சரியே ' என்றார். 44 பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், ' இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். 45 நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். 46 நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 47 ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர் ' என்றார். 48 பின்பு அப்பெண்ணைப் பார்த்து, ' உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்றார். 49 ' பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்? ' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 50 இயேசு அப்பெண்ணை நோக்கி, ' உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க ' என்றார்.


அதிகாரம் 8
அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 2 பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 3 ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்

மறையுரை:

பாவங்கள் எப்படி மன்னிக்கபடுகிறது என்று நீ யோசுத்ததுண்டா? யேசு நம் பாவங்களை சிலுவைக்கு எடுத்து சென்றார். அந்த பாவங்கள் அவரோடு சேர்ந்து இறந்து விட்டது. இன்றைய இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடபடுவது போல, சட்டங்கள் பாவங்களை மன்னிப்பது இல்லை. நாம் அதனால் தீர்ப்பிடபடுவது இல்லை. ஆனால் நாம் ஏசுவின் மீது வைக்கும் விசுவாசத்தினால், நமது பாவங்கள் மன்னிக்கப்டுகிறது.

யேசு இதனை இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். பாவியான பெண், அவருடைய காலை தனது கண்ணீரால் துடைத்தாள். அவளுடைய மிகுதியான அன்பினால், அவளுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன. பாவங்களின் வலிமையிலிருந்து அன்பு தான் நம்மை பிரித்து செல்கிறது. நம்மில் யாராவது, அவர்கள் அன்பு செய்யப்பட வேண்டும் என்று நிணைக்கலாம், அவர்களுக்கு தெரியாமல் பாவம் செய்யலாம், ஆனால் அது மாதிரி நேரங்களில், நம் நடைமுறை அவர்களை வேதனைபடுத்துவது மாதிரி நடந்து கொள்ளலாம். ஆனால் நன்கு சிந்தித்து அவர்களுக்கு வேதனை தர வேண்டும் என்று செய்த பாவமல்ல.

நாம் நமது கண்களை யேசுவின் மீது இல்லாமல், வேறு பக்கம் பார்ப்பதால் தான், நாம் பாவம் செய்கிறோம். நாம் நம்முடைய முற்காலத்திலும், இக்காலத்திலும் நமக்கு ஏற்பட்ட, நம்மில் உள்ள தூண்டுதலால் தான், நாம் பாவம் செய்கிறோம். அன்பில்லாமல் நடந்து கொள்கிறோம். ஆனால், அதனை கொஞ்சம் நிறுத்தி, இறைவனிடம் வேண்டி, யேசுவோடு மீண்டும் சேர்ந்து, நாம் சுய கட்டுபாடுடன் இருந்தால், அன்பினால் ஆட்பட்டு நாம் வாழலாம். நாம் அன்புதான் நமக்கு முதல் சாய்ஸ் என்று உறுதியோடு வாழ்ந்தால், அதன் மேலும் தொடர்ந்து இறைவனிடம் வேண்டிகொண்டிருந்தால், நமக்கு உள்ள சோதனைகள், நம்மை விட்டு அகலும். மற்றவர்களுக்கு நாம் அக்கறை செலுத்தினால், நமக்கு உள்ள சோதனைகள், பாவம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் நம்மை விட்டு செல்லும்.

நாம் உண்மையாக அன்பு செய்தால், உண்மையான அக்கறை செலுத்தினால், அதன் பிறகு நம் பாவங்களால் மற்றவர்களை வேதனைபடுத்திவிட்டொம் என்று நாமே புரிந்து கொள்வோம்.
அன்பினால், நாம் பாவங்களால் செய்த சேதங்களை நிவர்த்தி செய்கிறோம். மேலும் மற்றவர்களின் மேல் உள்ள அன்பினால், நமது பாவங்களுக்காக நாம் வருத்தபடுகிறோம். அதன் மூலம், நாம் குணப்படுத்தபடுகிறோம். நமது பாவங்கள் மன்னிக்கபடுகின்றன. மற்றும், வரும் காலத்தில், தவறான பாதையில் செல்லமாட்டோம். யேசு அன்பு செய்வது போல, நாமும் மற்றவர்களை அன்பு செய்தால், நமது விசுவாசம், நம்மை மீட்கும். இன்றைய நற்செய்தியில் யேசு சொல்வது போல் "இப்போது நீ அமைதியாக செல்"

சுய பரிசோதனைக்கான் கேள்வி:

மிக சமீபத்தில், தவறான நோக்கத்தில் அல்லது அன்பு மறுத்து உனக்கு நடந்த விசயங்களை நினைத்து பார். நீ எப்படி நடந்து கொண்டாய். மிகவும் மோசமாய்? அதனுடைய உள் காரணம் என்ன? எடுத்துகாட்டாக: யாராவது உன்னை வேதனைபடுத்தினால், அவர்கள மன்னித்துவிடு. பயப்படுகிறாயா? கடவுளை நம்பு, தேவையானால், குருவானவரிடம் பேசி உனது பாவங்களூக்காக அதன் மூலத்தை கண்டுபிடியுங்கல். அதிலிருந்து கிடைக்கும் உண்மை உங்கள் அன்பை யேசுவின் அன்பு போல் ஆக்கும்.

(http://www.gnm.org)

No comments: